இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் Mail செயலியில் வரும் மின்னஞ்சல்களைத் தானாக வகைப்படுத்துதல்

மின்னஞ்சல்களை நீங்கள் விரைவாகக் கண்டறியவும் நிர்வகிக்கவும் உதவும் வகையில், Mail செயலி தானாகவே உங்கள் மின்னஞ்சல் மெசேஜ்களை அவற்றின் வகைப்படி பிரிக்கும் (சில நாடுகளிலும் வட்டாரங்களிலும் இது கிடைப்பதில்லை).

  •  முதன்மை: தனிப்பட்ட மெசேஜ்களையும், நேரவரம்பிற்குட்பட்ட தகவல்களையும் கண்டறியலாம்.

  •  பரிவர்த்தனைகள்: உறுதிப்படுத்தல்கள், ரசீதுகள், டெலிவரி அறிவிப்புகள் ஆகியவற்றைக் கண்காணிக்கலாம்.

  •  அறிவிப்புகள்: செய்திகள், செய்திமடல்கள் மற்றும் சமூக ஊடகத் தகவல்களைப் பார்க்கலாம்.

  •  விளம்பரங்கள்: கூப்பன் மற்றும் விற்பனை மின்னஞ்சல்களைப் பார்க்கலாம்.

குறிப்பு: பரிவர்த்தனைகள், அறிவிப்புகள், விளம்பரங்கள் ஆகிய வகைகளில் உள்ள மின்னஞ்சல்களில் நேரவரையறைக்குட்பட்ட தகவல்கள் இருந்தால், அந்த மின்னஞ்சல்கள் “முதன்மை” வகையிலும் காட்டப்படும்.

பரிவர்த்தனைகள், அறிவிப்புகள் அல்லது விளம்பரங்கள் வகையில் உள்ள ஒரு அனுப்புநரின் அனைத்து மின்னஞ்சல்களையும் பார்த்தல்

பரிவர்த்தனைகள், அறிவிப்புகள் அல்லது விளம்பரங்கள் வகையில் ஒரு மின்னஞ்சலைத் தட்டினால், அந்த அனுப்புநரிடமிருந்து வந்த அனைத்து மின்னஞ்சல்களும் டைஜஸ்ட் காட்சியில் திறந்து காட்டப்படும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு பரிவர்த்தனை மின்னஞ்சலைத் திறந்தால், மேலும் கீழும் ஸ்க்ரால் செய்யும்போது அந்த அனுப்புநரிடமிருந்து வந்த பிற பரிவர்த்தனை மின்னஞ்சல்கள் அனைத்தும் காட்டப்படும்.

குறிப்பு: டைஜஸ்ட் காட்சியில் காட்டப்படும் ஓர் அனுப்புநரின் அனைத்து மின்னஞ்சல்கள் மீதும் நீங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. பரிவர்த்தனைகள் , அறிவிப்புகள் அல்லது விளம்பரங்கள் வகையில் ஏதேனும் ஒரு மின்னஞ்சலைத் தட்டவும்.

    அந்த வகையைச் சேர்ந்த, அந்த அனுப்புநரிடமிருந்து வந்த அனைத்து மின்னஞ்சல்களும் பட்டியல் வடிவில் காட்டப்படும்.

  3. ஓர் அனுப்புநரிடமிருந்து வந்த அனைத்து மின்னஞ்சல்களையும் பார்க்க, அனுப்புநரின் மின்னஞ்சல் பட்டியலில் மேற்புறத்தில் உள்ள “ஆ‌‌‌க்‌ஷன் மெனு” பட்டன்-ஐத் தட்டி, "அனைத்து மின்னஞ்சல்களையும் காட்டு" என்பதைத் தேர்வுசெய்யவும்.

குறிப்பு: முதன்மை மின்னஞ்சல்கள் அனுப்புநர் வாரியாகக் குழுவாக்கப்படுவதில்லை.

ஸ்க்ரால் செய்யும்போது பரிவர்த்தனைகள், அறிவிப்புகள் அல்லது விளம்பரங்கள் வகையில் ஒரு மின்னஞ்சலை மட்டும் காட்ட, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, "அனுப்புநரின்படி குழுவாக்கு" என்பதைத் தேர்வுநீக்கவும்.

அனுப்புநரின் வகையை மாற்றுதல்

ஓர் அனுப்புநரிடமிருந்து வந்த மின்னஞ்சல்களை நீங்கள் தேர்வுசெய்யும் வகையில் நேரடியாகச் சேர்த்து வகைப்படுத்தலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • அனுப்புநரின் முதன்மை மின்னஞ்சல்களை மறுவகைப்படுத்துதல்: முதன்மை மெசேஜைத் தட்டி, “கூடுதல் செயல்கள்” பட்டன்-ஐத் தட்டி, "அனுப்புநரை வகைப்படுத்து" என்பதைத் தேர்வுசெய்யவும்.

    • ஓர் அனுப்புநரின் பரிவர்த்தனைகள், அறிவிப்புகள் அல்லது விளம்பரங்கள் மின்னஞ்சல்களை மறுவகைப்படுத்துதல்: பரிவர்த்தனைகள் , அறிவிப்புகள் அல்லது விளம்பரங்கள் வகையில் ஏதேனும் ஒரு மின்னஞ்சலைத் தட்டவும். மின்னஞ்சல் பட்டியலின் மேற்புறத்தில் உள்ள “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, "அனுப்புநரை வகைப்படுத்து" என்பதைத் தேர்வுசெய்யவும்.

  3. ஒரு வகையைத் தேர்ந்தெடுத்து, “தொடர்க” என்பதைத் தட்டவும்.

    அனுப்புநர் தற்போது அனுப்பிய மற்றும் இனி அனுப்பும் அனைத்து மின்னஞ்சல்களும் நீங்கள் தேர்வுசெய்த வகையில் காட்டப்படும்.

பிரிவுகளை ஆஃப் செய்தல்

உதவிக்குறிப்பு: அனைத்து மின்னஞ்சல்களையும் இன்பாக்ஸில் விரைவாகப் பார்க்கலாம். “அனைத்து Mail” பக்கத்தைத் திறக்க இன்பாக்ஸின் மேற்புறத்தில் உள்ள வகைகளில் இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. இன்பாக்ஸில், திரையின் மேற்புறத்தில் உள்ள “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, "பட்டியல் காட்சி" என்பதைத் தேர்வுசெய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.