இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் iOSஐப் புதுப்பித்தல்

iOSஇன் சமீபத்திய பதிப்பிற்கு நீங்கள் புதுப்பிக்கும்போது, உங்கள் தரவுகளும் அமைப்புகளும் மாறாமல் இருக்கும். நீங்கள் iOSஐப் புதுப்பிக்காமல், உங்கள் iPhoneஇன் அம்சங்களை மேம்படுத்தும் சிஸ்டம் கோப்புப் புதுப்பிப்புகளைத் தானாக நிறுவலாம்.

புதுப்பிப்பதற்கு முன், தானாக பேக்-அப் செய்யப்படும் வகையில் அமைக்கவும் அல்லது நீங்களாகவே சாதனத்தை பேக்-அப் செய்யவும்.

iPhoneஐத் தானாகப் புதுப்பித்தல்

உங்கள் iPhoneஐ முதலில் அமைத்தபோது தானியங்குப் புதுப்பிப்புகளை ஆன் செய்யவில்லை எனில் பின்வருவனவற்றைச் செய்யவும்:

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “பொது அமைப்புகள்” என்பதைத் தட்டி, “மென்பொருள் புதுப்பிப்பு” என்பதைத் தட்டி, பின்னர் “தானியங்குப் புதுப்பிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றை ஆன் செய்யவும்:

    • தானாக நிறுவுதல்: புதுப்பிப்பு கிடைக்கும் பட்சத்தில், இரவுநேரத்தில் iPhone சார்ஜ் செய்யப்படும்போது Wi-Fi உடனும் இணைக்கப்பட்டிருந்தால் அந்நேரத்தில் அதைப் பதிவிறக்கி நிறுவும். புதுப்பிப்பு நிறுவப்படுவதற்கு முன்பு உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

    • தானாகப் பதிவிறக்குதல்: உங்கள் iPhone Wi-Fi மற்றும் பவருடன் இணைத்து, லாக் செய்திருந்தால், புதுப்பிப்பு தானாகப் பதிவிறக்கப்படும், அதை நீங்கள் பின்னர் நிறுவலாம். இந்த விருப்பத்தைப் பார்க்க, முதலில் “தானாக நிறுவு” அம்சத்தை ஆஃப் செய்யவும்.

iPhoneஐ நீங்களாகவே புதுப்பித்தல்

எப்போது வேண்டுமானாலும் மென்பொருள் புதுப்பிப்புகளைத் தேடி நிறுவலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “பொது அமைப்புகள்” என்பதைத் தட்டி, “மென்பொருள் புதுப்பிப்பு” என்பதைத் தட்டவும்.

    தற்போது நிறுவப்பட்டுள்ள iOS பதிப்பும், புதுப்பிப்பு உள்ளதா என்ற தகவலும் காட்டப்படும்.

  3. புதுப்பிப்பு கிடைத்தால், “பதிவிறக்கம் செய்து நிறுவு” என்பதைத் தட்டி, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி புதுப்பித்தல்

  1. iPhone மற்றும் உங்கள் கம்ப்யூட்டரை கேபிள் மூலம் இணைக்கவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • Macஇல் (macOS 10.15 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைக் கொண்டது): Finder சைடுபாரில் உங்கள் iPhoneஐத் தேர்ந்தெடுத்து சாளரத்தின் மேற்புறத்தில் உள்ள “பொது அமைப்புகள்” என்பதை கிளிக் செய்யவும்.

    • Mac (macOS 10.14 அல்லது அதற்கு முந்தைய பதிப்பைக் கொண்டது) அல்லது Windows சாதனத்தில்: iTunes செயலியைத் திறந்து iTunes சாளரத்தின் மேல் இடதுபுறத்திற்கு அருகில் உள்ள iPhone போன்ற பட்டனை கிளிக் செய்து “சுருக்கவிவரம்” என்பதை கிளிக் செய்யவும்.

      குறிப்பு: iTunesஇன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துதல். iTunesஇன் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்தல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

  3. “புதுப்பிப்புகளைத் தேடு” என்பதை கிளிக் செய்யவும்.

  4. கிடைக்கக்கூடிய புதுப்பிப்பை நிறுவ, “புதுப்பி” என்பதை கிளிக் செய்யவும்.

சிஸ்டம் கோப்புகளை மட்டும் தானாகப் புதுப்பித்தல்

iOSஐப் புதுப்பிக்காமல், iPhone அம்சங்களை மேம்படுத்தும் சிஸ்டம் கோப்புப் புதுப்பிப்புகளை iPhone தானாகவே பதிவிறக்கி நிறுவும்.

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “பொது அமைப்புகள்” என்பதைத் தட்டி, “மென்பொருள் புதுப்பிப்பு” என்பதைத் தட்டி, பின்னர் “தானியங்குப் புதுப்பிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. iOS புதுப்பிப்புகள் என்பதற்குக் கீழே “தானாக நிறுவு” என்பதை ஆஃப் செய்யவும்.

  4. சிஸ்டம் கோப்புகளுக்குக் கீழே “தானாக நிறுவு” என்பதை ஆன் செய்யவும்.

iOS 26ஐப் பதிவிறக்குவது எப்படி மற்றும் உங்கள் iPhone, iPad அல்லது iPod touchஐப் புதுப்பிக்கவோ மீட்டெடுக்கவோ முடியவில்லை என்றால் என்ன செய்வது என்ற Apple உதவிக் கட்டுரைகளைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.