இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருத்தல்

iPhone உங்களுக்கு முக்கியமானவர்களைத் தொடர்புகொள்வதை எளிதாக்கும் என்பதால் நீங்கள் தொலைபேசி அல்லது வீடியோ அழைப்புகளில் அவர்களைத் தொடர்புகொள்ளலாம், மேலும் உங்கள் நண்பர்கள் குழுவிற்கு விரைவாக மெசேஜ் அனுப்பலாம்.

“தொடர்புகள்” செயலியில் உள்ள தொடர்பு கார்டு.

ஒரு ஸ்மார்ட்டான முகவரிப் புத்தகம்

தொடர்புகள் செயலியில் ஃபோன் எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், பிறந்த நாள் ஆகியவற்றை ஒரு முறைச் சேர்த்தால் போதும், மெசேஜஸ் செயலி முதல் FaceTime, Mail ஆகிய செயலிகள் வரை உங்களுக்குத் தேவைப்படும் இடங்களில் எல்லாம் அவை கிடைக்கும்.

நீங்கள் Google அல்லது Yahoo போன்ற மற்றொரு கணக்கிலிருந்தும் தொடர்புத் தகவலைச் சேர்க்கலாம். அமைப்புகள்  > செயலிகள் > தொடர்புகள் > தொடர்புகள் கணக்குகள் என்பதற்குச் சென்று, “கணக்கைச் சேர்” என்பதைத் தட்டவும்.

தொடர்புகள் செயலியில் காட்டப்படும் “பிடித்தவை” திரை; ஆறு தொடர்புகள் “பிடித்தைவையாக” பட்டியலிடப்பட்டுள்ளன.

உங்களுக்குப் பிடித்தவற்றைக் கண்டறிதல்

நீங்கள் அடிக்கடி பேசும் நபர்களை எளிதில் அணுகக்கூடிய வகையில், அவர்களை ஃபோன் செயலியில் உங்கள் “பிடித்தவை” பட்டியலில் சேர்க்கலாம். ஒருங்கிணைந்த காட்சியில், திரையின் மேற்புறத்தில் உள்ள கிரிட்டில் உங்களுக்குப் பிடித்தவை காட்டப்படும். கிளாசிக் காட்சியில், உங்களுக்குப் பிடித்தவற்றை ஒரு பட்டியலாகப் பார்க்க திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “பிடித்தவை” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: ஒருங்கிணைந்த மற்றும் கிளாசிக் காட்சிகளுக்கு இடையே மாற “ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டவும்.

ஃபோன் செயலியில் “தொடர்புகள்” என்பதைத் தட்டி ஒரு தொடர்பைத் தேர்ந்தெடுத்து, “பிடித்தவையில் சேர்” என்பதைத் தட்டவும்.

டைனமிக் பின்னணியுடன் கூடிய மெசேஜஸ் உரையாடல் காட்டப்பட்டுள்ளது.

குழு உரையாடலைத் தொடங்குதல்

குறிப்பிட்ட நபர்களிடம் (குடும்ப உறுப்பினர்கள் போன்று) ஒன்றாகப் பேச, அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் மெசேஜ் அனுப்பலாம்.

மெசேஜஸ் செயலியில், “எழுதுக” பட்டன்-ஐத் தட்டி, நீங்கள் உரையாடலைத் தொடங்க விரும்பும் தொடர்புகளை உள்ளிட்டு, முதல் மெசேஜை அனுப்பவும்.

குழு உரையாடல்களில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அனுப்பலாம், Apple Cash மூலம் பேமெண்ட் செய்யலாம், அடுத்த குடும்பச் சுற்றுலாவுக்கு எங்கு செல்வது, இரவு உணவிற்கு என்ன செய்வது போன்ற விஷயங்கள் குறித்து முடிவெடுக்க கருத்துக்கணிப்பை உருவாக்கலாம்.

iPhoneஇல் FaceTime அழைப்பு காட்டப்பட்டுள்ளது.

வீடியோ அழைப்பைச் செய்தல்

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வீடியோ அழைப்புகளைச் செய்ய FaceTimeஐப் பயன்படுத்தலாம்.

FaceTime செயலியில், “புதிய அழைப்பு” என்பதைத் தட்டி, நீங்கள் அழைக்க விரும்பும் தொடர்பைத் தேர்ந்தெடுத்து FaceTime என்பதைத் தட்டவும்.

ஐந்து பங்கேற்பாளர்களைக் கொண்ட குழு FaceTime அழைப்பு. ஒவ்வொரு பங்கேற்பாளரும் தனித்தனி டைலில் காட்டப்பட்டுள்ளனர். FaceTime கட்டுப்பாடுகள் திரையின் கீழ் வலதுபுறத்தில் உள்ளன.

FaceTime அழைப்பில் நபர்களைச் சேர்த்தல்

FaceTime அழைப்பில் அதிக நபர்களைச் சேர்க்கலாம், நண்பர்களும் குடும்பத்தினரும் எப்போது வேண்டுமானாலும் இணையலாம். கட்டுப்பாடுகளைக் காட்ட திரையைத் தட்டி,“மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “நபர்களைச் சேர்” என்பதைத் தட்டவும்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

அனைத்து அம்சங்களும் எல்லா நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைக்காது.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.