iPhoneஇல் உள்ள ஃபிட்னஸ் செயலியில் ஓர் உடற்பயிற்சியைப் பதிவுசெய்தல்

iPhoneஇல், நீங்கள் முன்பு முடித்த உடற்பயிற்சிகளைப் பதிவுசெய்யலாம். நிறைவடைந்த உடற்பயிற்சிகளையும் நீங்கள் நீக்கலாம்.

முடிவடைந்த உடற்பயிற்சியைப் பதிவு செய்தல்

iOS 26.1 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில், நீங்கள் முன்பு நிறைவு செய்த உடற்பயிற்சிகளைப் பதிவு செய்யலாம். தூரம், உடற்பயிற்சி நேரம், செலவிடப்பட வேண்டிய தோராயமான கலோரிகள் போன்ற அளவீடுகளை நீங்கள் சேர்க்கலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபிட்னஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “உடற்பயிற்சி” என்பதைத் தட்டி, “கம்போஸ் செய்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “தேர்ந்தெடு” என்பதைத் தட்டி, ஸ்க்ரால் செய்து ஓர் உடற்பயிற்சி வகைக்குச் சென்று, உங்கள் உடற்பயிற்சியின் விவரங்களைத் திருத்த பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • உடற்பயிற்சியின் நேரஅளவைத் தேர்வுசெய்தல்: “நேரஅளவு” என்பதை அடுத்திருக்கும் நேரத்தைத் தட்டவும்

    • தொடக்கத் தேதி மற்றும் நேரத்தைத் தேர்வுசெய்தல்: “தொடக்கம்” என்பதை அடுத்திருக்கும் தேதி மற்றும் நேரத்தைத் தட்டவும்.

    • செலவழிக்கப்படும் கலோரிகளின் மதிப்பீட்டை உள்ளிடுதல்: “செலவிட்ட கலோரிகள்” என்பதைத் தட்டி ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

    • உங்கள் முயற்சியை மதிப்பிடுதல் (Apple Watch தேவை): “முயற்சி” என்பதைத் தட்டி, ஓர் எண்ணிற்கு ஸ்லைடரை நகர்த்தி, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

      டிரெய்னிங் லோடு அளவீட்டைப் பற்றி மேலும் அறிய, Apple Watch பயனர் வழிகாட்டியில் உங்கள் டிரெய்னிங் லோடைக் கண்காணித்தல் என்பதைப் பார்க்கவும்.

  4. நிறைவுசெய்த பிறகு, “தேர்ந்தெடுக்கப்பட்டது” பட்டன்-ஐத் தட்டவும்.

உடற்பயிற்சித் தரவுகள் உங்கள் செயல்பாட்டுச் சுருக்கத்திலுள்ள அமர்வுகள் கார்டில் சேர்க்கப்படும்.

உடற்பயிற்சியை நீக்குதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபிட்னஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “சுருக்கவிவரம்” என்பதைத் தட்டி, “அமர்வுகள்” என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: உங்கள் செயல்பாட்டுச் சுருக்கவிவரத்தில் அமர்வுகள் கார்டை நீங்கள் சேர்க்க வேண்டியிருக்கலாம். உங்கள் சுருக்கவிவரத்தைப் பிரத்தியேகமாக்குதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

  3. உடற்பயிற்சியில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து “நீக்கு” என்பதைத் தட்டவும்.

  4. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • உடற்பயிற்சி மற்றும் உடல்நலத் தரவை நீக்குதல்: “உடற்பயிற்சி & தரவுகளை நீக்கு” என்பதைத் தட்டவும்.

    • உடற்பயிற்சியை நீக்குதல்: “உடற்பயிற்சியை மட்டும் நீக்கு” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.