iPhoneஇல் மெசேஜ்களில் வாக்கெடுப்பு நடத்துதல்

நீங்கள் iMessage உரையாடலில் வாக்கெடுப்பு நடத்தி, என்ன சாப்பிடுவது, என்ன படம் பார்ப்பது, எங்கு பயணம் செய்வது, எப்போது சந்திப்பது போன்ற பல வாக்கெடுப்புகளை அனுப்பி முடிவெடுக்கலாம். உரையாடலில் உள்ள அனைவராலும் விருப்பங்களை உருவாக்கவும், வாக்குகளைப் பார்க்கவும் முடியும்.

குறிப்பு: வாக்கெடுப்பைத் தொடங்குவதற்கு, பார்ப்பதற்கு அல்லது வாக்களிப்பதற்கு நீங்கள் iOS 26, iPadOS 26, macOS Tahoe, watchOS 26, visionOS 26 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் iMessageஐப் பயன்படுத்த வேண்டும். இதைப் பார்க்க முடியாதவர்கள் குழுவில் ஒரு வாக்கெடுப்பு அனுப்பப்பட்டது என்ற மெசேஜை மட்டும் பெறுவார்கள்.

வாக்கெடுப்பைத் தொடங்குதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடலில் “சேர்” பட்டன்-ஐத் தட்டி, “வாக்கெடுப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. ஒவ்வொரு வரிசையாகத் தட்டி விருப்பங்களைச் சேர்க்கவும். ஒரு வாக்கெடுப்பில் 12 விருப்பங்கள் வரை இருக்கலாம்.

  4. “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: வாக்கெடுப்புக்கான பரிந்துரைகளைப் பெற Apple Intelligence* அம்சத்தை ஆன் செய்யவும்.

வாக்கெடுப்பில் வாக்களித்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. வாக்கெடுப்புடன் கூடிய உரையாடலைத் திறக்கவும்.

  3. உங்கள் வாக்குகளைச் சேர்க்க ஒரு விருப்பத்தைத் தட்டவும். உங்கள் வாக்குகளை அகற்ற மீண்டும் தட்டவும். எந்த விருப்பத்திற்கும் வாக்களிக்காமல் இருக்கலாம் அல்லது அனைத்து விருப்பங்களுக்கும் வாக்களிக்கலாம்.

வாக்கெடுப்பில் விருப்பத்தைச் சேர்த்தல்

வாக்கெடுப்பில் பங்கேற்கும் எவரும் அதில் ஒரு விருப்பத்தைச் சேர்க்கலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. வாக்கெடுப்புடன் கூடிய உரையாடலைத் திறக்கவும்.

  3. “விருப்பத்தைச் சேர்” என்பதைத் தட்டி, மற்றொரு விருப்பத்தை உள்ளிடவும்.

  4. வாக்கெடுப்பில் விருப்பத்தைச் சேர்க்க, “அனுப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

    குறிப்பு: விருப்பங்கள் வாக்குகள் எதுவும் இல்லாமல் சேர்க்கப்படும். நீங்கள் சேர்த்த விருப்பத்திற்கு வாக்களிக்க அதைத் தட்டவும்.

வாக்கெடுப்பின் முடிவுகளைப் பார்த்தல்

மற்றவர்கள் எப்படி வாக்களித்துள்ளனர், இதுவரை யாரெல்லாம் வாக்களிக்கவில்லை என்பதை நீங்கள் பார்க்கலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. வாக்கெடுப்புடன் கூடிய உரையாடலைத் திறக்கவும்.

  3. வாக்கெடுப்பைத் தொட்டு பிடித்து, “வாக்கெடுப்பு விவரங்கள்” என்பதைத் தட்டவும்.

*Apple Intelligence அம்சம், பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.