இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் ஆற்றல் பயன்முறைகளின் மூலம் பேட்டரி ஆயுளைச் சேமித்தல்

உங்கள் தேவைகளின் அடிப்படையில் பேட்டரி ஆயுளை நீட்டிக்க “ஆற்றல் சேமிப்பு” அம்சங்களை iPhone வழங்குகிறது. உங்கள் பயன்பாட்டு முறைகளைப் பொறுத்து, iPhone அதன் செயல்திறனைத் தானாகச் சரிசெய்துகொள்ள “அடாப்ட்டிவ் பவர்” அம்சத்தைப் பயன்படுத்தவும் அல்லது உங்கள் பேட்டரி அளவு குறையும்போது ஆற்றல் பயன்பாட்டை நேரடியாகக் குறைக்க, “குறைந்த ஆற்றல் பயன்முறை” அம்சத்தை ஆன் செய்யவும்.

அடாப்டிவ் பவரை ஆன் செய்தல்

iPhone 15 Pro அல்லது அதற்குப் பிந்தைய மாடல்களில், உங்கள் பயன்பாடு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் நாட்களில் iPhone பேட்டரி ஆயுளை நீட்டிக்க “அடாப்ட்டிவ் பவர்” அம்சம் உதவும். ஆன் செய்தால், “அடாப்ட்டிவ் பவர்” அம்சம் பின்னணியில் தானாகவே செயல்படும், எனவே நீங்கள் அதை நிர்வகிக்க வேண்டியதில்லை. சமீபத்திய பயன்பாட்டு முறைகளின் அடிப்படையில் உங்களுக்குக் கூடுதல் பேட்டரியின் ஆற்றல் எப்போது தேவைப்படும் என்பதைக் கணிக்க, இது “சாதனத்தின் நுண்ணறிவு” அம்சத்தைப் பயன்படுத்தும். பிறகு உங்கள் பேட்டரி ஆயுள் நீடித்திருக்க உதவும் வகையில் செயல்திறன் மாற்றங்களைச் செய்கிறது.

குறிப்பு: iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max மற்றும் iPhone Air சாதனங்களில் அடாப்ட்டிவ் பவர் இயல்பாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும்.

செயல்படுத்தப்படும்போது, “அடாப்ட்டிவ் பவர்” அம்சம் மூலம் திரையின் பிரகாசத்தைக் குறைக்கலாம், பின்னணிச் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தலாம், ஆற்றலை மிச்சப்படுத்த செயல்திறனில் மாறுதல்களைச் செய்து ஆற்றலை நாள் முழுவதும் சேமிக்கலாம். உங்கள் பேட்டரி 20% அளவை எட்டும்போது குறைந்த ஆற்றல் பயன்முறையையும் இதனால் தானாக ஆன் செய்ய முடியும்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “பேட்டரி” என்பதைத் தட்டி, “ஆற்றல் பயன்முறை” என்பதைத் தட்டி, “அடாப்ட்டிவ் பவர்” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

பகல் நேரத்தில் “அடாப்ட்டிவ் பவர்” ஆன் செய்யப்படும்போது நீங்கள் அறிவிப்புகளைப் பெறலாம்: அமைப்புகள் செயலிக்குச் சென்று, “பேட்டரி” என்பதைத் தட்டி, “ஆற்றல் பயன்முறை” என்பதைத் தட்டி, “அடாப்டிவ் பவர் அறிவிப்புகள்” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும். நீங்கள் அறிவிப்புகளை ஆஃப் செய்தாலும், உங்கள் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க அடாப்ட்டிவ் பவர் அம்சம் உதவும்.

குறைந்த ஆற்றல் பயன்முறையை நிர்வகித்தல்

பேட்டரி சார்ஜ் குறைவாக இருக்கும்போது உங்கள் iPhone பயன்படுத்தும் ஆற்றல் அளவைக் குறைந்த ஆற்றல் பயன்முறை குறைக்கிறது. அழைப்புகளைச் செய்வது மற்றும் பெறுவது, மின்னஞ்சலையும் மெசேஜ்களையும் அனுப்புவது மற்றும் பெறுவது, இணையத்தை அணுகுவது போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கான செயல்திறனை இது மேம்படுத்துகிறது. ProMotion டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் கூடிய iPhone மாடல்களில், “குறைந்த ஆற்றல் பயன்முறை” டிஸ்ப்ளேவின் ரிஃப்ரெஷ் விகிதத்தை வினாடிக்கு 60 ஃப்ரேம்கள் என வரம்பிடும்.

குறிப்பு: குறைந்த ஆற்றல் பயன்முறையில் இருக்கும்போது iPhone சில பணிகளை மிகவும் மெதுவாகச் செய்யக்கூடும்.

“குறைந்த ஆற்றல் பயன்முறையை” ஆன் அல்லது ஆஃப் செய்ய, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • iPhone 14 அல்லது அதற்கு முந்தைய மாடல்களில்: அமைப்புகள் செயலிக்குச் சென்று “பேட்டரி” என்பதைத் தட்டவும். “குறைந்த ஆற்றல் பயன்முறை” என்பதைத் தட்டவும்.

  • iPhone 15 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்கள்: அமைப்புகள் செயலிக்குச் சென்று “பேட்டரி” என்பதைத் தட்டவும். ஆற்றல் பயன்முறை என்பதைத் தட்டி, குறைந்த ஆற்றல் பயன்முறை என்பதைத் தட்டவும்.

  • கட்டுப்பாட்டு மையத்தில்: கட்டுப்பாட்டு மையத்தில் “குறைந்த ஆற்றல் பயன்முறை” பட்டன் என்பதைச் சேர்த்து, “குறைந்த ஆற்றல் பயன்முறை” பட்டன்-ஐத் தட்டவும்.

iPhone 80% அல்லது அதற்கு மேல் சார்ஜ் ஆகும்போது “குறைந்த ஆற்றல் பயன்முறை” தானாக ஆஃப் செய்யப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.