இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தேடுதல்

“ஃபோட்டோஸ்” செயலியில் “தேடல்” பட்டன்-ஐத் தட்டும்போது, நீங்கள் தேடுவதைக் கண்டறிய உதவும் வகையில் தேதிகள், நபர்கள் மற்றும் இருப்பிடங்களின் பரிந்துரைகள் காட்டப்படும். “லைப்ரரி” அல்லது “சேகரிப்புகள்” தாவலிலோ ஒரு குறிப்பிட்ட ஆல்பம் அல்லது சேகரிப்பிலோ நீங்கள் தேடலாம்.

ஃபோட்டோஸ் செயலியில், தேடல் புலத்தில் உள்ளிடப்பட்ட உரையின் அடிப்படையில் தேடல் பரிந்துரைகள் தேடல் திரையில் காட்டப்பட்டுள்ளன.

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தேடுதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழ் வலது மூலையில் உள்ள “தேடல்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. நீங்கள் தேட விரும்புவதை தேடல் புலத்தில் உள்ளிடவும், உதாரணமாக:

  4. பரிந்துரைகளில் ஒன்றைத் தட்டவும் அல்லது “தேடல்” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. முழுமையான தேடல் முடிவுகளைப் பார்க்க மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும் அல்லது உங்கள் தேடல் வினவலை உள்ளடக்கிய சேகரிப்புகளைப் பார்க்க “சேகரிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  6. தேடலில் இருந்து வெளியேற “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: வீடியோ, போர்ட்ரெய்ட் போன்ற மீடியா வகையைத் தேடல் புலத்தில் சேர்ப்பதன் மூலம் உங்கள் தேடலைத் துல்லியமாக்கலாம்.

பகிர்ந்த லைப்ரரி பங்கேற்பாளரின்படி தேடுதல்

ஒரு iCloud பகிர்ந்த புகைப்பட லைப்ரரியில் பங்கேற்பாளராக இருந்தால், புகைப்படம் அல்லது வீடியோவை லைப்ரரியில் சேர்த்த நபரின்படி நீங்கள் தேடலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “தேடல்” பட்டன்-ஐத் தட்டி, “பகிர்ந்தவர்” என்பதை உள்ளிடவும்.

  3. பரிந்துரைக்கப்பட்ட பெயரைத் தட்டவும்.

Apple Intelligenceஐப் பயன்படுத்தித் தேடுதல்

Apple Intelligence* அம்சம் ஆன் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் கண்டறிய விரும்புவதை விவரிப்பதன் மூலம் குறிப்பிட்ட படங்களைத் தேடலாம். முக்கியத் தருணங்களுக்கான வீடியோ கிளிப்களையும் நீங்கள் தேடலாம். Apple Intelligence மூலம் குறிப்பிட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தேடுதல் என்பதைப் பார்க்கவும்.

*Apple Intelligence அம்சம், பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வேஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், டர்க்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.