இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள மேப்ஸ் செயலியில் உங்கள் வீடு, பணியிடம் அல்லது பள்ளி முகவரியை அமைத்தல்

உங்கள் வீடு, பணியிடம் அல்லது பள்ளியின் முகவரியை அமைத்து, நிகழ்நேரப் போக்குவரத்துப் புதுப்பிப்புகள், வழிகள் மற்றும் அறிவிப்புகளை ஒரே தட்டலில் அணுகலாம். இதன் மூலம் உங்கள் பயணத்தைத் திறம்பட மேற்கொள்ளலாம்.

மேப்ஸ் செயலியில் உள்ள “விவரங்கள்” திரையில் ஒரு முகவரியை அமைப்பதற்கான விருப்பங்களாக வீடு, பணியிடம், பள்ளி ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

உங்கள் வீடு, பணியிடம் அல்லது பள்ளி முகவரியை அமைத்தல்

தொடர்புகள் செயலியில் உங்கள் தொடர்பு கார்டில் உள்ள வீடு அல்லது பணியிட முகவரியிலிருந்து வேறுபட்டிருக்கக்கூடிய வீடு அல்லது பணியிட முகவரியை நீங்கள் அமைக்கலாம்.

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “இடங்கள்” என்பதற்குக் கீழே உள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டவும் (நீங்கள் இடதுபுறமாக ஸ்வைப் செய்ய வேண்டியிருக்கலாம்).

  3. தேடல் புலத்தைத் தட்டி, நீங்கள் தேடும் முகவரியை உள்ளிடவும்.

  4. முகவரியைத் தட்டி, அதை ஒரு வகையுடன் பொருத்த: எனது வீடு, எனது பணியிடம் அல்லது எனது பள்ளி.

  5. “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

குறிப்பு: “மேப்ஸ்” செயலி, எனது கார்டு ஆகியவற்றில் உள்ள தகவல்களை ஒத்திசைக்கக் கோரிய பிறகு உங்கள் வீடு, பணியிடம் அல்லது பள்ளி முகவரியை நீங்கள் மாற்றினால், தொடர்புகளில் நீங்கள் முகவரியைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும். உங்கள் வீட்டு முகவரியைச் சேர்த்தல் அல்லது திருத்துதல் கட்டுரையைப் பார்க்கவும்.

முகவரியின் இருப்பிடத்தைத் துல்லியமாக்குதல்

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “இடங்கள்” என்பதற்குக் கீழே, நீங்கள் துல்லியமாக்க விரும்பும் முகவரியைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.

  3. “விவரங்களைத் திருத்து” என்பதைத் தட்டவும்.

  4. “மேப்பில் இடத்தைத் துல்லியமாக்கு” என்பதைத் தட்டி, மேப்பை இழுக்கவும்.

  5. “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

அமைக்கப்பட்ட முகவரிக்கான விவரங்களை மாற்றுதல்

நீங்கள் அமைத்த முகவரிகள் மாறினால், அவற்றின் விவரங்களை மாற்றிக்கொள்ளலாம்.

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “இடங்கள்” என்பதற்குக் கீழே, நீங்கள் மாற்ற விரும்பும் முகவரியைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.

  3. “விவரங்களைத் திருத்து” என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • பின்னின் பெயரை மாற்ற: லேபிள் புலத்தில் புதிய பெயரை உள்ளிடவும்.

    • உங்கள் வீடு, பணியிடம், பள்ளி போன்றவற்றுக்கு ஒரு முகவரியை ஒதுக்க: “வகை” என்பதற்குக் கீழே உள்ள விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

    • பின்னின் இடத்தை மாற்ற: “மேப்பில் இடத்தைத் துல்லியமாக்கு” என்பதைத் தட்டவும்.

அமைத்த முகவரியை அகற்றுதல்

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “இடங்கள்” என்பதற்குக் கீழே, நீங்கள் அகற்ற விரும்பும் முகவரியைத் தொட்டுப் பிடித்திருக்கவும்.

  3. “பின்னை அகற்று” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.