இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் ஸ்கிரீன் டைமில் உணர்வைப் பாதிக்கக்கூடிய படங்களையும் வீடியோக்களையும் கண்டறிதல்

படங்களில் நிர்வாண உள்ளடக்கம் தென்பட்டால் அவற்றை அனுப்புவதற்கோ பெறுவதற்கோ முன்பு iPhone அதைக் கண்டறிய முடியும். மெசேஜஸ், AirDrop, தொடர்பு போஸ்டர்கள், FaceTime, ஃபோட்டோஸ் பிக்கர் மற்றும் ஃபோட்டோஸ் செயலியில் உள்ள பகிர்ந்த ஆல்பங்களில் இந்த அம்சம் கிடைக்கிறது. சில மூன்றாம் தரப்புச் செயலிகளில் நிர்வாணப் படங்களைக் கொண்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் பகிரப்படுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும்போது அவற்றைக் கண்டறியலாம்.

நிர்வாணப் படங்களைக் கொண்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அனுப்பப்படுவதாகக் கண்டறியப்பட்டால், தகவல்தொடர்புப் பாதுகாப்பு அம்சம் ஒரு எச்சரிக்கையைக் காட்டும். மேலும் பாதுகாப்பாக இருப்பதற்கான விருப்பங்களையும் பயனுள்ள ஆதாரங்களையும் அது வழங்கும். புகைப்படங்களும் வீடியோக்களும் சாதனத்திலேயே பகுப்பாய்வு செய்யப்படும். நிர்வாணப் படம் கண்டறியப்பட்டதாக Appleக்கு எந்த அறிவிப்பும் அனுப்பப்படாது. மேலும் அந்தப் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களுக்கான அணுகலும் Appleக்கு கிடையாது.

18 வயதிற்குட்பட்ட சிறாருக்காக இந்த அம்சத்தை அமைப்பது பற்றி மேலும் அறிய, சிறாரின் iPhoneஇல் தகவல்தொடர்புகளில் உணர்வைப் பாதிக்கக்கூடிய படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டறிவதற்கான அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்தல் மற்றும் உங்கள் சிறாரின் Apple சாதனத்தில் தகவல்தொடர்புப் பாதுகாப்பு குறித்த தகவல் கட்டுரைகளைப் பார்க்கவும்.

குறிப்பு: 18 வயதிற்குட்பட்ட சிறார்களைப் பொறுத்தவரை (நாடு அல்லது வட்டாரத்திற்கு ஏற்ப வயது மாறுபடும்), “தகவல்தொடர்புப் பாதுகாப்பு” அம்சம் இயல்பாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டி, “தகவல்தொடர்புப் பாதுகாப்பு” என்பதைத் தட்டி, அதை ஆன் அல்லது செய்யவும்.

    தகவல்தொடர்புப் பாதுகாப்பு அம்சம் ஆன் செய்யப்பட்டால், நிர்வாணப் படங்கள் அல்லது வீடியோக்களை iPhone கண்டறிந்து, ஒரு எச்சரிக்கையைக் காட்டும்.

    படத்தில் நிர்வாணம் இருக்கக்கூடும் என எச்சரிக்கும்.“உணர்வைப் பாதிக்கக்கூடிய உள்ளடக்கத்திற்கான எச்சரிக்கை” திரை. “நீங்கள் உறுதியாகப் பார்க்க விரும்புகிறீர்களா?” என்ற கேள்விக்குப் பதிலளிப்பதற்குத் திரையின் கீழ்ப்பகுதியில் மூன்று பட்டன்கள் உள்ளன. “ரத்துசெய்”, “உதவி பெறுவதற்கான வழிகளைக் காட்டு”, “உறுதியாக உள்ளேன்” ஆகிய பட்டன்கள் உள்ளன.

    குறிப்பு: நீங்கள் தகவல்தொடர்புப் பாதுகாப்பு அம்சத்தை ஆன் செய்தால், அது அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்புப் பக்கத்தில் “உணர்வைப் பாதிக்கக்கூடிய உள்ளடக்கத்திற்கான எச்சரிக்கை” அம்சத்தை ஆன் செய்யும். அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்புப் பக்கத்திற்குச் சென்று “உணர்வைப் பாதிக்கக்கூடிய உள்ளடக்கத்திற்கான எச்சரிக்கை” அம்சத்தை நீங்கள் தனியாகவும் ஆன் செய்து கொள்ளலாம். உணர்வைப் பாதிக்கக்கூடிய உள்ளடக்கம் குறித்த எச்சரிக்கைகளை பெறுதல் என்பதைப் பார்க்கவும்.

பகுப்பாய்வுகள் மற்றும் தரவுகளைப் பகிர்வதன் மூலம், தகவல்தொடர்புப் பாதபாப்பை மேம்படுத்த Appleக்கு நீங்கள் உதவலாம். மெசேஜ்களும் மீடியா கோப்புகளும் Apple உடன் பகிரப்படாது. இதை ஆன் செய்ய, அமைப்புகள் > ஸ்கிரீன் டைம் > தகவல்தொடர்புப் பாதுகாப்பு > தகவல்தொடர்புப் பாதுகாப்பை மேம்படுத்துதல் என்பதற்குச் செல்லவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.