இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone இல் குறிப்புகள் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்

மனதில் தோன்றுவதை விரைவாகப் பதிவுசெய்ய குறிப்புகள் செயலியைப் பயன்படுத்தலாம். நீங்கள் படங்களையும் ஸ்கெட்ச்களையும் சேர்க்கலாம், சமன்பாடுகளைத் தீர்க்கலாம், சரிபார்ப்புப் பட்டியல்களை உருவாக்கலாம் அல்லது ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம். மேலும் iCloud மூலம், நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் குறிப்புகள் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் புதுப்பித்த நிலையில் இருக்கும்.

பயணச் செலவுகளின் கணக்கீடு மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஒரு பயணத்தைத் திட்டமிடுவதற்கான குறிப்பு.

விரைவாக எழுதுதல்

“புதிய குறிப்பு” பட்டன்-ஐத் தட்டி உங்கள் உரையை உள்ளிடவும்.

ஐஸ்லாந்து வரைபடத்தின் மேல் உள்ள சாளரத்தில் இருக்கும் விரைவுக் குறிப்பு. மேப், புகைப்படம் மற்றும் வார்த்தைக்கான இணைப்பைக் கொண்ட குறிப்பு.

எங்கிருந்து வேண்டுமானாலும் விரைவான குறிப்புகளை உருவாக்குதல்

எந்தவொரு செயலி அல்லது திரையிலும் தகவல்களை விரைவாக எழுத விரைவான குறிப்புகளைப் பயன்படுத்தலாம். “பகிர்” பட்டன்-ஐத் தட்டி “புதிய விரைவுக் குறிப்பு” என்பதைத் தட்டவும். படங்கள், இணைப்புகள் மற்றும் பலவற்றைச் சேர்க்கலாம்.

ஆவணம் ஸ்கேன் செய்யப்படுவதைக் காட்டும் திரை. "படமெடு” பட்டன் கீழ் மையத்தில் உள்ளது.

கிட்டத்தட்ட எல்லா வகையான கோப்பையும் சேர்த்தல்

நீங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம், ஆடியோவைப் பதிவு செய்யலாம், புகைப்படங்களை எடுக்கலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம். “இணைப்புகள்” பட்டன்-ஐத் தட்டி ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

திரையின் அடிப்பகுதியில், வரைபடம் மற்றும் மார்க்-அப் கருவிகளைக் காட்டும் குறிப்பு.

உங்கள் மனதில் தோன்றுவதை ஸ்கெட்ச் செய்தல்

“கையெழுத்துக் கருவிகள்” பட்டன்-ஐத் தட்டி உங்கள் விரலால் வரையவும் அல்லது எழுதவும். நீங்கள் பல்வேறு மார்க்-அப் கருவிகள் மற்றும் வண்ணங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அளவுகோலைப் பயன்படுத்தி நேர் கோடுகளை வரையலாம்.

பகிர்வு விருப்பங்களைக் காட்டும் மேலடுக்கைக் கொண்ட குறிப்பு.

கூட்டுப்பணியாற்ற பிறரை அழைத்தல்

“பகிர்” பட்டன்-ஐத் தட்டி பகிர்வு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். குறிப்பை நீங்கள் பகிர்ந்துகொள்ளும் நபர்கள் அதைப் பார்க்கலாம் அல்லது மாற்றலாம்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

உங்கள் மொழி மற்றும் நாடு அல்லது வட்டாரத்தைப் பொறுத்து குறிப்புகளின் அம்சங்கள் கிடைக்கும் தன்மை மாறுபடலாம்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.