இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

“இடம் அறி” செயலியில் உங்கள் iPhoneஐச் சேர்த்தல்

தொலைந்துபோன iPhoneஐக் கண்டறிய “இடம் அறி” செயலியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, சாதனத்தை உங்கள் Apple கணக்குடன் இணைக்க வேண்டும்.

“இடம் அறி” செயலியில் உங்கள் iPhoneஐச் சேர்ப்பதன் மூலம், நீங்கள் அதைத் தவறுதலாக விட்டுச் செல்லும்போதும் அறிவிப்புகளைப் பெறலாம். நீங்கள் ஒரு சாதனத்தை விட்டுச் செல்லும்போது தெரிவிக்கும் வகையில் iPhoneஇல் “இடம் அறி” செயலியில் விழிப்பூட்டல்களை அமைத்தல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

உங்கள் iPhoneஐச் சேர்த்தல்

  1. iPhoneஇல், அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > “இடம் அறி” என்பதற்குச் செல்லவும்.

    உள்நுழையும்படி உங்களிடம் கேட்கப்பட்டால், உங்கள் Apple கணக்குத் தகவலை உள்ளிடவும். உங்களிடம் Apple கணக்கு இல்லையென்றால், “Apple கணக்கு இல்லையா அல்லது மறந்துவிட்டதா?” என்பதைத் தட்டி, காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  2. “எனது iPhoneஐக் கண்டறி” என்பதைத் தட்டி, எனது iPhoneஐக் கண்டறி அம்சத்தை ஆன் செய்யவும்.

  3. நீங்கள் பின்வருவனவற்றையும் ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்:

    • “இடம் அறி” நெட்வொர்க்: உங்கள் சாதனம் ஆஃப்லைனில் இருந்தால் (அதாவது Wi-Fi அல்லது மொபைல் டேட்டாவில் இணைக்கப்படாமல் இருந்தால்), “இடம் அறி” செயலியில் உள்ள “இடம் அறி” நெட்வொர்க் மூலம் அதைக் கண்டறியலாம்.

      ஆதரிக்கப்படும் iPhoneஇல், “இடம் அறி” நெட்வொர்க்கை ஆன் செய்தால், உங்கள் iPhone ஆஃப் செய்யப்பட்ட பின்னர் 24 மணிநேரம் வரையிலும், பவர் ரிசர்வ் பயன்முறையில் இருந்தால் 5 மணிநேரம் வரையிலும் “இடம் அறி” நெட்வொர்க்கைப் பயன்படுத்தி அதை நீங்கள் கண்டறியலாம்.

    • கடைசி இருப்பிடத்தை அனுப்பு: உங்கள் சாதனத்தின் பேட்டரி மிகக் குறைந்த அளவை அடையும்போது அதன் இருப்பிடம் தானாகவே Appleக்கு அனுப்பப்படும்.

உங்கள் iPhoneஇல் “ஆக்டிவேஷன் லாக்” என்ற அம்சம் உள்ளது. உங்கள் சாதனம் முழுமையாக அழிக்கப்பட்ட நிலையிலும், வேறொருவர் அதை ஆக்டிவேட் செய்து பயன்படுத்த முடியாதபடி இது தடுக்கும். iPhone மற்றும் iPadக்கான ஆக்டிவேஷன் லாக் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

மற்றொரு சாதனத்தைச் சேர்த்தல்

பின்வருவனவற்றைப் பார்க்கவும்:

உங்கள் iPhoneஐப் பயன்படுத்தி “இடம் அறி” செயலியில் AirTags மற்றும் பிறவற்றையும் நீங்கள் சேர்க்கலாம். பின்வருவனவற்றைப் பார்க்கவும்:

குடும்ப உறுப்பினரின் சாதனத்தைச் சேர்த்தல்

நீங்கள் குடும்பப் பகிர்வு அம்சத்தை அமைத்தால், உங்கள் “இடம் அறி” செயலியில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் சாதனங்களையும் பார்க்க முடியும். சாதனங்கள் பட்டியலில் உங்கள் சாதனங்களுக்குக் கீழே அவர்களுடைய சாதனங்கள் காட்டப்படும். iPhoneஇல் குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பிடங்களைப் பகிர்தல் மற்றும் அவர்களின் தொலைந்த சாதனங்களைக் கண்டறிதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

“இடம் அறி” செயலில் நண்பர்களின் சாதனங்களை உங்களால் சேர்க்க முடியாது. சாதனத்தைத் தொலைத்த நண்பர்கள் iCloud.com தளத்தில் சாதனங்களைக் கண்டறிதல் என்ற பக்கத்திற்குச் சென்று தங்களின் Apple கணக்கு மூலம் உள்நுழைந்து சாதனங்களைக் கண்டறியலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.