உங்கள் பெயரை யாரேனும் சொல்லும்போது iPhoneஐ அதைத் தெரிவிக்கச் செய்யலாம்

iPhoneஐ உங்கள் பெயர் கேட்கிறதா என்று தொடர்ந்து கவனித்து, அது அடையாளம் காணப்படும்போது உங்களுக்குத் தெரிவிக்கும்படி செய்யலாம். iPhone உங்கள் பெயரை அடையாளம் காண உதவும் வகையில் நீங்கள் அல்லது வேறொருவர் உங்கள் பெயரைப் பதிவுசெய்தும் அதை எப்படி உச்சரிக்கிறீர்கள் என்று காட்டலாம்.

குறிப்பு: “பெயர் அறிதல்” அம்சம் iOS 26 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளில் கிடைக்கிறது. “பெயர் அறிதல்" அம்சம் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது. உங்களுக்குத் தீங்கு அல்லது காயம் ஏற்படக்கூடிய சூழல்களிலோ அதிக ஆபத்து அல்லது அவசரகாலச் சூழல்களிலோ வழிசெலுத்தலுக்காகவோ உங்கள் பெயரை அடையாளம் காண iPhoneஐ நம்ப வேண்டாம்.

“பெயர் அறிதல்” அம்சம் ஓர் ஒலியைப் பெயராக அடையாளம் கண்டுள்ளதைக் குறிக்கும் ஓர் அறிவிப்பு iPhoneஇல் காட்டப்பட்டுள்ளது.

“பெயர் அறிதல்” அம்சத்தை அமைத்தல்

  1. உங்கள் iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்

  2. “அணுகல்தன்மை” என்பதைத் தட்டி, “ஒலி & பெயர் அறிதல்” என்பதைத் தட்டி, “பெயர் அறிதல்” என்பதைத் தட்டி, "பெயர் அறிதல் அம்சத்தை அமை” என்பதை ஆன் செய்யவும்.

  3. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

“பெயர் அறிதல்” அமைப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களை சேர்த்தல்

உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருந்தால், அந்தப் பெயர்கள் அனைத்தையும் iPhone அடையாளம் காண நீங்கள் உதவலாம்.

  1. உங்கள் iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்

  2. “அணுகல்தன்மை” என்பதைத் தட்டி, “ஒலி & பெயர் அறிதல்” என்பதைத் தட்டி, “பெயர் அறிதல்” என்பதைத் தட்டி, “பெயரைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  3. திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உதவிக்குறிப்பு: “பெயர் அறிதல்” அம்சத்தை விரைவாக ஆன் அல்லது ஆஃப் செய்ய, கட்டுப்பாட்டு மையத்தில் அம்சத்தைச் சேர்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.