இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளைக் கண்டறிதல் மற்றும் பார்த்தல்

“கோப்புகள்” செயலியில் உங்கள் ஆவணங்கள், படங்கள் மற்றும் பிற கோப்புகளைத் தேடிப் பார்க்கலாம்.

குறிப்பிட்ட கோப்பு அல்லது கோப்புறையைக் கண்டறிதல்

  1. உங்கள் iPhoneஇல் கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. தேடல் புலத்தில் கோப்புப்பெயர், கோப்புறைப் பெயர் அல்லது ஆவண வகையை உள்ளிடவும்.

    தேடும்போது, உங்களுக்குப் பின்வரும் விருப்பங்கள் இருக்கும்:

    • குறிப்பிட்ட பகுதியில் தேடுதல்: தேடல் புலத்திற்குக் கீழே, சமீபத்தியவை, இருப்பிடப் பெயர், குறிச்சொல் இவற்றில் ஒரு விருப்பத்தைத் தட்டவும்.

    • கீபோர்டை மறைத்து திரையில் கூடுதல் முடிவுகளைப் பார்த்தல்: தேடுக என்பதைத் தட்டவும்.

    • புதிய தேடலைத் தொடங்குதல்: தேடல் புலத்தில் உள்ள “உரையை அழி” பட்டன்-ஐத் தட்டவும்.

    • தேடல் முடிவைத் திறத்தல்: தேடல் முடிவைத் தட்டவும்.

கோப்பைத் திறப்பதற்கான செயலியைத் தேர்ந்தெடுத்தல்

ஒரு கோப்பைத் திறக்கும்போது, அதை எந்தச் செயலியில் திறக்க விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிடலாம்.

  1. உங்கள் iPhoneஇல் கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் திறக்க விரும்பும் கோப்பைத் தொட்டு பிடிக்கவும்.

  3. மெனுவில் “இதன் மூலம் திற” என்பதைத் தேர்ந்தெடுத்து, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

கோப்பைத் திறப்பதற்கான இயல்புநிலை செயலியைத் தேர்வுசெய்தல்

ஒரு கோப்பைத் திறப்பதற்கான இயல்புநிலைச் செயலியை நீங்கள் தேர்வுசெய்யலாம். அதன் பிறகு நீங்கள் அந்தக் கோப்பை எப்போது தட்டினாலும் அது அந்தச் செயலி மூலமாகவே திறக்கப்படும்.

  1. உங்கள் iPhoneஇல் கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. கோப்பைத் தொட்டுப் பிடித்து, “தகவலைக் காட்டு” என்பதைத் தேர்வுசெய்யவும்.

  3. முன்னோட்டத்திற்குக் கீழே, “எப்போதும் இதன் மூலம் திற” என்பதற்கு அடுத்துள்ள பாப்-அப் மெனுவைத் தட்டி, ஒரு செயலியைத் தேர்ந்தெடுக்கவும்.

    கோப்பைத் திறப்பதற்கான புதிய இயல்புநிலைச் செயலியைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்தக் கோப்பு அல்லது கோப்பு வகைக்கான இயல்புநிலைச் செயலியை நீங்கள் மாற்ற விரும்புவதை உறுதிசெய்வதற்கு ஓர் அறிவிப்பு காட்டப்படும்.

“விரைவுப் பார்வை” செயலியில் ஒரு கோப்பைத் திறத்தல்

ஒரு படக் கோப்பு அல்லது PDF கோப்பை “விரைவுப் பார்வை” செயலியில் முன்னோட்டமிடலாம்.

  1. உங்கள் iPhoneஇல் கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. கோப்பைத் தொட்டுப் பிடித்து, “இதன் மூலம் திற” என்பதைத் தட்டி “விரைவுப் பார்வை மூலம் முன்னோட்டம்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

கோப்புகள் மற்றும் கோப்புறைகளை உலாவுதல்

  1. உங்கள் iPhoneஇல் கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “உலாவுக” என்பதைத் தட்டி, உலாவல் திரையில் காட்டப்படும் ஆவணங்களில் ஒன்றைத் தட்டவும்.

    உலாவல் திரை காட்டப்படவில்லை எனில், “உலாவுக” என்பதை மீண்டும் தட்டவும்.

  3. சமீபத்தில் திறக்கப்பட்ட கோப்புகளைப் பார்க்க, திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “சமீபத்தியவை” என்பதைத் தட்டவும்.

  4. கோப்பு, இடம் அல்லது கோப்புறையைத் தட்டித் திறக்கவும்.

    குறிப்பு: கோப்பை உருவாக்கிய செயலியை நீங்கள் நிறுவியிருக்கவில்லை என்றால், அந்தக் கோப்பின் முன்னோட்டம் விரைவுப் பார்வையில் திறக்கப்படும்.

கோப்புறைகளைப் பிடித்தவை என்று குறித்தல் அல்லது குறிச்சொற்களைச் சேர்த்தல் பற்றிய தகவல்களுக்கு, கோப்பு அல்லது கோப்புறைக்குக் குறிச்சொல் சேர்த்தல் என்பதைப் பார்க்கவும்.

கோப்புகள் மற்றும் கோப்புறைகள் வரிசைப்படுத்தப்படும் விதத்தை மாற்றுதல்

  1. உங்கள் iPhoneஇல் கோப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. திறந்திருக்கும் இடம் அல்லது கோப்புறையில் இருந்து,“மேலும்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்: பெயர், வகை, தேதி, அளவு அல்லது குறிச்சொற்கள்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.