இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள மேப்ஸில் உங்கள் வருகைக்கான கணக்கிடப்பட்ட நேரத்தைப் பகிர்தல்

டிரைவிங், சைக்கிளிங், நடந்துசெல்லுதல் ஆகியவற்றுக்கான வழிகளை உங்கள் நண்பர்களும் குடும்பத்தினரும் கண்காணிக்கும்போது நீங்கள் வந்தடையக்கூடிய நேரத்தைத் தெரிந்துகொள்ள, உங்கள் வருகைக்கான கணக்கிடப்பட்ட நேரத்தை (ETA) நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். அதிகப்படியான தாமதங்கள் ஏற்பட்டால் அதற்கேற்ப உங்கள் ETA தானாகவே மாற்றப்படும். நீங்கள் பயணிக்கும்போது தொடர்ந்து மெசேஜ்களை அனுப்ப வேண்டியதில்லை.

குறிப்பு: அனைத்து அம்சங்களும் எல்லா நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைக்காது. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையப்பக்கத்தைப் பார்க்கவும்.

உங்கள் வருகைக்கான கணக்கிடப்பட்ட நேரத்தை (ETA) பகிர்தல்

Siri: Siriஐக் கேளுங்கள் அம்சத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற எதையேனும் சொல்லுங்கள்: “Share my ETA.” Siriஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிக.

இல்லையெனில், Siriஐப் பயன்படுத்தாமல் இதைச் செய்யலாம்:

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் செல்ல விரும்பும் இடத்தைக் கண்டறிந்து “செல்” என்பதைத் தட்டவும்.

  3. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள வழித்தட கார்டைத் தட்டிய பிறகு “ETAஐப் பகிர்” என்பதைத் தட்டவும்.

    “ETAஐப் பகிர்” என்பது காட்டப்படவில்லை என்றால், அமைப்புகள்  > செயலிகள் > மேப்ஸ் என்பதில் அம்சம் ஆன் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.

  4. பரிந்துரைக்கப்பட்ட தொடர்புகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டவற்றைத் தேர்வுசெய்யவும் அல்லது தொடர்பைக் கண்டறிய “தொடர்புகளைத் திற” என்பதைத் தட்டவும்.

  5. உங்கள் ETAஐப் பல தொடர்புகளுடன் பகிர, திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “பகிரப்படுபவர்கள்” என்பதைத் தட்டிய பிறகு, தொடர்புகளைத் திற என்பதைத் தட்டவும்.

மெசேஜஸ், இடம் அறி, தொடர்புகள் ஆகிய செயலிகளைப் பயன்படுத்தியும் உங்கள் ETAஐ நீங்கள் பிறருடன் பகிரலாம். மெசேஜஸில் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்தல், ”இடம் அறி” செயலியில் உங்கள் இருப்பிடத்தைக் கண்டறிதல் அல்லது தொடர்புகளைத் திருத்துதல் என்பதைப் பார்க்கவும்.

ETAஐப் பகிர்வதை நிறுத்துதல்

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. பயணம் குறித்த விவரத்திற்கு, வழித்தட கார்டைத் திறக்கவும்.

  3. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “பகிரப்படுபவர்கள்:” என்பதைத் தட்டி, ஒவ்வொரு தொடர்பின் பெயருக்கும் கீழே உள்ள “ETAஐப் பகிர்வதை நிறுத்து” என்பதைத் தட்டவும்.

உங்கள் ETAஐ பின் செய்ததுடன் தானாகப் பகிர்தல்

“இடங்கள்” பிரிவில் உள்ள பின் செய்யப்பட்ட இடத்தில் ஒரு தொடர்பைச் சேர்த்தால், அந்த இடத்திற்குச் செல்ல படிப்படியான வழிகளை நீங்கள் பயன்படுத்தும்போதெல்லாம் அந்தத் தொடர்பு உங்கள் ETAஐத் தானாகப் பெறுவார்.

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “இடங்கள்” என்பதைத் தட்டி “பின் செய்தவை” என்பதைத் தட்டவும். “இடங்கள்” பிரிவில் ஓர் இடத்தின் பின்னைச் சேர்த்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

  3. “தகவல்” பட்டன்-ஐத் தட்டி, “நபரைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  4. தொடர்பைக் கண்டறிந்து, அதைத் தட்டிச் சேர்க்கவும், பின்னர் “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. பின் செய்யப்பட்ட இடத்தைத் தட்டி, உங்கள் ETAஐப் பகிர “செல்” என்பதைத் தட்டவும்.

நீங்கள் வந்து சேரும்வரை உங்கள் இருப்பிடம், வழித்தடம், ETA ஆகியவைத் தொடர்ந்து காட்டப்படும்.

ETA பகிர்வை ஆஃப் செய்தல்

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி “மேப்ஸ்” என்பதைத் தட்டவும்.

  3. கீழே ஸ்க்ரால் செய்து, “ETAஐப் பகிர்” என்பதை ஆஃப் செய்யவும்.

குறிப்பு: வழக்கமான மொபைல் டேட்டா மற்றும் மெசேஜ் கட்டணங்கள் பொருந்தக்கூடும்.

iOS 13.1, iPadOS 13.1, அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பைப் பயன்படுத்துபவர்கள் ETA உடன் கூடிய மேப்ஸ் அறிவிப்பைப் பெறுவார்கள். மேலும், நீங்கள் செல்லும் வழியை அவர்கள் மேப்ஸில் கண்காணிக்கலாம். முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்துபவர்கள் iMessage மூலம் அறிவிப்பைப் பெறுவார்கள். பிற மொபைல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் SMS மெசேஜைப் பெறுவார்கள்.

நீங்கள் தேடும் நபருக்கு அருகில் நீங்கள் இருந்து, நீங்கள் இருவருமே ஆதரிக்கப்படும் மாடலை வைத்திருக்கும் பட்சத்தில், “இடம் அறி” அம்சத்தைப் பயன்படுத்தி இருப்பிடத்திற்கான துல்லியமான வழிகளை ஒருவருக்கொருவர் பெறலாம். உங்கள் நண்பரைச் சந்திக்க “துல்லியமாகக் கண்டறிதல்” அம்சத்தைப் பயன்படுத்துதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.