இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் ஸ்கிரீன் டைமுடன் தொடங்குதல்

உங்கள் சாதனங்களில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள், எந்தெந்த செயலிகள் மற்றும் இணையதளங்களைப் பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் என்பது குறித்த தகவல்களைப் பெறலாம். மேலும் பயன்பாட்டிற்கான திட்டஅட்டவணைகளையும் வரம்புகளையும் அமைக்கலாம்.

ஸ்கிரீன் டைம் மூலம் நீங்கள் செய்யக்கூடியவை குறித்த ஒரு கண்ணோட்டம் இங்கே காட்டப்பட்டுள்ளது:

நீங்கள் சிறாருக்கு ஸ்கிரீன் டைமையும் அமைக்கலாம்.

ஸ்கிரீன் டைமை ஆன் செய்தல்

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டவும்.

    உங்கள் சிறாருக்கான ஸ்கிரீன் டைமை ஆன் செய்ய விரும்பினால், உங்கள் சிறாரின் பெயரைத் தட்டவும்.

  3. “செயலி & இணையதளச் செயல்பாடுகள்” என்பதைத் தட்டி “செயலி & இணையதளச் செயல்பாடுகள்” என்பதை ஆன் செய்யவும்.

    ஸ்கிரீன் டைமை அமைப்பதற்கான திரை, தொடங்குவதற்கு “செயலி & இணையதளச் செயல்பாடு” என்பதை நீங்கள் தட்டுவதைக் காட்டுகிறது.

உங்கள் எல்லாச் சாதனங்களிலும் ஸ்கிரீன் டைமைப் பயன்படுத்துதல்

ஒரே Apple கணக்கில் உள்நுழைந்துள்ள உங்கள் iPhone, iPad, Mac சாதனங்களில் ஸ்கிரீன் டைம் அமைப்புகளையும் அறிக்கைகளையும் ஒத்திசைக்கலாம். அதாவது உங்கள் செயல்படா நேர அட்டவணைகள், வரம்புகள் மற்றும் பயன்பாட்டுத் தரவுகள் உங்கள் எல்லாச் சாதனங்களிலும் பகிரப்படும். உங்கள் சாதனங்களில் உள்ள திரை நேரச் செயல்பாடுகளின் ஒருங்கிணைந்த தகவல்களையும் பார்க்கலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டவும்.

    உங்கள் சிறாருக்கு இந்த அம்சத்தை ஆன் செய்ய விரும்பினால், உங்கள் சிறாரின் பெயரைத் தட்டவும்.

  3. “அனைத்துச் சாதனங்களிலும் பகிர்” அம்சத்தை ஆன் செய்யவும். (நீங்கள் கீழே ஸ்க்ரால் செய்ய வேண்டியிருக்கலாம்.)

“அனைத்துச் சாதனங்களிலும் பகிர்” அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, நீங்கள் அமைக்கும் எந்த ஸ்கிரீன் டைம் வரம்புகளும் அல்லது அட்டவணைகளும் உங்கள் iPhone, iPad மற்றும் Mac சாதனங்களுக்குப் பொருந்தும். "அனைத்துச் சாதனங்களிலும் பகிர்” அம்சத்தை ஆஃப் செய்தால் ஒவ்வொரு சாதனமும் அதன் சொந்த, தனித்தனி திரை நேர அமைப்புகளைப் பராமரிக்கும்.

உங்கள் திரை நேரச் சுருக்கவிவரத்தைக் காட்டுதல்

உங்கள் ஸ்கிரீன் டைமை ஆன் செய்த பிறகு, எப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்ட வகையான செயலிகளைப் பயன்படுத்தி எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள், உங்கள் iPhone மற்றும் பிற சாதனங்களை எவ்வளவு அடிக்கடி எடுக்கிறீர்கள், எந்ததெந்தச் செயலிகள் உங்களுக்கு அதிக அறிவிப்புகளை அனுப்புகிறது மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உங்கள் சாதனப் பயன்பாட்டின் அறிக்கையை நீங்கள் பார்க்கலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டவும்.

    உங்கள் சிறாருக்கான ஸ்கிரீன் டைம் சுருக்கவிவரங்களைப் பார்க்க விரும்பினால், உங்கள் சிறாரின் பெயரைத் தட்டவும்.

  3. நீங்கள் எந்தச் சாதனத்தின் பயன்பாட்டைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க “அனைத்துச் செயலி & இணையதளத்தின் செயல்பாட்டைக் காட்டு” என்பதைத் தட்டி, சாதனங்களைத் தட்டவும்.

  4. வாராந்தரப் பயன்பாட்டின் சுருக்கவிவரத்தைப் பார்க்க “வாரம்” என்பதைத் தட்டவும் அல்லது அன்றாடப் பயன்பாட்டின் சுருக்கவிவரத்தைப் பார்க்க “நாள்” என்பதைத் தட்டவும்.

    திரை நேரம் உங்கள் செயல்பாட்டைப் பொழுதுபோக்கு, படைப்பாற்றல் போன்ற வகைகளாகத் தானாகவே குழுவாக்குகிறது.

    குறிப்பு: வகைக்குள் பொருந்தாத திரை நேரச் செயல்பாடு உங்கள் திரை நேரச் சுருக்கவிவரத்தில் சாம்பல் நிறத்தில் காட்டப்படலாம்.

    உங்கள் வரலாற்றைப் பார்க்க, உங்கள் ஸ்கிரீன் டைம் சுருக்கவிவரத்தில் இடது மற்றும் வலதுபுறம் ஸ்வைப் செய்யலாம்.

    வகை மற்றும் செயலியின் அடிப்படையில் செயலிகளில் செலவிட்ட மொத்த நேர அளவு ஸ்கிரீன் டைம் வாராந்தர அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.

திரை நேரத்தை ஆஃப் செய்தல்

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டவும்.

    உங்கள் சிறாருக்கான ஸ்கிரீன் டைமை ஆஃப் செய்ய விரும்பினால், உங்கள் சிறாரின் பெயரைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • செயலி & இணையதளச் செயல்பாட்டை ஆஃப் செய்தல்: கீழே ஸ்க்ரால் செய்து, செயலி & இணையதளச் செயல்பாட்டை ஆஃப் செய் என்பதைத் தட்டவும்.

      உதவிக்குறிப்பு: ஸ்கிரீன் டைமை ஆஃப் செய்வதற்கான எளிய வழி, செயலி & இணையதளச் செயல்பாட்டை ஆஃப் செய்வதுதான். செயலி மற்றும் இணையதளச் செயல்பாட்டை ஆஃப் செய்தால், அறிக்கை, செயல்படா நேரம், செயலி வரம்புகள், எப்போதும் அனுமதித்தல் ஆகியவையும் ஆஃப் செய்யப்படும்.

    • செயல்படா நேரத்தை ஆஃப் செய்தல்: செயல்படா நேரம் என்பதைத் தட்டி, திட்டமிடப்பட்டவை என்பதை ஆஃப் செய்யவும்.

    • செயலி வரம்புகளை ஆஃப் செய்தல்: செயலி வரம்புகள் என்பதைத் தட்டி, வரம்பில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, பிறகு “நீக்கு” என்பதைத் தட்டவும்.

உங்கள் சாதனப் பயன்பாட்டை ஒரே பார்வையில் சரிபார்க்க, ஸ்கிரீன் டைம் விட்ஜெட்டைப் பயன்படுத்துதல்

உங்கள் முகப்புத் திரையில் ஸ்கிரீன் டைம் விட்ஜெட்டைச் சேர்ப்பதன் மூலம் சாதனப் பயன்பாட்டை விரைவாகச் சரிபார்க்கலாம். விட்ஜெட் உங்கள் ஸ்கிரீன் டைம் சுருக்கவிவரத்தில் இருந்து தகவல்களைக் காட்டும்-விட்ஜெட்டை எவ்வளவு அதிகமாகச் சேர்க்கிறீர்களோ, அவ்வளவு அதிகமான தகவல்களை அது காட்டும்.

நீங்கள் “குடும்பப் பகிர்வு” அம்சம் மூலம் சிறாருக்கான திரை நேரத்தை அமைத்தால், விட்ஜெட்டைத் தட்டி உங்கள் குடும்பக் குழுவில் உள்ளவர்களின் பட்டியலைப் பார்க்கலாம். யாருடைய அறிக்கையைப் பார்க்க விரும்புகிறீர்களோ அந்தச் சிறாரின் பெயரைத் தட்டவும்.

உங்கள் திரையில் தோன்றும் “ஸ்கிரீன் டைம் வாராந்தர அறிக்கை அறிவிப்பு”என்பதைத் தட்டுவதன் மூலமும் உங்கள் சுருக்கவிவரத்தைப் பார்க்கலாம். (அறிவிப்பு மறைந்துவிட்டால், நீங்கள் அறிவிப்பு மையத்தில் அதைப் பார்க்கலாம்)

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.