இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் பேசப்படும் ஆடியோவின் நேரலை கேப்ஷன்களைப் பெறுதல்

iPhoneஇல் உள்ள “நேரலை கேப்ஷன்கள்” அம்சம் மூலம், பேசப்படும் ஆடியோவின் நிகழ்நேர டிரான்ஸ்கிரிப்ஷனைப் பெறலாம். உங்களைச் சுற்றி நடக்கும் உரையாடல்களுடன் சேர்த்து FaceTime, பாட்காஸ்ட்கள் போன்ற எந்தவொரு செயலியிலும் உள்ள ஆடியோவை இன்னும் எளிதாகப் பின்தொடர, “நேரலை கேப்ஷன்கள்” அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: iPhone 11 அல்லது அதற்குப் பிந்தைய மாடல்களில் “நேரலை கேப்ஷன்கள்” கிடைக்கும். சில மொழிகள், நாடுகள் அல்லது வட்டாரங்களில் நேரலை கேப்ஷன்கள் அம்சம் கிடைப்பதில்லை. நேரலை கேப்ஷன்களின் துல்லியம் மாறுபடலாம் என்பதால் அதிக ஆபத்து உள்ள நேரங்கள் அல்லது அவசரகாலச் சூழ்நிலைகளில் அதை நம்பக்கூடாது.

நேரலை கேப்ஷன்களை அமைத்துப் பிரத்தியேகப்படுத்துதல்

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. அணுகல்தன்மை என்பதைத் தட்டி, “நேரலை கேப்ஷன்கள்” என்பதைத் தட்டவும், பின்னர் “நேரலை கேப்ஷன்கள்” என்பதை ஆன் செய்யவும்.

  3. கேப்ஷன்களின் வார்த்தை, அளவு மற்றும் நிறத்தைப் பிரத்தியேகப்படுத்த, “தோற்றம்” என்பதைத் தட்டவும்.

  4. “அழைப்பு கேப்ஷன்களைத் தொடர்ந்து வைத்திருத்தல்” என்பதைத் தட்டவும், பிறகு ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்:

    • 1 நிமிடம்: அழைப்பின்போது ஒரு நிமிடம் வரை அழைப்புகளின் கேப்ஷன்களைச் சேமிக்க “1 நிமிடம்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அழைப்பு முடிந்ததும் அனைத்து அழைப்பு கேப்ஷன்களும் அழிக்கப்படும். “1 நிமிடம்” என்பதைத் தேர்ந்தெடுத்தால், அழைப்பு டிரான்ஸ்கிரிப்ஷனை நகலெடுக்கவோ, ஸ்கிரீன்ஷாட் எடுக்கவோ, ஸ்கிரீன் ரெக்கார்டிங் எடுக்கவோ முடியாது.

    • 1 மணிநேரம்: அழைப்பு முடிந்த பிறகு ஒரு மணிநேரம் வரை அழைப்புகளிலிருந்து கேப்ஷன்களைச் சேமித்து வைத்திருக்க “1 மணிநேரம்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். “1 மணிநேரம்” என்பதைத் தேர்ந்தெடுத்தால், அழைப்பு டிரான்ஸ்கிரிப்ஷனை நகலெடுக்கவும், ஸ்கிரீன்ஷாட் எடுக்கவும், ஸ்கிரீன் ரெக்கார்டிங் எடுக்கவும் முடியும்.

    குறிப்பு: 1 மணிநேரம் என்பதைத் தேர்ந்தெடுக்கும்போது, அழைப்பின் தொடக்கத்தில் அழைப்பில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் “இந்த அழைப்பு டிரான்ஸ்கிரிப்ட் செய்யப்படுகிறது” என்ற சுருக்கமான ஆடியோ அறிவிப்பு கேட்கும். நேரடி கேப்ஷன்கள் இடைநிறுத்தப்பட்டால் அல்லது அழைப்பின்போது “அழைப்பு கேப்ஷன்களைத் தொடர்ந்து வைத்திருத்தல்” விருப்பம் 1 மணிநேரத்தில் இருந்து 1 நிமிடத்திற்கு மாற்றப்பட்டால், அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் “இந்த அழைப்பு இனி டிரான்ஸ்கிரிப்ட் செய்யப்படாது” என்ற ஆடியோ அறிவிப்பு கேட்கும்.

நேரலை கேப்ஷன்களைப் பயன்படுத்துதல்

“நேரலை கேப்ஷன்கள்” ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, செயலிகளில் பேசப்படும் ஆடியோ அல்லது உங்களைச் சுற்றி பேசப்படும் உரையாடலை iPhone தானாக டிரான்ஸ்கிரைப் செய்யும். பின்வருவனவற்றில் ஒன்றை நீங்கள் செய்யலாம்:

  • நேரடி உரையாடலை டிரான்ஸ்கிரைப் செய்தல்: “நேரலை கேப்ஷன்கள்” என்பதைத் தட்டி, “மைக்ரோஃபோன்” என்பதைத் தட்டவும்.

  • iPhone ஆடியோவை டிரான்ஸ்கிரைப் செய்தல்: “நேரலை கேப்ஷன்கள்” என்பதைத் தட்டி, “iPhone ஆடியோ” என்பதைத் தட்டவும்.

  • டிரான்ஸ்கிரிப்ஷனை இடைநிறுத்துதல்: “நேரலை கேப்ஷன்கள்” என்பதைத் தட்டி, “கேட்பதை இடைநிறுத்து” என்பதைத் தட்டவும்.

  • டிரான்ஸ்கிரிப்ஷனை நகலெடுத்தல்: “மேலும் விருப்பங்கள்” பட்டன்-ஐத் தட்டி, “கேப்ஷன்களை நகலெடு” என்பதைத் தட்டவும். குறிப்புகள், மெசேஜஸ் போன்ற மற்றொரு செயலியில் உங்கள் டிரான்ஸ்கிரிப்ஷன்களை ஒட்டலாம்.

  • டிரான்ஸ்கிரிப்ஷனை அழித்தல்: “மேலும் விருப்பங்கள்” பட்டன்-ஐத் தட்டி, “அனைத்தையும் அழி” என்பதைத் தட்டவும்.

  • “நேரலை கேப்ஷன்கள்” சாளரத்தை நகர்த்துதல்: “நேரலை கேப்ஷன்கள்” சாளரத்தின் இடத்தைத் திரையில் மாற்ற, அதை இழுக்கவும்.

  • நேரலை கேப்ஷன் சாளரத்தை மறைத்தல்: ஆடியோ எதுவும் கண்டறியப்படாதபோது “நேரலை கேப்ஷன்கள்” சாளரங்கள் தானாக மறைக்கப்படும். சாளரம் காட்டப்பட்டால், அதை மறைக்க சாளரத்தில் இடதுபுறம் அல்லது வலதுபுறம் ஸ்வைப் செய்யவும். சாளரத்தை மீட்டெடுக்க “நேரலை கேப்ஷன்கள் சுருக்கப்பட்டன” பட்டன்-ஐத் தட்டவும்.

  • டிரான்ஸ்கிரிப்ஷன் சாளரத்தை முழுத் திரையாக மாற்ற: “பெரிதாக்கு” பட்டன்-ஐத் தட்டவும். சாளரத்தின் அளவைச் சிறிதாக்க, “சிறிதாக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

  • டிரான்ஸ்கிரிப்ஷனை ஸ்கிரீன்ஷாட் அல்லது திரைப் பதிவு எடுக்கவும்: நேரலை கேப்ஷன்கள் சாளரத்தை நிலைநிறுத்தி, ஸ்கிரீன்ஷாட் எடுக்கவும் அல்லது திரைப் பதிவு எடுக்கவும்.

குறிப்பு: நேரலை கேப்ஷன்களை அமைக்கும்போது நீங்கள் “1 மணிநேரம்” என்பதைத் தேர்ந்தெடுத்திருந்தால், ஸ்கிரீன்ஷாட்கள், திரைப் பதிவுகள், டிரான்ஸ்கிரிப்ஷன்களை நகலெடுத்தல் ஆகியவை அழைப்பின்போதும் அதற்குப் பிறகும் மட்டுமே கிடைக்கும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.