இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

உங்கள் iPhone கேமராவுடன் நேரலை உரையைப் பயன்படுத்துதல்

கேமரா ஃபிரேமுகுள் தோன்றும் உரையை நகலெடுக்க, பகிர, பார்க்க, மொழிபெயர்க்க உங்கள் iPhone கேமராவைப் பயன்படுத்தவும். ஃபிரேமில் தோன்றும் எழுத்துகளின் அடிப்படையில் ஃபோன் எண்களை எளிதில் அழைப்பதற்கும், இணையதளங்களைப் பார்வையிடுவதற்கும், நாணயங்களை மாற்றுவதற்கும் மேலும் பல விரைவான செயல்களைச் செய்யும் வசதியை கேமரா வழங்குகிறது.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள கேமரா செயலியைத் திறக்கவும்.

  2. உங்கள் iPhoneஐ சரியான இடத்தில் நிலையாக வைக்கும்போது எழுத்துகள் கேமரா பிரேமுக்குள் தோன்றும்.

  3. கண்டறியப்பட்ட எழுத்துகளைச் சுற்றி மஞ்சள் நிற ஃபிரேம் தோன்றிய பிறகு, “உரையைக் கண்டறி” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. எழுத்துகளைத் தொட்டுப் பிடித்து, குறிப்பிட்ட எழுத்துகளைத் தேர்ந்தெடுத்து பின்வரும் செயல்களில் ஒன்றைச் செய்ய கிராப் புள்ளிகளைப் பயன்படுத்தவும்:

    • நகலெடுக்க: “குறிப்புகள்” அல்லது “மெசேஜஸ்” போன்ற மற்றொரு செயலியில் ஒட்ட உரையை நகலெடுக்கவும்.

    • அனைத்தையும் தேர்ந்தெடுக்க: ஃபிரேமிற்குள் உள்ள அனைத்து உரையையும் தேர்ந்தெடுக்கவும்.

    • தேடிப்பார்க்க: பிரத்தியேகமான இணையப் பரிந்துரைகளைப் பார்க்கவும்.

    • மொழிபெயர்க்க: உரையை மொழிபெயர்க்கவும்.

    • இணையத்தில் தேட: இணையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உரையைப் பார்க்கவும்.

    • பகிர: AirDrop, மெசேஜஸ், Mail அல்லது மற்ற கிடைக்கக்கூடிய விருப்பங்களைப் பயன்படுத்தி உரையைப் பகிரவும்.

      உதவிக்குறிப்பு: உள்ளடக்கத்தைப் பொறுத்து, ஃபோன் அழைப்பு, இணையதளத்திற்குச் செல்லுதல், மின்னஞ்சலை எழுதத் தொடங்குதல், நாணயங்களை மாற்றுதல் மற்றும் பலவற்றைச் செய்ய, திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள விரைவுச் செயலை நீங்கள் தட்டலாம்.

  5. கேமராவுக்குச் செல்ல, “தேர்ந்தெடுக்கப்பட்ட உரையைக் கண்டறி” பட்டன்-ஐத் தட்டவும்.

உங்கள் iPhone கேமராவில் நேரலை உரையை ஆஃப் செய்ய, அமைப்புகள்  > கேமரா என்பதற்குச் சென்று, “கண்டறியப்பட்ட உரையைக் காட்டு” என்பதை ஆஃப் செய்யவும்.

குறிப்பு: குறிப்பிட்ட சில வட்டாரங்கள் அல்லது மொழிகளில் “நேரலை உரை” அம்சம் கிடைப்பதில்லை. iOS மற்றும் iPadOS அம்சங்கள் கிடைக்கும்நிலை குறித்த இணையதளம் என்பதைப் பார்க்கவும்.

Apple Intelligence* ஆன் செய்யப்பட்டிருந்தால், கேமரா கட்டுப்பாட்டின் மூலம் விஷுவல் நுண்ணறிவைப் பயன்படுத்தி உங்களைச் சுற்றியுள்ள உரைகளில் செயல்களை மேற்கொள்ளலாம். iPhoneஇல் விஷுவல் நுண்ணறிவைப் பயன்படுத்துதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

*Apple Intelligence பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜப்பானீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.