இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள கேலண்டரில் நிகழ்வுகளைக் கண்காணித்தல்

இனிவரும் கேலண்டர் நிகழ்வுகள், அழைப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் அறிவிப்புகளை நீங்கள் பிரத்தியேகப்படுத்தலாம். உங்கள் நிகழ்வுகள் மற்றும் பிற கேலண்டர் தகவல்கள் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்யலாம்.

கேலண்டர் அறிவிப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “அறிவிப்புகள்” என்பதைத் தட்டி “கேலண்டர்” என்பதைத் தட்டவும்.

  3. “அறிவிப்புகளை அனுமதி” என்பதை ஆன் செய்யவும்.

  4. அறிவிப்புகள் எப்படி, எங்கே தோன்ற வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும் - உதாரணமாக, பூட்டுத் திரையில், அறிவிப்பு மையத்தில், திரையின் மேற்புறத்தில் உள்ள பேனர்களாக, விழிப்பூட்டல் ஒலியுடன் மற்றும் பல.

குறிப்பிட்ட கேலண்டர் நிகழ்வுகளுக்கான பிரத்தியேகப்படுத்தப்பட்ட அறிவிப்புகளை ஆன் செய்தல்

கேலண்டர் அறிவிப்புகளைப் பிரத்தியேகப்படுத்திய பிறகு, இனிவரும் நிகழ்வுகள் அல்லது அழைப்பாளர்கள் பதில்கள் போன்ற குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு அவை தோன்ற வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “அறிவிப்புகள்” என்பதைத் தட்டி “கேலண்டர்” என்பதைத் தட்டவும்.

  3. ஸ்க்ரால் செய்து “அறிவிப்புகளைப் பிரத்தியேகமாக்கு” என்பதைத் தட்டவும்.

  4. குறிப்பிட்ட பிரத்தியேகமாக்கபட்ட அறிவிப்புகளை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

உங்கள் சாதனங்களில் உங்கள் கேலண்டரை புதுப்பித்த நிலையில் வைத்திருத்தல்

நீங்கள் அதே Apple கணக்கில் உள்நுழைந்துள்ள உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் உங்கள் கேலண்டர் தகவலைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க iCloudஐப் பயன்படுத்தலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் பெயரைத் தட்டி iCloud என்பதைத் தட்டவும்.

  3. “iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை” என்பதற்கு அடுத்துள்ள “அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டவும்.

  4. iCloud கேலண்டரைத் தட்டி “இந்த iPhoneஇல் பயன்படுத்து” என்பதை ஆன் செய்யவும்.

உங்கள் கேலண்டருக்கு iCloudஐப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், உங்கள் iPhone மற்றும் உங்கள் கம்ப்யூட்டருக்கு இடையே உங்கள் கேலண்டர் தகவலை ஒத்திசைக்கலாம். உங்கள் iPhone மற்றும் பிற சாதனங்களுக்கு இடையே கோப்புகளை மாற்றுதல் கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.