iPhoneஇல் உங்கள் iCloud Mail இன்பாக்ஸைத் தானாகச் சுத்தம் செய்தல்

நீங்கள் iCloud Mail கிளீன்-அப் அம்சத்தைப் பயன்படுத்தி பழைய விளம்பரங்களை அழிப்பது, மெயிலிங் பட்டியல்களில் இருந்து குழுவிலகுவது மற்றும் பலவற்றைச் செய்வதன் மூலம் உங்கள் இன்பாக்ஸைச் சுத்தமாக வைக்கலாம். “iCloud Mail கிளீன்-அப் பரிந்துரைகள்” அம்சத்தை நீங்கள் அமைக்கும்போது, iCloud Mail ஆன் செய்யப்பட்டிருக்கும் எந்தவொரு சாதனத்திலும் அது வேலை செய்யும்.

குறிப்பு: iCloud Mail கிளீன்-அப் சில மொழிகளில் கிடைக்காமல் இருக்கலாம்.

iCloud Mail கிளீன்-அப்பை ஆன் செய்தல்

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. [உங்கள் பெயர்] என்பதைத் தட்டி, iCloud என்பதைத் தட்டவும்.

  3. “iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை” என்பதற்குக் கீழே, “Mail” என்பதைத் தட்டி, “iCloud Mail கிளீன்-அப்” என்பதைத் தட்டி, “iCloud Mail கிளீன்-அப்பைப் பயன்படுத்து” என்பதை ஆன் செய்யவும்.

    குறிப்பு: கிளீன்-அப் பரிந்துரையை நீங்கள் ஆன் செய்யும் வரை உங்கள் இன்பாக்ஸில் எந்த மாற்றமும் செய்யப்படாது.

iCloud.comஇல் iCloud Mail கிளீன்-அப் அம்சத்தையும் நீங்கள் ஆன் செய்யலாம். iCloud.comஇல் உங்கள் iCloud Mail இன்பாக்ஸைத் தானாகச் சுத்தம் செய்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

கிளீன்-அப் பரிந்துரையை ஆன் செய்தல்

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. [உங்கள் பெயர்] என்பதைத் தட்டி, iCloud என்பதைத் தட்டவும்.

  3. “iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை” என்பதற்குக் கீழே, “Mail” என்பதைத் தட்டி, “iCloud Mail கிளீன்-அப்” என்பதைத் தட்டவும்.

  4. கிளீன்-அப் பரிந்துரைகளில் ஒன்றின் கீழ் உள்ள “பரிந்துரைகளைப் பெறுக” என்பதைத் தட்டவும். உதாரணமாக, “பரிவர்த்தனைகளை கிளீன்-அப் செய்” அல்லது “விளம்பரங்களை கிளீன்-அப் செய்” என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

  5. தேவைப்பட்டால், ஒரு விதிக்கான பாப்-அப் மெனுவைத் தட்டி, பின்னர் வேறொரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

    • செயல்: மின்னஞ்சலில் என்ன மாற்றம் நிகழும் என்பதைக் காட்டும்

    • நிலை: படிக்காத மின்னஞ்சல்கள், படித்த மின்னஞ்சல்கள் அல்லது அனைத்து மின்னஞ்சல்களிலும் இந்தச் செயல் பயன்படுத்தப்படுமா இல்லையா என்பதைக் காட்டும்

    • காலம்: செயலைப் பயன்படுத்துவதற்கு முன்பு மின்னஞ்சல்களுக்கு எத்தனை காலம் ஆகியிருக்க வேண்டும்

    உதவிக்குறிப்பு: பரிந்துரைக்கான விதிகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம். ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்ய செயலில் உள்ள பரிந்துரையைத் தட்டி, பாப்-அப் மெனுவைத் தட்டவும்.

  6. “ஆன் செய்” என்பதைத் தட்டவும்.

கிளீன்-அப் பரிந்துரையை நீக்குதல்

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. [உங்கள் பெயர்] என்பதைத் தட்டி, iCloud என்பதைத் தட்டவும்.

  3. “iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை” என்பதற்குக் கீழே, “Mail” என்பதைத் தட்டி, “iCloud Mail கிளீன்-அப்” என்பதைத் தட்டவும்.

  4. செயலில் உள்ள கிளீன்-அப் பரிந்துரையைத் தட்டி, அதை ஆஃப் செய்யவும்.

சந்தா விலக iCloud Mail கிளீன்-அப் பரிந்துரைகளைப் பயன்படுத்துதல்

அறிவிப்புகள், விளம்பரங்கள் வகைப்பிரிவில் மொத்தமாகச் சந்தா விலக அனுப்புநர்களை iCloud Mail கிளீன்-அப் பரிந்துரைக்கும், எதிர்காலத்தில் அவர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களைத் தானாகவே டிராஷுக்கு நகர்த்தும்.

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. [உங்கள் பெயர்] என்பதைத் தட்டி, iCloud என்பதைத் தட்டவும்.

  3. “iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை” என்பதற்குக் கீழே, “Mail” என்பதைத் தட்டி, “iCloud Mail கிளீன்-அப்” என்பதைத் தட்டவும்.

  4. சந்தா விலகல் பரிந்துரைகளின் கீழ் “பரிந்துரைகளைப் பெறுக” என்பதைத் தட்டவும்.

  5. நீங்கள் சந்தா விலக விரும்பும் ஒவ்வொரு அனுப்புநரையும் தேர்ந்தெடுத்து, “சந்தா விலகு” என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: பரிந்துரைகள் எதுவும் காட்டப்படவில்லை என்றால், iCloud Mail கிளீன்-அப் அம்சத்தில் தற்போது எந்தப் பரிந்துரைகளும் இல்லை என்று அர்த்தம்.

சந்தா விலக்கிய பட்டியலில் இருந்து அனுப்புநரை அகற்றுதல்

சந்தா விலக்கிய அனுப்புநரிடமிருந்து மீண்டும் மின்னஞ்சல்களைப் பெற விரும்பினால், பிறகு எப்போது வேண்டுமானாலும் சந்தா விலக்கிய பட்டியலில் இருந்து அந்த அனுப்புநரைப் அகற்றிக் கொள்ளலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. [உங்கள் பெயர்] என்பதைத் தட்டி, iCloud என்பதைத் தட்டவும்.

  3. “iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை” என்பதற்குக் கீழே, “Mail” என்பதைத் தட்டி, “iCloud Mail கிளீன்-அப்” என்பதைத் தட்டவும்.

  4. “சந்தா விலகப்பட்டது” என்பதைத் தட்டி, “திருத்து” என்பதைத் தட்டவும்.

  5. “சந்தா விலகப்பட்டது” பட்டியலில் இருந்து நீங்கள் அகற்ற விரும்பும் அனுப்புநருக்கு அடுத்துள்ள “நீக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

    நீங்கள் முன்பு சந்தா விலகிய அனுப்புநரிடமிருந்து மீண்டும் மின்னஞ்சல்களை பெற, அவரது இணையதளத்தின் வழியாக அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்களுக்குப் பதிவுசெய்யலாம். நீங்கள் மீண்டும் குழுசேர்ந்த பிறகு, அந்த அனுப்புநரிடமிருந்து வரக்கூடிய எதிர்கால மெசேஜ்கள் உங்கள் இன்பாக்ஸுக்கு அனுப்பப்படும்.

iCloud Mail கிளீன்-அப்பை ஆஃப் செய்தல்

iCloud Mail கிளீன்-அப் அம்சத்தை நீங்கள் ஆஃப் செய்தால், iCloud Mail பழைய மின்னஞ்சல்களை நிர்வகிப்பதை நிறுத்தும். மேலும் ஏதேனும் அனுப்புநர்களிடம் இருந்து குழுவிலகியிருந்தாலும் அந்த அனுப்புநர்களின் பட்டியலை நீக்கி, அவர்களின் மெசேஜ்கள் நீக்கப்படுவதையும் நிறுத்தும்.

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. [உங்கள் பெயர்] என்பதைத் தட்டி, iCloud என்பதைத் தட்டவும்.

  3. “iCloudஇல் சேமிக்கப்பட்டுள்ளவை” என்பதற்குக் கீழே, “Mail” என்பதைத் தட்டி, “iCloud Mail கிளீன்-அப்” என்பதைத் தட்டி, “iCloud Mail கிளீன்-அப்பைப் பயன்படுத்து” என்பதை ஆஃப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.