இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள மேப்ஸில், இடங்களுக்கான தகவல்களைப் பெறுதல்

காட்டப்படும் இடங்களின் முகவரிகளையும் அவற்றைப் பற்றிய மற்ற தகவல்களையும் நீங்கள் பார்க்கலாம்.

இடத்திற்கான தகவல்களைப் பெறுதல்

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. ஓர் இடத்தைத் தட்டவும் (நீங்கள் பின்னைப் பயன்படுத்தி குறித்த இடம் அல்லது மேப்பில் உள்ள தேடல் முடிவு, எ.கா., மேப்பில் காட்டப்படும் நகரம், லேண்ட்மார்க் போன்றவை). பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • இருப்பிடத்திற்குச் செல்லும் வழித்தடத்தைப் பெற: வழிகள் பட்டனைத் தட்டவும்.

    • மேலும் தகவலைப் பார்க்க: இடத்திற்கான கார்டில் கீழே ஸ்க்ரால் செய்யவும்.

      தகவல்களில் முகவரி, ஃபோன் எண், இணையப்பக்கத்தின் இணைப்பு, வாடிக்கையாளர் மதிப்புரைகள் மற்றும் பல இருக்கக்கூடும். இடத்திற்கான கார்டுகளில் உள்ள பட்டன்களைத் தட்டுவதன் மூலம் நீங்கள் ஆர்டர் செவதற்கோ முன்பதிவு செய்வதற்கோ பல உணவகங்களும் பிற வணிகங்களும் செயலி கிளிப்களை வழங்குகின்றன.

    “திறந்துள்ளது” என்ற நிலை, மதிப்பீடுகள், விளக்கம், புகைப்படங்கள் ஆகியவற்றுடன் அழைப்பதற்கான பட்டன், இணையதளத்திற்குச் செல்லும் பட்டன், டிக்கெட்டுகளை வாங்குவதற்கான பட்டன் போன்றவற்றைக் கொண்டுள்ள அருங்காட்சியக இடத்திற்கான கார்டு.

இடத்திற்கான தகவல்களைச் சேமித்தல்

நீங்கள் இடத்தைச் சேமிக்கலாம் அல்லது அதை உங்கள் பிரத்தியேக வழிகாட்டிகளில் ஒரு பின்னாகவோ உங்கள் தொடர்புகளாகவோ சேர்க்கலாம்.

  1. உங்கள் iPhoneஇல் மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. மேப்பில் உள்ள ஓர் இடத்தையோ தேடல் முடிவையோ தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

உணவகத்தின் பெயர்களை மூன்றாம் தரப்பினருக்கு அனுப்புவதை நிறுத்துதல்

டேபிள் முன்பதிவு செய்வதற்கான நீட்டிப்பு உள்ள செயலியை நிறுவினால், நீங்கள் உணவகங்களில் முன்பதிவு செய்வதற்கும் அது உதவக்கூடும். நீங்கள் பார்க்கும் உணவகங்களின் பெயர்களை நீட்டிப்புக்கு அனுப்புவதை நிறுத்தலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி “மேப்ஸ்” என்பதைத் தட்டவும்.

  3. “உணவக முன்பதிவு” என்பதைத் தட்டவும், பிறகு செயலி நீட்டிப்பை ஆஃப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.