இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone அல்லது Apple Watchஇல் உள்ள ஹோம் கீ மூலம் உங்கள் கதவை அன்லாக் செய்தல்

Apple வாலெட்டில் உள்ள ஹோம் கீ அல்லது அணுகல் குறியீட்டைப் பயன்படுத்தி அல்லது இரண்டையுமே பயன்படுத்தி உங்கள் கதவை அன்லாக் செய்யும் வசதியை சில உற்பத்தியாளர்களின் லாக்குகள் வழங்குகின்றன.

ஹோம் செயலியில் ஆதரிக்கப்படும் லாக்கை இணைக்கும்போது, உங்கள் iPhoneஇல் உள்ள Apple வாலெட்டில் ஹோம் கீ தானாகச் சேர்க்கப்படும்.

குறிப்பு: Apple Home மற்றும் Matter இணக்கமான லாக்குகளை ஹோம் செயலி ஆதரிக்கும்.

ஹோம் கீயை அமைத்தல்

  1. உங்கள் iPhoneஇல் ஹோம் செயலிக்குச் செல்லவும்.

  2. ஆதரிக்கப்படும் லாக்கைச் சேர்க்கவும்.

  3. அன்லாக் செய்யும் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

    • எக்ஸ்பிரஸ் பயன்முறை: Face ID அல்லது Touch ID மூலம் அங்கீகரிக்காமல் கதவை அன்லாக் செய்யவும்.

    • Face ID அல்லது பாஸ்கோடு தேவை: உங்கள் சாதனத்தை லாக்கிற்கு அருகில் வைத்து, அதைத் திறக்க Face ID அல்லது Touch IDஐப் பயன்படுத்தவும்.

  4. “கதவை மூடிய பிறகு லாக் செய்தல்” மற்றும் “வீட்டை விட்டு வெளியேறும்போது லாக் செய்தல்” போன்ற தானியங்கிகளைத் தேர்வுசெய்யவும்.

ஹோம் கீயுடன் லாக் வேலை செய்தால், உங்கள் வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் ஹோம் கீயை தானாகப் பெறுவார்கள்.

குறிப்பு: ஹோம் செயலிக்கு இணக்கமான லாக்குகள் எல்லாம் ஹோம் கீயை ஆதரிப்பதில்லை.

ஹோம் கீ மூலம் கதவை அன்லாக் செய்தால்

உங்கள் iPhone அல்லது Apple Watchஇல் ஹோம் கீ இருக்கும்போது நீங்கள் எக்ஸ்பிரஸ் பயன்முறை அம்சத்தை ஆன் செய்தால், உங்கள் சாதனத்தை லாக்கின் அருகில் வைத்து அதை அன்லாக் செய்யலாம். மற்றவர்களுடன் அணுகலைப் பகிர்ந்துகொள்ள நீங்கள் ஹோம் செயலியைப் பயன்படுத்தலாம்.

விருந்தினருக்கான அணுகல் குறியீட்டை அமைத்தல்

உங்கள் வீட்டிற்கான தற்காலிக அணுகல் தேவைப்படும் நபர்களுக்கான அணுகல் குறியீட்டை ஹோம் செயலியில் அமைக்கலாம்.

  1. உங்கள் iPhoneஇல் ஹோம் செயலிக்குச் செல்லவும்.

  2. ஹோம் தாவலில், லாக்கைத் தொட்டுப் பிடித்துக் கொண்டு “ஆக்சஸரி அமைப்புகள்” என்பதைத் தட்டி “அணுகலை நிர்வகிக்கவும்” என்பதைத் தட்டவும், பின்னர் “விருந்தினரைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  3. விருந்தினருக்கு ஒரு பெயரை உள்ளிடுங்கள்-எடுத்துக்காட்டாக, டாக் வாக்கர்-பின்னர் அவர்கள் அணுக வேண்டிய லாக்குகளை ஆன் செய்யவும்.

  4. “அணுகல் குறியீட்டை மாற்று” என்பதைத் தட்டி ஓர் அணுகல் குறியீட்டை உள்ளிட்டு “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

  5. அணுகல் குறியீட்டைத் தொட்டுப் பிடித்துக் கொண்டு “பகிர்” என்பதைத் தட்டி, பகிர்வு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த அணுகல் குறியீட்டை விருந்தினருடன் பகிரவும்.

அணுகல் குறியீட்டை மாற்றவும், சில அல்லது அனைத்து லாக்குகளுக்கான அணுகலை ஆஃப் செய்யவும் அல்லது விருந்தினரை அகற்றவும் இந்த திரைக்கு மீண்டும் வரலாம்.

குறிப்பு: ஹோம் செயலிக்கு இணக்கமான லாக்குகள் எல்லாம் அணுகல் குறியீடுகளை ஆதரிப்பதில்லை.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.