இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iOS 26 உடன் இணக்கமான iPhone மாடல்கள்

iPhoneஐப் பயன்படுத்தத் தொடங்குவதற்கும், பின்வரும் மாடல்களுக்கு இணக்கமான iOS 26.5 மூலம் அது செய்யக்கூடிய அற்புதமான அனைத்து விஷயங்களையும் கண்டறிவதற்கும் இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவும்:

உங்கள் iPhone மாடல், வட்டாரம், மொழி, நெட்வொர்க் வழங்குநர் ஆகியவற்றைப் பொறுத்து உங்கள் அம்சங்களும் செயலிகளும் மாறக்கூடும். உங்கள் வட்டாரத்தில் எந்தெந்த அம்சங்கள் ஆதரிக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய, iOS மற்றும் iPadOS அம்சம் கிடைக்கும்தன்மை தொடர்பான இணையதளம் என்ற பிரிவைப் பார்க்கவும்.

குறிப்பு: மொபைல் நெட்வொர்க் மூலம் தரவை அனுப்பும்/பெறும் அல்லது வரும் அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் செயலிகள் மற்றும் சேவைகளுக்குக் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம். உங்கள் சேவைத் திட்டம் மற்றும் கட்டணங்கள் பற்றிய தகவல்களுக்கு உங்கள் நெட்வொர்க் வழங்குநரைத் தொடர்புகொள்ளவும்.

உங்கள் iPhone மாடலையும் iOS பதிப்பையும் கண்டறிதல்

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “பொது அமைப்புகள்” என்பதைத் தட்டி “அறிமுகம்” என்பதைத் தட்டவும்.

உங்கள் iPhone பற்றிய தகவல்களைப் பெறுதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

சாதன விவரங்களின்படி உங்கள் iPhone மாடலைத் தீர்மானிக்க உங்கள் iPhone மாடலை அடையாளம் காணுதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

iOS புதுப்பிப்புகளைப் பெறுதல்

உங்கள் மாடலுக்கு இணக்கமான சமீபத்திய iOS மென்பொருள் பதிப்பிற்கு iPhoneஐப் புதுப்பிக்க பின்வருவனவற்றைச் செய்யவும்:

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “பொது அமைப்புகள்” என்பதைத் தட்டி, “மென்பொருள் புதுப்பிப்பு” என்பதைத் தட்டவும்.

iPhoneஇல் iOSஐப் புதுப்பித்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.