இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் குறிப்புகளில் புகைப்படங்கள், வீடியோ மற்றும் பலவற்றைச் சேர்த்தல்

குறிப்புகள் செயலியில், மேப்ஸ், இணைப்புகள், ஆவணங்கள் போன்ற பிற செயலிகளில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்களைச் சேர்க்கலாம்.

புகைப்படம் அல்லது வீடியோவைச் சேர்த்தல்

  1. iPhoneஇல் குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. குறிப்பில் “இணைப்புகள்” பட்டன்-ஐத் தட்டி ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

    உங்கள் புகைப்பட லைப்ரரியில் இருந்து புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்வுசெய்யலாம் அல்லது புதிய புகைப்படம் அல்லது வீடியோவை எடுக்கலாம்.

உதவிக்குறிப்பு: புகைப்படத்தின் மீது வரைய, புகைப்படத்தைத் தட்டி “கையெழுத்துக் கருவிகள்” பட்டன்-ஐத் தட்டவும்.

குறிப்புகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஃபோட்டோஸ் செயலியில் சேமிக்க, அமைப்புகள்  > செயலிகள் > குறிப்புகள் என்பதற்குச் சென்று “ஃபோட்டோஸில் சேமி” என்பதை ஆன் செய்யவும்.

குறிப்பில் மற்றொரு செயலியில் இருந்து தகவலைச் சேர்த்தல்

மற்றொரு செயலியில் உள்ள தகவல்களைக் குறிப்பில் இணைப்பாகச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, மேப்ஸில் உள்ள இருப்பிடம், Safariஇல் உள்ள இணையப் பக்கம், “கோப்புகளில்” உள்ள PDF அல்லது ஸ்கிரீன்ஷாட்.

  1. நீங்கள் பயன்படுத்தும் செயலியில், நீங்கள் பகிர விரும்பும் ஐட்டத்தைத் திறக்கவும் (எடுத்துக்காட்டாக, மேப் அல்லது இணையப் பக்கம்).

  2. “மேலும்” பட்டன்-ஐத் தட்டவும்

  3. “பகிர்” அல்லது “பகிர்” பட்டன்-ஐத் தட்டி “குறிப்புகள்” அல்லது “புதிய விரைவுக் குறிப்பு” என்பதைத் தட்டவும்.

இணைப்புகளின் முன்னோட்ட அளவை மாற்றுதல்

  1. iPhoneஇல் குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. குறிப்பில், பின்வருவனவற்றின் முன்னோட்ட அளவை நீங்கள் மாற்றலாம்:

    • ஓர் இணைப்பிற்கு: இணைப்பைத் தொட்டு பிடித்து “காட்சிப்படுத்தும் விதம்” என்பதைத் தட்டிய பிறகு சிறியது, பெரியது, பிளைன் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்.

    • குறிப்பில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும்: “மேலும்” பட்டன்-ஐத் தட்டி “இணைப்புக் காட்சி” என்பதைத் தட்டிய பிறகு “அனைத்தையும் சிறியதாக அமை” அல்லது “அனைத்தையும் பெரியதாக அமை” என்பதைத் தேர்வுசெய்யவும்.

குறிப்புகள் செயலியில் அனைத்து இணைப்புகளையும் பார்த்தல்

  1. iPhoneஇல் குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. புகைப்படங்கள், இணைப்புகள், ஆவணங்கள் மற்றும் பிற இணைப்புகளின் சிறுபடங்களைப் பார்க்க, குறிப்புகள் பட்டியலுக்கு மேலே உள்ள “கோப்புறைச் செயல்கள்” பட்டன்-ஐத் தட்டி “இணைப்புகளைக் காட்டு” என்பதைத் தட்டவும். (லாக் செய்யப்பட்ட குறிப்புகளில் உள்ள இணைப்புகள் காட்டப்படாது.)

  3. குறிப்பிட்ட இணைப்புடன் கூடிய குறிப்பிற்குச் செல்ல, இணைப்பின் சிறுபடத்தைத் தொட்டுப் பிடித்து “குறிப்பில் காட்டு” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.