இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் ஃபோகஸ் செய்வதற்கு, அறிவிப்புகளை அனுமதித்தல் அல்லது அமைதியாக்குதல்

ஃபோகஸை நீங்கள் அமைக்கும்போது, நீங்கள் அறிவிப்புகளைப் பெற விரும்பும் நபர்களையும் செயலிகளையும் அமைதியாக்குவதன் மூலம் அல்லது அனுமதிப்பதன் மூலம் அவர்களை/அவற்றைத் தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு வொர்க் ஃபோகஸை அமைத்து, உங்கள் சக ஊழியர்களிடம் இருந்தும் நீங்கள் பணிக்காகப் பயன்படுத்தும் செயலிகளில் இருந்தும் வரும் அறிவிப்புகளை மட்டும் அனுமதிக்கலாம்.

ஃபோகஸின் போது குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து வரும் அறிவிப்புகளை அனுமதித்தல் அல்லது அமைதியாக்குதல்

  1. அமைப்புகள்  > ஃபோகஸ் என்பதற்குச் சென்று ஃபோகஸைத் தேர்வுசெய்யவும். எடுத்துக்காட்டாக, தொந்தரவு செய்ய வேண்டாம், தனிப்பட்ட வேலை, உறக்கம் அல்லது பணி.

  2. “நபர்கள்” என்பதைத் தட்டி (அல்லது “நபர்களைத் தேர்வுசெய்க” என்பதைத் தட்டி), பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • குறிப்பிட்ட நபர்களை அனுமதித்தல்: “இவர்களிடம் இருந்து வரும் அறிவிப்புகளை அனுமதி” என்பதைத் தட்டி, “நபர்களைச் சேர்” பட்டன்-ஐத் தட்டிய பிறகு உங்கள் தொடர்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.

      குறிப்பிட்ட நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை அனுமதிக்கும் விருப்பங்களை ஆன் செய்து, மீண்டும் மீண்டும் வரும் அழைப்புகளையும் (3 நிமிடங்களுக்குள் ஒரே நபரிடமிருந்து இரண்டு முறை அல்லது அதற்கு மேல் வரும் அழைப்புகள்) அனுமதிக்கலாம்.

    • குறிப்பிட்ட நபர்களை அமைதியாக்குதல்: “இவர்களிடம் இருந்து வரும் அறிவிப்புகளை அமைதியாக்கு” என்பதைத் தட்டி, “நபர்களைச் சேர்” பட்டன்-ஐத் தட்டிய பிறகு உங்கள் தொடர்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.

      “அமைதியாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை அனுமதி” அம்சத்தையும் நீங்கள் ஆன் செய்யலாம்.

குறிப்பு: உங்கள் ஃபோகஸ் அமைப்புகள் எப்படி இருந்தாலும், உங்கள் அவசரகால தொடர்புகளில் இருந்து வரும் அழைப்புகளை நீங்கள் அனுமதிக்கலாம். கீழே உள்ள அறிவிப்புகள் அமைதியாக்கப்பட்டிருக்கும்போது அவசரகால தொடர்புகளில் இருந்து வரும் அழைப்புகளை அனுமதித்தல் பிரிவைப் பார்க்கவும்.

“அறிவார்ந்த கண்டறிதல் & அமைதியாக்குதல்” அம்சம் ஆன் செய்யப்பட்டுள்ளபோது, முக்கியமான அறிவிப்புகளை உங்களுக்குக் காட்டப்பட Apple Intelligence* அனுமதிக்கும், முக்கியமற்ற அறிவிப்புகளை ஒலிமுடக்கும். Apple Intelligence மூலம் அறிவிப்புகளின் சுருக்கவிவரத்தைப் பெறுதல் மற்றும் குறுக்கீடுகளைக் குறைத்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

ஃபோகஸின் போது குறிப்பிட்ட செயலிகளில் இருந்து வரும் அறிவிப்புகளை அனுமதித்தல் அல்லது அமைதியாக்குதல்

  1. அமைப்புகள்  > ஃபோகஸ் என்பதற்குச் சென்று ஃபோகஸைத் தேர்வுசெய்யவும். எடுத்துக்காட்டாக, தொந்தரவு செய்ய வேண்டாம், தனிப்பட்ட வேலை, உறக்கம் அல்லது பணி.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி (அல்லது “செயலிகளைத் தேர்வுசெய்க” என்பதைத் தட்டி), பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • குறிப்பிட்ட செயலிகளை அனுமதித்தல்: “இதில் இருந்து வரும் அறிவிப்புகளை அனுமதி” என்பதைத் தட்டி, “செயலிகளைச் சேர்” பட்டன்-ஐத் தட்டிய பிறகு செயலிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

    • குறிப்பிட்ட செயலிகளை அமைதிப்படுத்துதல்: “இதில் இருந்து வரும் அறிவிப்புகளை அமைதியாக்கு” என்பதைத் தட்டி, “செயலிகளைச் சேர்” பட்டன்-ஐத் தட்டிய பிறகு செயலிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

    குறிப்பு: உங்கள் முகப்புத் திரையில் நீங்கள் சேர்த்த குறிப்பிட்ட இணையச் செயலிகளில் இருந்து வரும் அறிவிப்புகளை நீங்கள் அனுமதிக்கலாம் அல்லது அமைதியாக்கலாம். (உங்கள் முகப்புத் திரையில் இணையதள ஐகானைச் சேர்த்தல் பிரிவைப் பார்க்கவும்.)

நீங்கள் நேர வரையறைக்குட்பட்ட அறிவிப்புகளையும் ஆன் செய்யலாம், நேர வரையறைக்குட்பட்ட அறிவிப்புகளை உடனடியாக அனுப்ப அனைத்துச் செயலிகளையும் இது அனுமதிக்கிறது.

உங்கள் “ஃபோகஸ்” நிலையைப் பகிர வேண்டுமா இல்லையா என்பதைத் தேர்வுசெய்தல்

நீங்கள் ஃபோகஸைப் பயன்படுத்தும்போது உங்கள் ஃபோகஸ் நிலை ஆன் செய்யப்பட்டிருந்தால், உங்களை (உதாரணத்திற்கு, மெசேஜஸ் செயலியைப் பயன்படுத்தி) தொடர்புகொள்ள முயலும் நபர்களுக்கு நீங்கள் “அறிவிப்புகளை அமைதியாக்கியுள்ளீர்கள்” என்பது காட்டப்படும். இதை நீங்கள் ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஃபோகஸ்” என்பதைத் தட்டி, “ஃபோகஸ் நிலை” என்பதைத் தட்டவும்.

  3. “ஃபோகஸ் நிலையைப் பகிர்” அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

  4. அதை நீங்கள் ஆன் செய்தால், நீங்கள் அறிவிப்புகளை அமைதியாக்கியுள்ளதை எந்தெந்த ஃபோகஸ் சுயவிவரங்கள் பகிரலாம் என்பதைத் தேர்வுசெய்ய முடியும்.

அறிவிப்புகள் அமைதியாக்கப்பட்டிருக்கும்போது அவசரகால தொடர்புகளில் இருந்து வரும் அழைப்புகளை அனுமதித்தல்

உங்கள் iPhone அல்லது அறிவிப்புகள் அமைதியாக்கப்பட்டிருந்தாலும், அவசரகாலத் தொடர்புகளில் இருந்து வரும் ஒலிகளையும் அதிர்வுகளையும் நீங்கள் அனுமதிக்கலாம்.

  1. தொடர்புகளை திறக்கவும்.

  2. தொடர்பைத் தேர்ந்தெடுத்து, “திருத்து” என்பதைத் தட்டவும்.

  3. ரிங்டோன் அல்லது மெசேஜ் டோனைத் தட்டி “எமர்ஜென்சி பைபாஸ்” என்பதை ஆன் செய்யவும்.

    அல்லது உங்கள் மருத்துவ IDஐ அமைத்து அவசரகாலத் தொடர்பைக் கண்டறியவும்.

*Apple Intelligence பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வேஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், டர்க்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.