இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் அறிவியல் கால்குலேட்டரைப் பயன்படுத்துதல்

அறிவியல் கால்குலேட்டரைப் பயன்படுத்தி அடுக்கு, மடக்கை மற்றும் முக்கோணவியல் கணக்கீடுகளைச் செய்யலாம். இறுதி விடையைப் பார்க்க சமக் குறியை நீங்கள் தட்டுவதற்கு முன்பு, அடைப்புக்குறிகளுடன் கூடிய கணிதக்கோவைகள், முக்கோணவியல் மற்றும் பல கணக்கீடுகளை முழுமையாகப் பார்க்கலாம்.

குறிப்பு: கணக்கீடுகளைச் செய்யும்போது கால்குலேட்டர் செயலி பொதுவான விதிகளைப் பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, கூட்டல் மற்றும் கழித்தல் செயல்பாடுகளைச் செய்வதற்கு முன்பு பெருக்கல் செயல்பாடு முடிக்கப்படும். நீங்கள் முதலில் கணக்கிட விரும்பும் கணிதக்கோவைக்கு அடைப்புக்குறியிடவும்.

மெமரி, மடங்கு, மடக்கை மற்றும் முக்கோணவியல் செயல்பாடுகளைக் கொண்ட அறிவியல் கால்குலேட்டர் ஒரு iPhoneஇல் காட்டப்பட்டுள்ளது.

அறிவியல் கால்குலேட்டருக்கு மாறுதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, பின்னர் “அறிவியல்” என்பதைத் தட்டவும்.

சேமிக்கப்பட்ட மதிப்புகளைப் பயன்படுத்துதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, பின்னர் “அறிவியல்” என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் கணக்கிடும்போது, பின்வரும் ஒன்றைச் செய்யலாம்:

    • திரையில் காட்டப்படும் மதிப்பை நினைவகத்தில் உள்ள மதிப்புடன் கூட்ட: m+ என்பதைத் தட்டவும்.

    • நினைவகத்தில் உள்ள மதிப்பிலிருந்து திரையில் காட்டப்படும் மதிப்பைக் கழிக்க: m- என்பதைத் தட்டவும்.

    • நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள மதிப்பை மீட்டெடுக்க: mr என்பதைத் தட்டவும்.

    • நினைவகத்தில் சேமிக்கப்பட்ட மதிப்பை அழிக்க: mc என்பதைத் தட்டவும்.

அடுக்கு மற்றும் மடக்கைச் செயல்பாடுகள் அல்லது குறியீட்டைப் பயன்படுத்துதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, பின்னர் “அறிவியல்” என்பதைத் தட்டவும்.

  3. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • வர்க்க மதிப்பைக் கணக்கிட: எண்ணை உள்ளிட்டு, x2 என்பதைத் தட்டி, பின்னர் = என்பதைத் தட்டவும்.

    • கன மதிப்பைக் கணக்கிட: எண்ணை உள்ளிட்டு, x3 என்பதைத் தட்டி, பின்னர் = என்பதைத் தட்டவும்.

    • ஓர் எண்ணின் y அடுக்கைக் கணக்கிட: அடிமான எண்ணை உள்ளிட்டு, xy என்பதைத் தட்டி, y மதிப்பை உள்ளிடவும், பின்னர் = என்பதைத் தட்டவும்.

    • e மதிப்பின் x அடுக்கைக் கண்டறிதல்: ex என்பதைத் தட்டி, x மதிப்பை உள்ளிட்டு, = என்பதைத் தட்டவும்.

    • 10இன் x அடுக்கைக் கண்டறிதல்: 10x என்பதைத் தட்டி, x மதிப்பை உள்ளிட்டு, = என்பதைத் தட்டவும்.

      உதவிக்குறிப்பு: × மற்றும் 10x பட்டன்களைத் தட்டுவதற்குப் பதிலாக, அறிவியல் குறியீடுகளைப் பயன்படுத்துவதற்கான சுருக்கவழியாக EE என்பதைத் தட்டவும்.

இந்த பட்டன்களுக்குச் சற்று கீழே உள்ள பட்டன்களைப் பயன்படுத்தி இவற்றின் தலைகீழ் செயல்பாடுகளைப் பெறலாம்: வர்க்க மூலம், கன மூலம், yஆவது அடுக்கு மூலம், இயல் மடக்கை மற்றும் மடக்கை.

கூடுதல் செயல்பாடுகளைப் பயன்படுத்த (எ.கா. yx அல்லது 2இன் அடுக்குகள்), மேல் இடப்புறத்தில் உள்ள “2nd” பட்டனைத் தட்டவும்.

முக்கோணவியல் மற்றும் அதிபரவளையச் சார்புகளைப் பயன்படுத்துதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, பின்னர் “அறிவியல்” என்பதைத் தட்டவும்.

  3. பின்வரும் ஒன்றைக் கண்டறிய:

    • சைன்: sin-ஐத் தட்டி, எண்ணை உள்ளிட்ட பின்னர் = என்பதைத் தட்டவும்.

    • கோசைன்: cos-ஐத் தட்டி, எண்ணை உள்ளிட்ட பின்னர் = என்பதைத் தட்டவும்.

    • டேன்ஜன்ட்: tan-ஐத் தட்டி, எண்ணை உள்ளிட்ட பின்னர் = என்பதைத் தட்டவும்.

    • ஹைப்பர்பாலிக் சைன்: sinh-ஐத் தட்டி, எண்ணை உள்ளிட்ட பின்னர் = என்பதைத் தட்டவும்.

    • ஹைப்பர்பாலிக் கோசைன்: cosh-ஐத் தட்டி, எண்ணை உள்ளிட்ட பின்னர் = என்பதைத் தட்டவும்.

    • ஹைப்பர்பாலிக் டேன்ஜன்ட்: tanh-ஐத் தட்டி, எண்ணை உள்ளிட்ட பின்னர் = என்பதைத் தட்டவும்.

இந்தச் சார்புகளின் தலைகீழியைப் பயன்படுத்த (எ.கா. arcsine அல்லது arctangent), மேல் இடதுபுறத்தில் உள்ள “2nd” பட்டனைத் தட்டவும்.

ரேடியன்கள் அல்லது டிகிரியைப் பயன்படுத்துதல்

அறிவியல் கால்குலேட்டர் இயல்புநிலையாக டிகிரியைப் பயன்படுத்தும்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, பின்னர் “அறிவியல்” என்பதைத் தட்டவும்.

  3. ரேடியன்களுக்கு மாற Rad-ஐத் தட்டவும்.

    டிகிரிக்குப் பதிலாக ரேடியன்களைப் பயன்படுத்தும்போது, டிஸ்ப்ளேவின் கீழ் இடதுபுறத்தில் Rad என்ற லேபிள் தோன்றும், Rad பட்டன் Deg ஆக மாறும்.

மீண்டும் டிகிரிக்கு மாற, Deg பட்டனைத் தட்டவும்.

உங்கள் iPhoneஐச் செங்குத்தாக (போர்ட்ரெய்ட் பயன்முறையில்) வைத்திருக்கும்போது, ÷ பட்டனுக்குச் சற்று மேலே Rad/Deg பட்டன் இருக்கும். கிடைமட்டமாக (லேண்ட்ஸ்கேப் பயன்முறையில்) வைத்திருக்கும்போது, Red/Deg பட்டன் கீழ்ப்புறம் மையப்பகுதிக்கு அருகில் இருக்கும்.

0 மற்றும் 1க்கு இடையில் ஒரு ரேண்டம் எண்ணை உருவாக்குதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலிக்குச் செல்லவும்.

  2. “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, பின்னர் “அறிவியல்” என்பதைத் தட்டவும்.

  3. Rand-ஐத் தட்டவும்.

உங்கள் iPhoneஐச் செங்குத்தாக (போர்ட்ரெய்ட் திசையமைவில்) வைத்திருக்கும்போது, “Rand” பட்டன்நீக்கு பட்டன் பட்டனுக்குச் சற்று மேலே இருக்கும். அதைக் கிடைமட்டமாக (லேண்ட்ஸ்கேப் திசையமைவில்) வைத்திருக்கும்போது, Rand பட்டன் கீழ் இடதுபுறத்தில் இருக்கும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.