இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உங்கள் வாலெட் & Apple Pay அமைப்புகளை மாற்றுதல்

அமைப்புகளில், வாலெட்  செயலி மற்றும் Apple Payக்கான உங்கள் முன்னுரிமைகளைப் பிரத்தியேகமாக்கலாம்.

உங்கள் வாலெட் & Apple Pay அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “வாலெட் & Apple Pay” என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றை அமைக்கவும்:

Apple Payக்கான உங்கள் இயல்புநிலை கார்டு, முகவரி மற்றும் விருப்பத்தேர்வுகளை மாற்றுதல்

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “வாலெட் & Apple Pay” என்பதைத் தட்டி, “Apple Pay இயல்புநிலைகள்” என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றை அமைக்கவும்:

    • பரிவர்த்தனைக்கான இயல்புநிலைகள்: இயல்புநிலை கார்டு, உங்கள் ஷிப்பிங் முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் ஃபோன் எண்ணை அமைக்கவும்.

    • கிடைக்கக்கூடிய பேமெண்ட் விருப்பங்கள்: “பின்னர் பணம் செலுத்துக”, வெகுமதிகள், சலுகைகள் மற்றும் பிற “பின்னர் பணம் செலுத்துக” விருப்பங்களை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

    • Macஇல் பேமெண்ட்டுகளை அனுமதித்தல்: உங்களுக்கு அருகிலுள்ள Macஇல் பேமெண்ட்டுகளை உறுதிசெய்ய, உங்கள் iPhoneஇல் Apple Payஐப் பயன்படுத்தலாம்.

    • பக்கவாட்டு பட்டனை இருமுறை கிளிக் செய்தல்: Face ID உள்ள iPhoneஇல் பக்கவாட்டு பட்டனை இருமுறை கிளிக் செய்தால் உங்கள் கார்டுகளும் பாஸ்களும் திரையில் தோன்றும்.

    • முகப்பு பட்டனை இருமுறை கிளிக் செய்தல்: முகப்பு பட்டனை (முகப்பு பட்டன் உள்ள iPhoneஇல்) இருமுறை கிளிக் செய்தால் உங்கள் கார்டுகளும் பாஸ்களும் திரையில் தோன்றும்.

உங்கள் பாஸ்களை உங்களின் பிற சாதனங்களில் புதுப்பித்த நிலையில் வைத்தல்

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் பெயரைத் தட்டி, iCloudஐத் தட்டி, “வாலெட்” என்பதை ஆன் செய்யவும்.

iPhone லாக் செய்யப்பட்டிருக்கும்போது பாஸ்களை அணுக அனுமதித்தல்

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “Face ID & பாஸ்கோடு” அல்லது “Touch ID & பாஸ்கோடு” என்பதைத் தட்டி, உங்கள் பாஸ்கோடை உள்ளிட்டு, “லாக் செய்யப்பட்டிருக்கும்போது அணுகலை அனுமதி” என்பதற்கு கீழேயுள்ள “வாலெட்” என்பதை ஆன் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.