இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பிரதியெடுத்தல், நகலெடுத்தல்

iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலியில், புகைப்படம் அல்லது வீடியோவின் அசல் பதிப்பைப் பாதுகாப்பதுடன் அவற்றை பிரதியெடுக்கலாம். நீங்கள் ஒரு புகைப்படத்தை நகலெடுத்து, பின்னர் அதை மின்னஞ்சல், உரைச் செய்தி அல்லது விளக்கக்காட்சி போன்ற மற்றொரு ஆவணத்தில் ஒட்டலாம்.

புகைப்படம் அல்லது வீடியோவைப் பிரதியெடுத்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. புகைப்படம் அல்லது வீடியோவைத் திறந்து, “மேலும்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “பிரதியெடு” என்பதைத் தட்டவும்.

    உங்கள் லைப்ரரியில் அசலுக்கு அடுத்ததாக ஒரு பிரதியின் நகல் தோன்றும்.

புகைப்படத்தை நகலெடுத்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. புகைப்படத்தைத் திறந்து, “மேலும்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “நகலெடு” என்பதைத் தட்டி, புகைப்படத்தை மற்றொரு ஆவணத்தில் ஒட்டவும்.

பல புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை நகலெடுத்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “தேர்ந்தெடு” என்பதைத் டைப் செய்து, நீங்கள் நகலெடுக்க விரும்பும் சிறுபடத்தைத் தட்டவும்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “நகலெடு” என்பதைத் தட்டவும்.

  4. பிரதிகளை மற்றொரு ஆவணத்தில் ஒட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.