இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள Freeform போர்டுகளில் காட்சிகளை நகர்த்திக் காட்டுதல்

உங்கள் போர்டின் பகுதிகளைக் காட்சிகளாகச் சேமிக்கலாம். போர்டுகளைப் பகுதிகளாக ஒழுங்கமைத்து, அந்தப் பகுதிகளுக்கு நகர்த்தி மற்றவர்களுக்குக் காட்டலாம். ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் பெயர் வழங்க முடியும். இதன் மூலம் உங்கள் போர்டை ஒவ்வொரு பகுதியாக மற்றவர்களுக்குக் காட்டலாம் மற்றும் போர்டை எந்த வரிசையில் காட்டுவது என்பதை ஒழுங்கமைக்கலாம். காட்சிகளுக்குப் பெயரிடுவதன் மூலம் உங்கள் போர்டின் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை PDF ஆவணமாக அச்சிடலாம் அல்லது எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம்.

திறந்துள்ள காட்சி வழிசெலுத்தல் மெனுவையும் சேமிக்கப்பட்ட பல காட்சிகளையும் காட்டும் Freeform போர்டு.

காட்சிகளைச் சேமித்தல்

  1. உங்கள் iPhoneஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. உள்ளடக்கத்துடன் போர்டை திறத்தல்.

  3. நீங்கள் முதல் காட்சியாக அமைக்க விரும்பும் போர்டின் பகுதி காட்டப்படும் வரை போர்டை ஜூம் செய்து ஸ்க்ரால் செய்யவும். அந்தப் பகுதியை ஃபிரேம் செய்யவும்.

  4. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “காட்சியைச் சேர்” என்பதைத் தட்டவும்.

    உங்கள் போர்டின் கீழ்ப்புறம் “காட்சி வழிசெலுத்தல்” திறக்கப்படும்.

  5. நீங்கள் விரும்பும் காட்சிகள் அனைத்தையும் படமெடுக்கும் வரை இந்தப் படிகளை மீண்டும் செய்யவும்: அடுத்த காட்சியை ஃபிரேம் செய்து, காட்சி நேவிகேட்டரில் “காட்சி வழிசெலுத்தல்” பட்டன்-ஐத் தட்டவும் அல்லது “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “காட்சியைச் சேர்” என்பதைத் தட்டவும்.

    உதவிக்குறிப்பு: காட்சிகளின் வரிசை குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அவற்றைப் படமெடுத்த பிறகு அவற்றின் வரிசையை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.

காட்சிகளை நகர்த்துதல்

  1. உங்கள் iPhoneஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. சேமிக்கபட்ட காட்சிகளுடன் போர்டைத் திறத்தல்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, காட்சி நேவிகேட்டரைத் தட்டி, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • “காட்சி வழிசெலுத்தல்” பட்டன்-ஐத் தட்டி, நீங்கள் பார்க்க விரும்பும் காட்சியைத் தட்டவும்.

    • காட்சிகளுக்கு இடையே நகர, “பின்செல்” பட்டன் மற்றும் “முன்செல்” பட்டன்-ஐத் தட்டவும்.

குறிப்பு: புகைப்படத்தை எடுத்த நபர் பயன்படுத்தும் அதே மாடல் அல்லாது வேறு சாதனத்தையோ வேறு காட்சியையோ நீங்கள் பயன்படுத்தினால், உங்களுக்குக் காட்சி வேறு விதமாகக் காட்டப்படலாம். உதாரணத்திற்கு, யாரேனும் ஒருவர் Macஇல் படமெடுத்திருந்து, அதை நீங்கள் iPhoneஇல் “போர்ட்ரெய்ட்” பயன்முறையில் பார்க்கும்போது அது வேறுவிதமாகக் காட்டப்படலாம்.

காட்சிகளைத் திருத்துதல்

  1. உங்கள் iPhoneஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. சேமிக்கபட்ட காட்சிகளுடன் போர்டைத் திறத்தல்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “காட்சி நேவிகேட்டர்” என்பதைத் தட்டவும்.

  4. “காட்சிப் பட்டியலைக் காட்டு” பட்டன்-ஐத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • காட்சியின் பெயரை மாற்ற: மறுபெயரிட விரும்பும் காட்சியைத் தொட்டுப் பிடித்து, “காட்சியின் பெயரை மாற்று” என்பதைத் தட்டி, புதிய பெயரை உள்ளிட்டு, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

    • காட்சியை ரீஃபிரேம் செய்ய: போர்டின் மற்றொரு பகுதிக்குச் சென்று, மீண்டும் ஃபிரேம் செய்ய விரும்பும் காட்சியைத் தொட்டுப் பிடித்து, பின்னர் “காட்சியை மாற்று” என்பதைத் தட்டவும்.

    • காட்சி வரிசையை மறுவரிசைப்படுத்த: “திருத்து” என்பதைத் தட்டி, "மறுவரிசைப்படுத்து" பட்டன்-ஐத் தொட்டுப் பிடித்து, காட்சியை மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி இழுக்கவும்.

    • காட்சியை நீக்க: காட்சியில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து, பிறகு “நீக்கு” என்பதைத் தட்டவும்.

  5. “மூடுக” பட்டன்-ஐத் தட்டி, மேல் வலதுபுறத்தில் உள்ள “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

அனைத்துக் காட்சிகளையும் அச்சிடுதல் அல்லது எக்ஸ்போர்ட் செய்தல்

  1. உங்கள் iPhoneஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. சேமிக்கபட்ட காட்சிகளுடன் போர்டைத் திறத்தல்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • “அச்சிடு” என்பதைத் தட்டி, “காட்சிகள்” என்பதைத் தட்டவும், பிறகு “அச்சிடு” என்பதைத் தட்டவும்.

    • “PDFஆக எக்ஸ்போர்ட் செய்” என்பதைத் தட்டி, “காட்சிகள்” என்பதைத் தட்டவும், பிறகு அதை எப்படிப் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும் அல்லது “கோப்புகளில் சேமி” என்பதைத் தட்டவும்.

    “அச்சிடு” அல்லது “PDFஆக எக்ஸ்போர்ட் செய்” என்பதைப் பார்க்க நீங்கள் கீழே ஸ்க்ரோல் செய்ய வேண்டியிருக்கலாம்.

உதவிக்குறிப்பு: அச்சிடப்பட்ட மற்றும் எக்ஸ்போர்ட் செய்யப்பட்ட காட்சிகள் இயல்புநிலையாகவே நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தின் அளவிற்கு ஏற்ப இருக்கும். காட்சிகளை முதலில் ஃபிரேம் செய்தபடி அச்சிட, Freeform விருப்பங்களைத் தட்டி “படமெடுத்த சாதனம்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

ஒரு காட்சியை அச்சிடுதல் அல்லது எக்ஸ்போர்ட் செய்தல்

  1. உங்கள் iPhoneஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. சேமிக்கபட்ட காட்சிகளுடன் போர்டைத் திறத்தல்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “காட்சி நேவிகேட்டர்” என்பதைத் தட்டவும்.

  4. “காட்சி வழிசெலுத்தல்” பட்டன்-ஐத் தட்டி, காட்சியின் பெயரைத் தொட்டுப் பிடித்து, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • “காட்சியை அச்சிடு” என்பதைத் தட்டி, “அச்சிடு” என்பதைத் தட்டவும்.

    • “காட்சியை PDFஆக எக்ஸ்போர்ட் செய்” என்பதைத் தட்டி, அதை எப்படிப் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்யவும் அல்லது “கோப்புகளில் சேமி” என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: நீங்கள் காட்சி நேவிகேட்டர் பக்கத்தில் இருந்தால், அச்சிட அல்லது எக்ஸ்போர்ட் செய்ய விரும்பும் காட்சிக்கும் அருகில் உள்ள “மேலும்” பட்டன்-ஐத் தட்டலாம்.

ஒரு போர்டில் சேமிக்கப்படும் காட்சிகளைப் பங்கேற்பாளர்கள் அனைவரும் அணுகலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.