இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

அருகிலுள்ள Apple சாதனங்களுக்கு ஐட்டங்களை அனுப்ப AirDropஐப் பயன்படுத்தலாம்

AirDrop மூலம், அருகிலுள்ள iPhone, iPad அல்லது Macக்கு புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் பலவற்றை வயர்லெஸ் முறையில் அனுப்பலாம். உங்கள் சொந்தச் சாதனங்களுக்குக் கோப்புகளை அனுப்பவோ மற்றவர்களுடன் கோப்புகளைப் பகிரவோ AirDropஐப் பயன்படுத்தலாம்.

iPhone, iPad, Mac ஆகியவற்றில் AirDropஐ நீங்கள் பயன்படுத்தலாம்.

பரிமாற்றங்கள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக என்கிரிப்ட் செய்யப்படுவதுடன், ஒவ்வொரு பரிமாற்றமும் வரும்போது பெறுநர் அதை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்.

குறிப்பு: AirDrop இடமாற்றம் தொடங்கப்பட்ட பிறகு Bluetooth அல்லது Wi-Fi வரம்பை விட்டு வெளியேறினால், இடமாற்றம் இணையத்தின் மூலமாகத் தொடரும்.

iPhoneக்கு அருகில் ஒரு Mac உள்ளது. Mac டெஸ்க்டாப்பில் AirDrop உரையாடல் திறக்கப்பட்டுள்ளது, iPhone ஆகியவற்றுடன் ஒரு ஆவணத்தைப் பகிரத் தயாராக இருப்பதை இது காட்டுகிறது. ஆவணத்தைப் பெறுவதற்கான அறிவிப்பு iPhone திரையில் காட்டப்பட்டுள்ளது.

தொடங்கும் முன்

பின்வருவனவற்றை உறுதிசெய்துகொள்ளவும்:

  • இரண்டு சாதனங்களிலும் Wi-Fi மற்றும் Bluetooth® ஆன் செய்யப்பட்டிருத்தல்.

  • சாதனங்கள் ஒன்றுக்கொன்று 30 அடி (10 மீட்டர்) தூரத்திற்குள் இருத்தல்.

நீங்கள் VPN பயன்படுத்தினால், சில கன்டினியுட்டி அம்சங்களை அது பாதிக்கக்கூடும் என்பதால் அதன் உள்ளமைவு உள்ளூர் நெட்வொர்க்கிற்கு இடையூறு செய்யாத வகையில் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் Apple சாதனங்களுக்கு இடையே ஐட்டங்களை அனுப்ப AirDropஐப் பயன்படுத்த விரும்பினால், ஐட்டங்கள் தானாக ஏற்றுக்கொள்ளப்பட்டுச் சேமிக்கப்பட உங்கள் Apple கணக்கில் உள்நுழையவும்.

AirDropஐ ஆன் செய்தல்

  • iPhone அல்லது iPadஇல்: கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து, மேல் இடதுபுறத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் குழுவைத் தொட்டுப்பிடித்த பிறகு “AirDrop” ஐகான்-ஐத் தட்டவும். நீங்கள் யாரிடமிருந்து ஐடங்களைப் பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்ய “தொடர்புகள் மட்டும்” அல்லது “10 நிமிடங்களுக்கு அனைவருக்கும்” என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: AirDropக்கான குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகளைக் கொண்ட சாதனங்களில் மட்டுமே “தொடர்புகள் மட்டும்”, “10 நிமிடங்களுக்கு அனைவருக்கும்” ஆகிய விருப்பங்கள் கிடைக்கும்.

  • Macஇல்: மெனு பாரில் “கட்டுப்பாட்டு மைய நிலை” மெனு-ஐ கிளிக் செய்து “AirDrop” ஐகான்-ஐ கிளிக் செய்யவும். நீல நிறத்தில் இருந்தால் அது ஆனில் உள்ளது என்று அர்த்தம்.

    யார் உங்களுக்கு ஐட்டங்களை அனுப்பலாம் என்பதைத் தேர்வுசெய்ய AirDropக்கு அடுத்துள்ள வலது அம்புக்குறியை கிளிக் செய்து “தொடர்புகள் மட்டும்” அல்லது “அனைவரும்” என்பதை கிளிக் செய்யவும்.

AirDrop குறியீடு மூலம் ஒரு ஐட்டத்தைப் பகிர்தல்

iOS 26.2, iPadOS 26.2, macOS 26.2 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில், உங்கள் தொடர்புகளில் இல்லாத ஒருவர் AirDrop மூலம் உங்களுக்கு ஒரு ஐட்டத்தை அனுப்ப முயன்றால், அவர் AirDrop குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் ஐட்டத்தைப் பெற விரும்பினால், “தொடர்க” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் சாதனத்தில் AirDrop குறியீடு காட்டப்படும். குறியீட்டை நீங்கள் அனுப்புநருடன் பகிர்ந்தபிறகு அவர் அதைத் தனது சாதனத்தில் உள்ளிட்டதும் ஐட்டம் பகிரப்படும்.

மற்றொரு AirDrop குறியீட்டைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், AirDrop மூலம் அடுத்த 30 நாட்களுக்கு அந்த நபருடன் ஐட்டங்களைப் பகிரலாம், பெறலாம். இந்த 30 நாட்களிலும் ஐட்டங்களைப் பகிர்வதை நீங்கள் விரும்பவில்லை எனில், தொடர்புகள் செயலிக்குச் சென்று, உங்கள் “தெரிந்த பிற தொடர்புகள்” பட்டியலில் அந்த அனுப்புநரைக் கண்டறிந்து, “இந்த நபரை நீக்கு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

AirDropஐப் பயன்படுத்தி ஐட்டத்தை அனுப்புதல்

AirDrop மூலம் ஒரு ஐட்டத்தை ஒருவருக்கு அனுப்ப, நீங்களும் பெறுநரும் AirDropஐ ஆன் செய்திருக்க வேண்டும்.

தொடர்பிடம் இருந்து மட்டுமே ஐட்டங்களை ஏற்கும் ஒருவருக்கு நீங்கள் ஐட்டங்களை அனுப்பினால், அவரின் தொடர்புகள் பட்டியலில் நீங்கள் இருக்க வேண்டும். அத்துடன் உங்கள் Apple கணக்கு மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண் சேர்க்கப்பட்ட உங்களின் தொடர்பு கார்டும் அவர்களிடம் இருக்க வேண்டும்.

  • iPhone அல்லது iPadஇல்: ஓர் ஐட்டத்தைத் திறந்து ““பகிர்” ஐகான்”, “பகிர்”, ““AirDrop” ஐகான்அல்லது மற்றொரு பட்டனை (செயலியைப் பொறுத்து) தட்டவும். “AirDrop” ஐகான்-ஐத் தட்டி, நீங்கள் பகிர விரும்பும் பெறுநரைத் தட்டவும். காட்டப்படும் பெறுநர்கள் உங்களுக்கு அருகிலுள்ளவர்கள், Wi-Fi மற்றும் Bluetoothஐ ஆன் செய்துள்ளவர்கள். மேலும் உங்கள் சாதனத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.

    உதவிக்குறிப்பு: உங்கள் தொடர்புகளில் உள்ள ஒருவருக்கு அருகில் நீங்கள் இருந்தால், நீங்கள் பகிர விரும்பும் கோப்பைத் திறப்பதன் மூலம் AirDrop இடமாற்றத்தைத் தொடங்கி, உங்கள் iPhoneஐ, தொடர்புகொள்பவரின் iPhoneக்கு அருகில் கொண்டுசெல்லவும் (iOS 17 அதற்குப் பிந்தைய பதிப்புகளுடன் கூடிய ஆதரிக்கப்படும் மாடல்களில்).

  • Macஇல்: Macஇல் ஓர் ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்து டூல்பாரில் உள்ள “பகிர்” ஐகான்-ஐ கிளிக் செய்த பிறகு AirDrop என்பதை கிளிக் செய்யவும். அதை நீங்கள் பகிர விரும்பும் பெறுநரைத் தேர்ந்தெடுக்கவும். காட்டப்படும் பெறுநர்கள் உங்களுக்கு அருகிலுள்ளவர்கள், Wi-Fi மற்றும் Bluetoothஐ ஆன் செய்துள்ளவர்கள். மேலும் உங்கள் சாதனத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.

    உதவிக்குறிப்பு: Finderஇல் AirDrop மூலமாகவும் ஐட்டங்களைப் பகிரலாம். Finder சாளரத்தைத் திறக்க, Dockஇல் “Finder” ஐகான்-ஐ கிளிக் செய்யவும். சைடுபாரில் உள்ள AirDropஐ கிளிக் செய்து, நீங்கள் பகிர விரும்பும் ஐட்டத்தை நீங்கள் அனுப்ப விரும்பும் பெறுநரை நோக்கி இழுக்கவும்.

ஐட்டத்தைப் பகிர குறியீட்டை உள்ளிடுமாறு உங்களுக்கு அறிவிப்பு வந்தால், பெறுநரின் சாதனத்தில் உருவாக்கப்பட்ட AirDrop குறியீட்டை உள்ளிடவும்.

iPhone, iPad அல்லது Macஐப் பயன்படுத்தும் ஒருவருடன் செயலிகளையும் இணையதள பாஸ்வேர்டுகளையும் பாதுகாப்பாகப் பகிர, iPhone சாதனத்தில் நீங்கள் நம்பும் நபர்களுடன் பாஸ்வேர்டுகள் மற்றும் பாஸ்கீக்களைப் பகிர்தல் என்பதைப் பார்க்கவும்.

AirDrop மூலம் ஐட்டங்களைப் பெறுதல்

உங்கள் சாதனத்தில், AirDrop அறிவிப்பில் உள்ள “ஏற்கவும்” என்பதைத் தட்டவும் அல்லது கிளிக் செய்யவும்.

ஐட்டத்தைப் பெற உங்களுக்கு AirDrop குறியீடு தேவைப்படும் என்ற அறிவிப்பு காட்டப்பட்டால், “AirDrop குறியீட்டைப் பெறுங்கள்” என்பதைத் தட்டி அல்லது கிளிக் செய்து அதை அனுப்புநருடன் பகிரவும். அனுப்புநர் AirDrop மூலம் ஐட்டத்தை அனுப்புவதற்கு, அவரின் சாதனத்தில் குறியீட்டை உள்ளிட வேண்டும்.

குறிப்பு: அதே Apple கணக்கு மூலம் நீங்கள் உள்நுழைந்துள்ள சாதனங்களுக்கு இடையே ஒரு ஐட்டத்தை அனுப்புகிறீர்கள் என்றால், அந்த ஐட்டம் தானாகவே ஏற்றுக்கொள்ளப்படும்.

பெரும்பாலான ஐட்டங்கள் அவை அனுப்பப்பட்ட செயலியில் சேமிக்கப்படும். எடுத்துக்காட்டாக, ஃபோட்டோஸ் செயலியில் உள்ள புகைப்படத்தை உங்களுக்கு அனுப்ப ஒருவர் AirDropஐப் பயன்படுத்தினால், உங்கள் சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலியில் அது சேமிக்கப்படும்.

சாதனத்தைப் பொறுத்து, உங்கள் கோப்புகள் வேறு இடங்களிலும் காட்டப்படலாம். iPhone அல்லது iPadஇல், சில ஐட்டங்கள் கோப்புகள் செயலியில் சேமிக்கப்படலாம். Macஇல், சில கோப்புகள் தானாகவே “பதிவிறக்கங்கள்” கோப்புறையில் சேமிக்கப்படும். கோப்புகளை எங்கே சேமிக்க வேண்டும் என்பதற்கான விருப்பமும் உங்களுக்குக் காட்டப்படும். உதாரணமாக, ஒரு புகைப்படத்தைப் “பதிவிறக்கங்கள்” கோப்புறையில் சேமிக்க வேண்டுமா அல்லது “ஃபோட்டோஸ்” செயலியில் திறக்க வேண்டுமா என்று கேட்கப்படும்.

குறிப்பு: Macஇல் Finderஇல் AirDropஐ நீங்கள் திறந்தால், ஏற்பதற்கு அல்லது நிராகரிப்பதற்கான அறிவிப்பு “அறிவிப்பு மையத்தில்” காட்டப்படாமல் இங்கே காட்டப்படும்.

உங்கல் Apple சாதனங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு ஐட்டங்களை அனுப்புவதுடன் (எடுத்துக்காட்டாக, உங்கள் Macஇல் இருந்து உங்கள் iPhoneக்கு) ஒரே Apple கணக்கு மூலம் உள்நுழைந்திருந்தால் ஐட்டம் தானாக ஏற்கப்பட்டுச் சேமிக்கப்படும்.

AirDropக்கான மொபைல் டேட்டாவை ஆஃப் செய்தல்

நீங்கள் AirDrop ஐப் பயன்படுத்தும்போது மொபைல் டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படக்கூடும்.

Bluetooth அல்லது Wi-Fi வரம்பிற்கு வெளியே இருக்கும்போது மொபைல் டேட்டாவைப் பயன்படுத்த விரும்பவில்லை எனில், அமைப்புகள்  > பொது அமைப்புகள் > AirDrop என்பதற்குச் சென்று “மொபைல் டேட்டாவைப் பயன்படுத்து” என்பதை ஆஃப் செய்யவும்.

பொதுவாக இது ஒரு முறை அமைக்கக்கூடிய அமைப்பாகும், ஆனால் நீங்கள் அதை மாற்ற விரும்பக்கூடும். எடுத்துக்காட்டாக பயணம் செய்யும்போது ரோமிங் கட்டணங்களைத் தவிர்க்க விரும்பினால்.

AirDrop வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது?

உங்கள் தொடர்புத் தகவலை விரைவாகப் பகிர, iPhoneஇல் NameDropஐப் பயன்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும்.

சாதனங்களுக்கு இடையே சிறிய கோப்புகளைப் பகிர்வதற்கு AirDrop சிறந்தது. உங்கள் Mac மற்றும் பிற Apple சாதனங்களுக்கு இடையே பல கோப்புகளைப் பகிர விரும்பினால், iPhoneஇல் இருந்து சேமிப்பகச் சாதனம், சர்வர் அல்லது கிளவுடிற்குக் கோப்புகளை மாற்றுதல் பிரிவைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.