இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உடல்நலம் செயலியில் கர்ப்பம் குறித்த தகவலைப் பதிவுசெய்தல்

உடல்நலம் செயலியில் நீங்கள் கர்ப்பம் குறித்த தகவலைப் பதிவுசெய்யும்போது, உங்கள் கர்ப்பகாலத்தைப் பார்க்கலாம், கர்ப்ப காலத்தின்போது அடிக்கடி ஏற்படும் அறிகுறிகளைப் பதிவுசெய்யலாம். iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலியும் Apple Watchஇல் உள்ள “சுழற்சிக் கண்காணிப்பு” செயலியும் உங்கள் கர்ப்பகாலம் குறித்த விவரங்களை நீங்கள் புரிந்துகொள்ள உதவும். இரண்டு செயலிகளும் உங்கள் உடல் மற்றும் மனநலனில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மாற்றங்களையும் பரிந்துரைகளையும் செய்கின்றன.

திரையின் மேல் பகுதியில், ஒரு வாரத்திற்கான கர்ப்பகால டைம்லைனை சுழற்சிக் கண்காணிப்பு திரை காட்டும். வெளிர் பச்சை நிற நீள்வட்டங்களும் ஊதா நிறப் புள்ளிகளும் டைம்லைனில் முதல் 5 நாட்களைக் குறிக்கின்றன. அடர் பச்சை நிற நீள்வட்டங்கள் டைம்லைனில் உள்ள பிற நாட்களைக் குறிக்கின்றன. டைம்லைனுக்கு கீழே கர்ப்ப காலம், தொடங்கிய தேதி மற்றும் கணிக்கப்பட்ட பிரசவத் தேதி ஆகியவற்றைக் காட்டும் கர்ப்பகால சுருக்கவிவரம் உள்ளது. கர்ப்பகாலச் சுருக்கவிவரத்திற்குக் கீழே, கர்ப்பகாலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கு, அறிகுறிகள் மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களைச் சேர்ப்பதற்கான விருப்பங்கள் உள்ளன.

கர்ப்பம் குறித்த விவரத்தைப் பதிவுசெய்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழ் வலதுபுறம் உள்ள “தேடு” பட்டன்-ஐத் தட்டி, “சுழற்சிக் கண்காணிப்பு” என்பதைத் தட்டவும்.

  3. கீழே ஸ்க்ரால் செய்து, “காரணிகள்” என்பதைத் தட்டி, “சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. “கர்ப்பம்” என்பதைத் தட்டி “தொடங்குக” என்பதைத் தட்டவும்.

  5. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் கடந்த மாதவிடாயின் முதல் நாளைப் பதிவுசெய்ய: “கடைசி மாதவிடாய்ச் சுழற்சி” என்பதைத் தட்டவும்.

    • கணக்கிடப்பட்ட பிரசவத் தேதியைப் பதிவுசெய்ய: “கணிக்கப்பட்ட பிரசவத் தேதி” என்பதைத் தட்டவும்.

    • கருத்தரித்து எத்தனை வாரங்கள் ஆகியுள்ளன என்பதைப் பதிவுசெய்ய: “கர்ப்பத்தின் கணக்கிடப்பட்ட கால அளவு” என்பதைத் தட்டவும்.

    • IVF செயல்பாட்டில் கரு பரிமாற்றப்பட்ட தேதியைப் பதிவுசெய்ய: “கருமாற்றம் அடைந்த தேதி” என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: முந்தைய கர்ப்பம் குறித்த விவரங்களைப் பதிவுசெய்ய, “முந்தைய கர்ப்ப விவரத்தைப் பதிவுசெய்க” என்பதைத் தட்டவும்.

  6. “அடுத்து” என்பதைத் தட்டி, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, “அடுத்து” என்பதைத் தட்டவும்.

  7. “அடுத்து” என்பதைத் தட்டி பின்வருவனவற்றைச் செய்யவும்:

    • மனநல வினாத்தாள் நினைவூட்டல்களை ஆன் செய்தல் (விருப்பத்திற்குரியது): “அறிவிப்புகளை ஆன் செய்” என்பதைத் தட்டவும்.

    • உங்கள் மருத்துவ ஐடியில் உங்கள் கர்ப்பம் குறித்த தகவல்களைச் சேர்க்கவும் (விருப்பத்திற்குரியது): “அறிவிப்புகளை ஆன் செய்” என்பதைத் தட்டவும்.

    • உங்கள் மருந்துகள் குறித்த தகவலை சரிபார்த்தல்: உங்கள் கர்ப்பத்தில் ஏற்படக்கூடிய ஏதேனும் சிக்கல்களைப் பற்றி அறிய, மருந்துகளின் கீழுள்ள “மேலும் அறிக” என்பதைத் தட்டி “அடுத்து” என்பதைத் தட்டவும்.

  8. “சுழற்சி” டைம்லைனை சரிபார்த்துவிட்டு “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: உங்கள் “உடல்நல விவரங்கள்” பிரிவில் நீங்கள் கர்ப்பம் குறித்த விவரங்களையும் பதிவுசெய்யலாம். சுருக்கவிவரத்தைத் தட்டி, மேலே வலதுபக்கம் உங்கள் படம் அல்லது முதலெழுத்துக்களைத் தட்டி, “உடல்நல விவரங்கள்” என்பதைத் தட்டி, “சுழற்சிக் கண்காணிப்பு அம்சத்தில் கர்ப்பத் தகவலை அமை” என்பதைத் தட்டவும்.

கர்ப்பகால விவரத்தைப் பதிவுசெய்யும்போது, நீங்கள் பல்வேறு பரிந்துரைகளின் அறிவிப்புகளைப் பெறுகிறீர்கள். அவை கர்ப்பகாலத்தின்போதும் அதற்குப் பின்னரும் ஆன் அல்லது ஆஃப் செய்யப்பட வேண்டும்:

  • நடையின் சீரான தன்மை: அதை ஆன் செய்யும்படி பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் கர்ப்ப காலத்தின் இறுதி மும்மாதங்களில் கீழே விழும் அபாயம் அதிகரிக்கும் போது, “நடையின் சீரான தன்மை” அம்சம் உங்களை மேலும் விரைவாக எச்சரிக்கக்கூடும்.

  • உயர் இதயத்துடிப்பு (Apple Watch மட்டும்): அதிகபட்ச இதயத்துடிப்பு குறித்த அறிவிப்பிற்கான வரம்பு, நிமிடத்திற்கு 120 துடிப்புகளுக்கு (bpm) கீழே என்று அமைக்கப்பட்டிருந்தால், அதைச் சரிபார்த்து மாற்றும்படி உங்களிடம் கேட்கப்படும்.

  • கார்டியோ ஃபிட்னஸ் (Apple Watch மட்டும்): கர்ப்பகாலத்திலும், பிரசவத்திற்குப் பிறகு 12 வாரங்கள் வரையும் கார்டியோ ஃபிட்னஸ் அறிவிப்புகளை ஆஃப் செய்யும்படி பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் உடல்நலம் குறித்த அறிவிப்பு அமைப்புகளைச் சரிபார்க்க, உங்கள் உடல்நலச் சரிபார்ப்புப் பட்டியலைச் சரிபார்த்தல் என்பதைப் பார்க்கவும்.

இரத்தப்போக்கு மற்றும் பிற அறிகுறிகளைப் பதிவுசெய்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழ் வலதுபுறம் உள்ள “தேடு” பட்டன்-ஐத் தட்டி, “சுழற்சிக் கண்காணிப்பு” என்பதைத் தட்டவும்.

  3. ஒரு நாளைத் தேர்ந்தெடுக்க ஸ்வைப் செய்து பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • இரத்தப்போக்கைப் பதிவுசெய்ய: “கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுதல்” என்பதைத் தட்டி, “இரத்தப்போக்கு ஏற்பட்டது” என்பதைத் தட்டி, இரத்தப்போக்கு நிலையைத் தேர்ந்தெடுத்து, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

      குறிப்பு: உங்கள் கர்ப்பகாலத்தில் இரத்தப்போக்கைப் பதிவுசெய்யும்போது, உங்கள் மருத்துவர் அல்லது பராமரிப்பு குழுவைத் தொடர்புகொள்ள பரிந்துரைக்கப்படும் அறிவிப்பைப் பெறுவீர்கள்.

    • அறிகுறிகள் அல்லது பிற தகவல்களைப் பதிவுசெய்ய: ஒரு நாளைத் தேர்ந்தெடுக்க டைம்லைனை ஸ்வைப் செய்து, ஒரு பிரிவை (பிற தரவுகளுக்குக் கீழே உள்ளது) தட்டி, தகவல்களை வழங்கிய பிறகு, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

தரவுகளைப் பதிவுசெய்யும் திரையில் வகைகளைச் சேர்க்க, “பதிவுசெய்” என்பதற்கு அடுத்துள்ள விருப்பங்களைத் தட்டி, கீழே உள்ள பதிவுசெய்தல் வகைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.

கர்ப்பகால சுழற்சியின் டைம்லைனைப் பார்த்தல்

கீழ் வலதுபுறம் உள்ள “தேடு” பட்டன்-ஐத் தட்டி, “சுழற்சிக் கண்காணிப்பு” என்பதைத் தட்டவும்.

திரையின் மேல்பகுதியில், பின்வரும் ஐகான்களை ஒரு டைம்லைன் காட்டும்.

ஐகான்

விளக்கம்

வெளிர் பச்சை ஓவல்

உங்கள் கர்ப்பகாலத்தைப் பதிவு செய்த நாள்.

டேஷ் இடப்பட்ட வெளிர் பச்சை நிற நீள்வட்டம்

எதிர்காலத்தில் நீங்கள் கர்ப்பமாக இருக்கலாம் என்பதைக் காட்டும் நாள்.

அடர் பச்சை நீள்வட்டம்

உங்கள் கணக்கிடப்பட்ட பிரசவத் தேதியின் நாள்.

வெவ்வேறு நாட்களைத் தேர்ந்தெடுக்க, டைம்லைனை ஸ்வைப் செய்யவும்.

உங்கள் கர்ப்பம் குறித்த விவரங்களைத் திருத்துதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழ் வலதுபுறம் உள்ள “தேடு” பட்டன்-ஐத் தட்டி, “சுழற்சிக் கண்காணிப்பு” என்பதைத் தட்டவும்.

  3. “கர்ப்பம்” என்ற பகுதியைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • கணக்கீட்டு முறையை மாற்ற: “மாற்று” என்பதைத் தட்டி, ஒரு மதிப்பீட்டு முறையைத் தட்டவும்.

    • உங்கள் கணக்கீட்டு முறையைத் திருத்த: மாற்றத்தைச் செய்ய ஒரு புலத்தைத் தட்டவும்.

    • உங்கள் கர்ப்பம் குறித்த தகவல்களை நீக்க: உடல்நலம் செயலியில் இருந்து “காரணியை நீக்கு” விருப்பத்தைத் தட்டவும்.

  4. நிறைவுசெய்த பிறகு, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

உங்கள் உடல்நலத் தரவுகள் மற்றும் தனியுரிமை பற்றிய தகவல்கள்

உடல்நலம் செயலியில் நீங்கள் உங்களைப் பற்றிச் சேர்க்கும் தகவல்களை நீங்கள் மட்டுமே பயன்படுத்தவும் பகிரவும் முடியும். “உடல்நலம்” செயலியில் எந்தத் தகவல் சேமிக்கப்பட வேண்டும் என்பதையும், உங்கள் தரவை யார் அணுகலாம் என்பதையும் நீங்கள் தீர்மானிக்கலாம்.

மருத்துவ ஐடியில் கர்ப்பகாலத்தைச் சேர்க்க நீங்கள் தேர்வுசெய்தால், “லாக் செய்யப்பட்டிருக்கும்போது காட்டு” அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்கும்போது உங்கள் கர்ப்ப காலத்தின் நிலை பூட்டுத்திரையில் காட்டப்பட்டு அணுகும் நிலையில் இருக்கும். “அவசரகால அழைப்பின் போது பகிர்” அம்சம் ஆன் செய்யப்பட்டிருந்தால், அவசர அழைப்பின் போது உங்கள் கர்ப்பகாலத்தின் நிலை முதலில் பதிலளிப்பவர்களுடனும் பகிரப்படும். உங்கள் உடல்நலம் செயலி சுயவிவரம் என்பதற்குச் சென்று உங்கள் மருத்துவ ஐடி அமைப்புகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். உங்கள் நிலை மாறினால் மருத்துவ ஐடியில் உங்கள் கர்ப்பகாலத்தின் நிலையை அகற்றலாம் அல்லது புதுப்பிக்கலாம்.

Face ID, Touch ID அல்லது பாஸ்கோடு மூலம் உங்கள் iPhone லாக் செய்யப்பட்டிருக்கும்போது, உங்கள் மருத்துவ ஐடியைத் தவிர, உடல்நலம் செயலியில் உள்ள உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் தரவுகள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டு இருக்கும். iCloud உடன் ஒத்திசைக்கப்பட்ட உடல்நலத் தரவுகள் Apple சர்வர்களில் பகிரப்படும்போதும் அப்படியே இருக்கும்போதும் என்கிரிப்ட் செய்யப்படும். நீங்கள் இயல்புநிலையில் இரு-காரணி அங்கீகாரம் மற்றும் பாஸ்கோடுடன் iOS, iPadOS, watchOS (சுழற்சிக் கண்காணிப்புக்காக iPad மற்றும் Apple Watchஐப் பயன்படுத்தினால்) பதிப்பைப் பயன்படுத்தினால், உங்கள் உடல்நலம் மற்றும் செயல்பாட்டுத் தரவு Appleஆல் படிக்கமுடியாத வகையில் சேமிக்கப்படும்.

இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் சுழற்சிக் கண்காணிப்பு அம்சத்தையும் இரு-காரணி அங்கீகாரத்தையும் பயன்படுத்தும்போது, iCloud உடன் ஒத்திசைக்கப்பட்ட உங்கள் உடல்நலத் தரவு முழுமையாக என்கிரிப்ட் செய்யப்படும். Appleஇல் தரவை டீகிரிப்ட் செய்வதற்கான கீ இல்லை என்பதால் அதனால் அதைப் படிக்க முடியாது.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.