இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள Apple TV செயலியில் “எனது ஸ்போர்ட்ஸ்” மூலம் அணிகளைப் பின்தொடர்தல்

“எனது ஸ்போர்ட்ஸ்” பிரிவில் உங்களுக்குப் பிடித்த அணிகளைச் சேர்த்து அவை விளையாடும் கேம்களை “பார்ப்பதைத் தொடர்க” பிரிவில் நீங்கள் பார்க்கலாம். மேலும் அவர்கள் விளையாடவிருக்கும்போது அது குறித்து அறிவிப்புகளையும் பெறலாம்.

நீங்கள் “எனது ஸ்போர்ட்ஸ்” பிரிவுக்கு ஒத்திசைவை ஆன் செய்யும்போது Apple TV செயலியில் நீங்கள் பின்தொடரும் அணிகள் தானாகவே Apple News, Apple Sports மற்றும் பிற ஆதரிக்கப்படும் செயலிகளிலும் பின்தொடரப்படும். நீங்கள் ஏற்கனவே News செயலியில் “எனது ஸ்போர்ட்ஸ்” பிரிவில் அமைத்திருந்தால், நீங்கள் பின்தொடரும் அணிகள் Apple TV செயலியில் தோன்றும்.

உங்களிடம் ஒரே Apple கணக்கு மூலம் உள்நுழைந்த iPhone, iPad அல்லது Mac சாதனம் இருந்தால், அந்தச் சாதனங்களில் உள்ள Apple TV செயலி மற்றும் News செயலியில் உள்ள “எனது ஸ்போர்ட்ஸ்” மூலம் நீங்கள் பின்தொடரும் அணிகளைப் பார்க்கலாம்.

குறிப்பு: எனது ஸ்போர்ட்ஸ் அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை.

உங்களுக்கு பிடித்த அணிகளைப் பின்தொடர்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Apple TV செயலிக்குச் செல்லவும்.

  2. முகப்பைத் தட்டி, கீழ் நோக்கி ஸ்க்ரால் செய்து “ஸ்போர்ட்ஸ்” என்பதைத் தட்டவும்.

  3. கீழே ஸ்க்ரால் செய்து “உங்கள் அணிகளைப் பின்தொடருங்கள்” என்பதைத் தட்டவும்.

  4. Apple News, Apple TV மற்றும் பிற ஆதரிக்கப்படும் சாதனங்களில் உங்கள் அணிகளை ஒத்திசைக்க “ஆன் செய்” என்பதைத் தட்டவும்.

  5. ஒரு ஸ்போர்ட்ஸ் லீகைத் தட்டி (எ.கா., MLS, MLB, NBA), அணியைப் பின்தொடர அதற்கு அடுத்துள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  6. நிறைவுசெய்ததும் “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

“எனது ஸ்போர்ட்ஸ்” பிரிவை நிர்வகித்தல்

நீங்கள் “எனது ஸ்போர்ட்ஸ்” பிரிவை அமைத்த பிறகு அணிகளைப் பின்தொடரலாம் மற்றும் பின்தொடர்வதை நிறுத்தலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Apple TV செயலிக்குச் செல்லவும்.

  2. முகப்பைத் தட்டி, கீழ் நோக்கி ஸ்க்ரால் செய்து “ஸ்போர்ட்ஸ்” என்பதைத் தட்டவும்.

  3. கீழ் நோக்கி ஸ்க்ரால் செய்து, திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “எனது விளையாட்டுகளை நிர்வகி” என்பதைத் தட்டி பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • அணிகளைப் பின்தொடர: ஒரு விளையாட்டுப் போட்டியைத் தட்டி, நீங்கள் பின்தொடர விரும்பும் அணிக்கு அடுத்துள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டி “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

    • அணிகளைப் பின்தொடர்வதை நிறுத்த: நீங்கள் பின்தொடர விரும்பாத அணிக்கு அடுத்துள்ள “நீக்கு” பட்டன்-ஐத் தட்டி, “பின்தொடர்வதை நிறுத்து” என்பதைத் தட்டி, “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.