இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சார்ஜ் ஆகும்போது தொலைவிலிருந்து தகவல்களைப் பார்க்க “காத்திருப்புப்” பயன்முறையைப் பயன்படுத்துதல்

உங்கள் iPhoneஐப் படுக்கையறைக் கடிகாரமாக, புகைப்பட ஃப்ரேமாக, முழுத்திரையில் விட்ஜெட்கள் அல்லது நேரலைச் செயல்பாடுகளைக் காட்டுவதற்கான டிஸ்ப்ளேவாக மாற்றுவதற்கும் மேலும் பலவற்றைச் செய்வதற்கும் “காத்திருப்புப்” பயன்முறையை நீங்கள் பயன்படுத்தலாம்.

காத்திருப்புப் பயன்முறையைத் தொடங்குதல்

  1. iPhoneஇல் உள்ள அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “காத்திருப்பு” என்பதைத் தட்டி, “காத்திருப்பு” அம்சம் ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

  3. iPhoneஐ ஒரு சார்ஜருடன் இணைத்து அதன் அருகில் நிலையாக வைக்கவும்.

  4. பக்கவாட்டு பட்டனை அழுத்தவும்.

  5. விட்ஜெட்கள், புகைப்படங்கள் மற்றும் கடிகாரங்களுக்கு இடையில் மாற இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும். இந்த பார்வைகளில் ஒவ்வொன்றிற்குமான விருப்பங்களுக்கு இடையே மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி ஸ்வைப் செய்யவும்.

    “காத்திருப்புப்” பயன்முறைக்கு இரவுப் பயன்முறை ஆன் செய்யப்பட்டால், இரவில் குறைவாக இருக்கும் சுற்றுப்புற வெளிச்சத்திற்கு ஏற்ப திரை மாற்றியமைக்கப்பட்டு, நீங்கள் தூங்கும் போது இடையூறு அளிக்காத வகையில் சிவப்பு நிறத்துடன் ஐட்டங்கள் காட்டப்படும்.

    குறைந்த வெளிச்சத்தில் “காத்திருப்பு” பயன்முறையில் உள்ள iPhoneஇல் “கடிகாரம்” மற்றும் “கேலண்டர்” விட்ஜெட்கள் காட்டப்பட்டுள்ளன.

“டிஸ்ப்ளேவை எப்போதும் ஆனில் வை” அமைப்பின் மூலம் (ஆதரிக்கப்படும் மாடல்களில்), பயனுள்ள தகவல்களைக் காட்டும் வகையில் “காத்திருப்புப்” பயன்முறை ஆனிலேயே இருக்கும். மற்ற அனைத்து iPhone மாடல்களுக்கும், திரையைத் தட்டுதல், உங்கள் iPhone இருக்கும் மேசையை மெதுவாக நட்ஜ் செய்தல், Siriஐப் பயன்படுத்துதல் போன்றவற்றைச் செய்து எப்போது வேண்டுமானாலும் “காத்திருப்புப்” பயன்முறையைச் செயல்படுத்தலாம்.

Siri: Siriஐச் செயல்படுத்து அம்சத்தைப் பயன்படுத்தி, "காத்திருப்பு" அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்யுமாறு Siriஇடம் சொல்லலாம்.

MagSafe மூலம் iPhoneஐ நீங்கள் சார்ஜ் செய்யும் ஒவ்வொரு இடத்திலும் கடிகாரம், புகைப்படங்கள், விட்ஜெட்கள் என எதுவாக இருந்தாலும் “காத்திருப்பு” பயன்முறை அதை நினைவில் வைத்துக்கொள்ளும். எடுத்துக்காட்டாக, சமையலறையில் இருக்கும்போது குடும்பப் புகைப்படங்களைப் பார்க்கவோ படுக்கையின் பக்கத்தில் அலாரம் கடிகாரத்தை அமைக்கவோ இதை அமைக்கலாம்.

“காத்திருப்பு” பயன்முறை ஆனில் உள்ளபோது டிஸ்ப்ளே முன்னுரிமைகளை அமைத்தல்

“காத்திருப்பு” பயன்முறை இயக்கத்தில் இருக்கும்போது உங்கள் iPhone டிஸ்ப்ளே எவ்வளவு நேரம் ஆனில் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. அமைப்புகள்  > காத்திருப்பு > டிஸ்ப்ளே என்பதற்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

    • தானாக: iPhone பயன்படுத்தப்படாமல் இருப்பதுடன் அறை இருட்டாக இருந்தால் டிஸ்ப்ளே ஆஃப் செய்யப்படும்.

    • 20 விநாடிகளுக்குப் பிறகு: டிஸ்ப்ளே 20 விநாடிகளுக்குப் பிறகு ஆஃப் செய்யப்படும்.

    • ஒருபோதும் வேண்டாம்: “காத்திருப்பு” பயன்முறை ஆன் செய்யப்பட்டிருக்கும் வரை டிஸ்ப்ளே ஆன் செய்யப்பட்டிருக்கும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.