இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள Apple TV செயலியில் ஐட்டங்களை வாங்குதல், வாடகைக்கு எடுத்தல் அல்லது முன்கூட்டியே ஆர்டர் செய்தல்

நீங்கள் Apple TV செயலியில் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வாங்கலாம், வாடகைக்கு எடுக்கலாம் அல்லது முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம். நீங்கள் பார்க்க விரும்பும் ஒன்றை நீங்கள் கண்டறிந்தவுடன், அதை வாங்கலாம், அதை வாடகைக்கு வாங்கலாம் (திரைப்படமாக இருந்தால்), அல்லது அதை எப்படிப் பார்ப்பது என்பதைத் தேர்வுசெய்யலாம் (பல சேனல்கள் மற்றும் செயலிகளில் இருந்தால்).

குறிப்பு: உங்கள் நாடு அல்லது வட்டாரத்தைப் பொறுத்து Apple மீடியா சேவைகள் கிடைப்பது மாறுபடலாம். Apple மீடியா சேவைகள் கிடைக்கும் தன்மை என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Apple TV ஸ்டோர் தாவலில் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைக் கண்டறிதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Apple TV செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்டோர்” என்பதைத் தட்டி பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளவற்றில் தேட, திரையின் மேல்பகுதியில் இடதுபுறமாகவோ வலதுபுறமாகவோ ஸ்வைப் செய்யவும்.

    • சிறந்தவை, புதிய வெளியீடுகள், சிறந்த சலுகைகள் ஆகியவற்றுடன் பலவற்றைப் பார்க்க, கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்துவிட்டு, கிடைக்கக்கூடிய விருப்பங்களைப் பார்க்க இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

      உதவிக்குறிப்பு: ஒரு வகையின் கீழ் உள்ள அனைத்து ஐட்டங்களையும் பார்க்கவோ, ஒரு தொகுப்பைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பார்க்கவோ வரிசையின் தலைப்பைத் தட்டவும்.

  3. முன்னோட்டங்கள், மதிப்பீடுகள், விளக்கங்கள் மற்றும் தகவல்களைப் பார்க்க ஐட்டத்தைத் தட்டவும்.

ஐட்டங்களை வாங்குதல், வாடகைக்கு எடுத்தல் அல்லது முன்கூட்டியே ஆர்டர் செய்தல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Apple TV செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்டோர்” என்பதைத் தட்டி, ஒரு ஐட்டத்தைத் தட்டி அதன் விவரங்களைப் பார்க்கவும்.

  3. பின்வரும் விருப்பங்களில் இருந்து ஒன்றைத் தேர்வுசெய்யவும் (அனைத்துத் தலைப்புகளுக்கும் அனைத்து விருப்பங்களும் கிடைக்காது):

    • வாங்கும்போது: வாங்கிய ஐட்டங்கள் உங்கள் லைப்ரரியில் சேர்க்கப்பட்டன.

    • வாடகைக்கு எடுக்கும்போது: நீங்கள் ஒரு திரைப்படத்தை வாடகைக்கு வாங்கும்போது, அதைப் பார்த்து முடிக்க உங்களுக்கு 30 நாட்கள் தரப்படும். நீங்கள் திரைப்படத்தைப் பார்க்கத் தொடங்கிய பிறகு 48 மணி நேரத்திற்கு, அதை எத்தனை முறை வேண்டுமானாலு பிளே செய்யலாம், அதன் பிறகு வாடகைக் காலம் முடிவடையும். வாடகைக் காலம் முடிவடையும் போது, படம் நீக்கப்படும்.

    • முன்கூட்டிய ஆர்டர்: முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட ஐட்டம் கிடைக்கும்போது, உங்கள் பேமெண்ட் முறையின்படி பில் செய்யப்படும். மேலும் நீங்கள் ஒரு மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவீர்கள். நீங்கள் தானியங்கி பதிவிறக்கங்களை ஆன் செய்தால், ஐட்டம் தானாக உங்கள் iPhone சாதனத்தில் பதிவிறக்கப்படும்.

  4. நீங்கள் தேர்ந்தெடுத்ததை உறுதிசெய்து, பேமெண்ட்டை நிறைவு செய்யவும் அல்லது முன்கூட்டிய ஆர்டர் செய்யவும்.

நீங்கள் வாங்கியவற்றையும் வாடகைக்கு எடுத்தவற்றையும் உங்கள் லைப்ரரியில் கண்டறிந்து அவற்றை Apple TV செயலியில் பிளே செய்யலாம்.

Appleஇல் இருந்து திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், இசை, இசை வீடியோக்கள், மின்புத்தகங்கள், ஆடியோ புத்தகங்கள் அல்லது ரிங்டோன்களை நீங்கள் வாங்கும்போது, இணக்கமான iPhone, iPad, Mac அல்லது PCஇல் அவற்றை நிரந்தரமாகப் பதிவிறக்கும் விருப்பமும் உங்களுக்குக் காட்டப்படும். நீங்கள் பதிவிறக்கிய உள்ளடக்கத்தை Apple திரும்பப் பெற முடியாது, பதிவிறக்கிய உள்ளடக்கத்தை இணைய இணைப்பு இல்லாமல் நீங்கள் எப்போதும் அணுகலாம்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.