இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் iCloudஐப் பயன்படுத்துதல்

iCloud உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், பேக்-அப்கள் மற்றும் பலவற்றைப் பாதுகாப்பாகச் சேமிப்பதுடன் அவற்றை உங்களின் அனைத்துச் சாதனங்களிலும் தானாகவே புதுப்பித்த நிலையில் வைத்துக்கொள்கிறது. iCloud மூலம் புகைப்படங்கள், கேலண்டர்கள், குறிப்புகள், கோப்புறைகள் மற்றும் கோப்புகளை நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொள்ளலாம். iCloud உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கணக்கையும் 5 GB இலவச சேமிப்பகத்தையும் வழங்குகிறது. கூடுதல் சேமிப்பகம் மற்றும் கூடுதல் அம்சங்களுக்கு, நீங்கள் iCloud+இல் சந்தா சேரலாம்.

குறிப்பு: சில iCloud அம்சங்கள் குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகளைக் கொண்டுள்ளன. iCloud மற்றும் அதன் அம்சங்களின் கிடைக்கும் தன்மை நாடு அல்லது வட்டாரத்தைப் பொறுத்து மாறுபடும்.

iCloudஐ அமைத்தல்

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. [உங்கள் பெயர்]-ஐத் தட்டவும்.

    உங்கள் பெயரை காட்டப்படவில்லை என்றால் Apple கணக்கைத் தட்டிய பிறகு அதில் உள்நுழையவும்.

  3. iCloud என்பதைத் தட்டி “அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டிய பிறகு iCloud உடன் நீங்கள் ஒத்திசைக்க விரும்பும் செயலிகள் மற்றும் அம்சங்களை ஆன் செய்யவும்.

    எடுத்துக்காட்டாக, iCloud Driveஇல் உள்ள உங்கள் கோப்புகளை உங்கள் பிற சாதனங்களில் அணுகும் வகையில் அமைக்க iCloud Driveஐ ஆன் செய்யவும்.

    iCloud சேமிப்பக மீட்டரையும் அம்சங்களின் பட்டியலையும் காட்டும் iCloud அமைப்புகளின் திரை. iCloud உடன் பயன்படுத்தக்கூடிய ஃபோட்டோஸ், iCloud Drive, iCloud பேக்-அப் ஆகியவை அந்தப் பட்டியலில் அடங்கும்.

உங்கள் மற்ற சாதனங்களில் iCloud அம்சங்களை எப்படிப் பிரத்தியேகமாக்குவது என்பது பற்றிய தகவலுக்கு, iCloud பயனர் வழிகாட்டியில் iCloudஐ அமைத்தல் மற்றும் உங்களின் அனைத்துச் சாதனங்களிலும் அமைப்புகளை மாற்றுதல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

iPhoneஇல் iCloudஐப் பயன்படுத்துவதற்கான வழிகள்

iCloud மூலம் உங்கள் iPhoneஐத் தானாக பேக்-அப் செய்ய முடியும். iPhoneஐ பேக்-அப் செய்தல் பிரிவைப் பார்க்கவும்.

பின்வரும் தகவல்களை iCloudஇல் சேமித்து, உங்கள் iPhone மற்றும் பிற Apple சாதனங்களில் அவற்றைப் புதுப்பித்த நிலையில் வைத்துக்கொள்ளலாம்:

பின்வருவனவற்றையும் நீங்கள் செய்யலாம்:

கூடுதல் சேமிப்பகம் மற்றும் iCloud பிரைவேட் ரிலே, “எனது மின்னஞ்சல் முகவரியை மறை” அம்சம், HomeKit பாதுகாப்பு வீடியோ ஆதரவு ஆகியவற்றுக்கான அணுகலுக்கு, நீங்கள் iCloud+இல் சந்தா சேரலாம்.

உங்கள் iCloud தரவை iPad, Apple Watch, Mac, Apple Vision Pro, Apple TV 4K, Windows சாதனங்கள் மற்றும் iCloud.com தளத்திலும் நீங்கள் அணுகலாம். கிடைக்கக்கூடிய அம்சங்கள் பற்றியும் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ள iCloud பயனர் வழிகாட்டியைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.