இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள செயலிகளில் VoiceOverஐப் பயன்படுத்துதல்

உங்கள் iPhoneஇல் நிறுவப்பட்டுள்ள Safari, மேப்ஸ், புத்தகங்கள் போன்ற அனைத்து உள்ளமைக்கப்பட்ட iOS செயலிகளிலும் நீங்கள் VoiceOverஐப் பயன்படுத்தலாம். இணையப் பக்கங்கள் மற்றும் செயலிகள் அணுகல்தன்மைத் தகவல்களை வழங்கவில்லை என்றாலும் அவற்றில் இருக்கும் படங்கள் மற்றும் திரைக் கூறுகளின் விளக்கங்களை “VoiceOver அறிதல்” அம்சம் மூலம் நீங்கள் பெறலாம்.

Safariஇல் இணையத்தில் உலாவுதல்

  1. VoiceOver ஆன் செய்யப்பட்டுள்ளபோது, உங்கள் iPhoneஇல் Safari செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • இணையத்தில் தேட: முகவரிப் புலத்தைத் தேர்ந்தெடுத்து, கீபோர்டைக் காட்டுவதற்கு இருமுறை தட்டி, தேடல் வார்த்தை, சொற்றொடர் அல்லது URLஐ உள்ளிடவும். “செல்” என்பதை இருமுறை தட்டவும் அல்லது தேடல் பரிந்துரையைத் தேர்ந்தெடுத்து அதை இருமுறை தட்டவும்.

    • இணையப் பக்கத்தில் உள்ள அடுத்த எலிமென்ட்டைத் தவிர்க்க: தலைப்புகள், இணைப்புகள், படிவக் கட்டுப்பாடுகள் போன்ற எலிமென்ட் வகையை ரோட்டரில் அமைத்த பிறகு மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

    • இணையத்தில் உலாவுவதற்கு ரோட்டர் அமைப்புகளை அமைக்க: அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver > ரோட்டர் என்பதற்குச் செல்லவும். ஒரு ஐட்டத்தின் இடத்தை மாற்றியமைக்க, ஐட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது தேர்வுநீக்கவும், இல்லையெனில் "மறுவரிசைப்படுத்து" பட்டன்-ஐ மேல் அல்லது கீழ் நோக்கி இழுக்கவும்.

    • படங்களை அணுகும்போது அவற்றைத் தவிர்க்க: அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver > “படங்களை அணுகுதல்” என்பதற்குச் செல்லவும். அனைத்துப் படங்களையும் தவிர்க்கவோ விளக்கங்கள் இல்லாத படங்களை மட்டும் தவிர்க்கவோ நீங்கள் தேர்வுசெய்யலாம்.

    • பக்கத்தில் உள்ள தேவையில்லாதவற்றைக் குறைத்து, அவற்றில் உள்ளவற்றை எளிதாக வாசிக்க மற்றும் கண்டறிய: Safariஇன் முகவரிப் புலத்தில், வடிவமைப்பு விருப்பங்கள் பட்டனைத் தேர்ந்தெடுத்து இருமுறை தட்டவும். “ரீடர் காட்சியைக் காட்டு” (அனைத்து இணையப் பக்கங்களுக்கும் கிடைக்காது) என்பதைத் தேர்ந்தெடுத்த பிறகு இருமுறை தட்டவும்.

மேப்ஸில் கண்டறிதல்

  1. VoiceOver ஆன் செய்யப்பட்டுள்ளபோது, உங்கள் iPhoneஇல் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் தற்போதைய இருப்பிடத்தை மேப் எவ்வாறு கண்காணிக்கிறது என்பதைக் கட்டுப்படுத்தலாம்: “கண்காணிப்பு” பட்டன்-ஐத் தேர்ந்தெடுத்து நீங்கள் விரும்பும் கண்காணிப்பு விருப்பத்தின் பெயர் வாசிக்கப்படும் வரை இருமுறை தட்டவும்.

      • டிராக்கிங் ஆன்: நீங்கள் தற்போது உள்ள இருப்பிடத்தைத் தானாகவே மையப்பகுதிக்கு மேப் நகர்த்தும்.

      • பெயருடனான டிராக்கிங் ஆன்: நீங்கள் தற்போது உள்ள இருப்பிடத்தைத் தானாகவே மையப்பகுதிக்கு மேப் நகர்த்தி, நீங்கள் எதிர்நோக்கும் இடத்தின் பெயரைத் திரையின் மேல் பகுதியில் காட்டும் வகையில் திசையையும் சுழற்றும். இந்தப் பயன்முறையில், நீங்கள் தெருக்களையும் பிரபலமான இடங்களையும் அணுகும்போது அவற்றின் பெயர்களை iPhone வாசிக்கும்.

      • டிராக்கிங் ஆஃப்: நீங்கள் தற்போதுள்ள இருப்பிடத்தை மேப் தானாக மையப்பகுதிக்கு நகர்த்தாது.

    • மேப்பில் கண்டறிய: திரையில் உங்கள் விரலை எங்கு வேண்டுமானாலும் நகர்த்தவும் அல்லது ஒரு ஐட்டத்தில் இருந்து மற்றொரு ஐட்டத்திற்கு நகர்த்த இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

    • பெரிதாக்க அல்லது சிறிதாக்க: மேப்பைத் தேர்ந்தெடுத்து, ரோட்டரை ஜூம் விருப்பத்தில் அமைக்கவும். பின்னர் ஒரு விரலால் மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

    • மேப்பை நகர்த்த: மேப்பைத் தேர்ந்தெடுத்து, மூன்று விரல்களால் ஸ்வைப் செய்யவும்.

    • மேப்பில் உள்ள இடங்களையும் பின்களையும் கண்டறிய: மேப்பைத் தேர்ந்தெடுத்து, ரோட்டரை “பிரபல இடங்கள்” விருப்பத்தில் அமைக்கவும். பின்னர் ஒரு விரலால் மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

    • சாலையின் திசையைப் பின்தொடர்தல்: உங்கள் விரலைச் சாலையின் மீது வைக்கவும், “பின்தொடர இடைநிறுத்துங்கள்” என்று கேட்கும் வரை காத்திருக்கவும், பிறகு உங்கள் விரலை சாலையின் மீது நகர்த்தவும்.

    • ஓர் இருப்பிடம் பற்றிய தகவல்களைப் பெற: இருப்பிடத்தை (உதாரணத்திற்கு, வணிகம், லேண்ட்மார்க் அல்லது பின்) தேர்ந்தெடுத்த பிறகு, தகவல் கார்டைத் திறக்க இருமுறை தட்டவும். திசைகள், தெரு முகவரி, ஃபோன் எண், வணிக நேரம், வாடிக்கையாளர் விமர்சனங்கள் போன்ற தகவல்கள் வாசிக்கப்படுவதைக் கேட்க இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

    • தொடக்கப் புள்ளிக்குச் செல்வதற்கான வழிகாட்டலைப் பெற: மேப்ஸில் நடப்பதற்கான வழிகாட்டலை நீங்கள் தொடங்கும்போது iPhone ஒலி மற்றும் ஹேப்டிக் ஃபீட்பேக்கைப் பயன்படுத்தி, தொடக்க புள்ளி உள்ள திசையை நோக்கிச் செல்ல உங்களுக்கு வழிகாட்டும்.

    • மேப்பின் விளக்கத்தைப் பெறுதல்: வழிகள், தூரம் உட்பட அருகிலுள்ள இடங்கள் பற்றிய தகவல்களைப் பெற மூன்று விரல்களால் திரையைத் தட்டவும்.

PDFகளைப் படித்தல்

புத்தகங்கள் மற்றும் கோப்புகள் செயலிகளில், PDFகளை வாசிக்க நீங்கள் VoiceOverஐப் பயன்படுத்தலாம். படிவங்கள், அட்டவணைகள், பட்டியல்கள் போன்ற விளக்கமான தகவல்களையும் VoiceOver விவரிக்கும்.

ஃபோன் அழைப்புகளைச் செய்தல் மற்றும் பெறுதல்

அழைப்புகளைச் செய்வதற்கும் பெறுவதற்கும் நீங்கள் VoiceOverஐப் பயன்படுத்தலாம்.

  1. VoiceOver ஆன் செய்யப்பட்டுள்ளபோது, உங்கள் iPhoneஇல் உள்ள ஃபோன் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • அழைப்பிற்குப் பதிலளிக்க அல்லது அதை முடிக்க: திரையில் இரண்டு விரல்களால் இருமுறை தட்டவும்.

      VoiceOver ஆன் செய்யப்பட்டு, ஒரு ஃபோன் அழைப்பு இணைக்கப்படும்போது, அழைப்பு விருப்பங்களைக் காட்டுவதற்குப் பதிலாகத் திரையில் எண் கீபேடு இயல்பாகக் காட்டப்படும்.

    • அழைப்புக்கான விருப்பங்களைக் காட்ட: கீழே வலது மூலையில் உள்ள “மறை” பட்டனைத் தேர்ந்தெடுத்து, இருமுறை தட்டவும்.

    • எண் கீபேடை மீண்டும் காட்ட: திரையின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள “கீபேடு” பட்டனைத் தேர்ந்தெடுத்து இருமுறை தட்டவும்.

புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்தல்

  1. VoiceOver ஆன் செய்யப்பட்டுள்ளபோது, உங்கள் iPhoneஇல் உள்ள கேமரா செயலிக்குச் செல்லவும். வியூஃபைண்டரில் உள்ளவற்றை VoiceOver விளக்கும்.

  2. புகைப்படம் அல்லது வீடியோ பயன்முறைகளுக்கு இடையே மாற, கேமரா பயன்முறையைத் தேர்ந்தெடுத்து, ஒரு விரலால் மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

  3. ஒரு புகைப்படத்தை எடுக்க அல்லது வீடியோ பதிவுசெய்வதைத் தொடங்கவோ நிறுத்தவோ, திரையில் இரண்டு விரல்களால் இருமுறை தட்டவும்.

வாய்ஸ் மெமோ பதிவுகளை ட்ரிம் செய்தல்

“வாய்ஸ் மெமோக்கள்” செயலியில் உள்ள பதிவுகளைத் திருத்த நீங்கள் VoiceOverஐப் பயன்படுத்தலாம்.

  1. VoiceOver ஆன் செய்யப்பட்டுள்ளபோது, உங்கள் iPhoneஇல் வாய்ஸ் மெமோக்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் ட்ரிம் செய்ய விரும்பும் பதிவைத் தேர்ந்தெடுத்து இருமுறை தட்டவும்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தேர்ந்தெடுத்து இருமுறை தட்டவும்.

  4. “பதிவைத் திருத்து” என்பதைத் தேர்ந்தெடுத்து இருமுறை தட்டவும்.

  5. “மேலும்” பட்டன்-ஐத் தேர்ந்தெடுத்து, “ட்ரிம் செய்” பட்டன்-ஐத் தட்டவும்.

  6. அலைவடிவ முன்னோட்டத்தில், “ட்ரிம் தொடக்கம்” அல்லது “ட்ரிம் முடிவு” என்பதைத் தேர்ந்தெடுத்து இருமுறை தட்டிப் பிடித்த பிறகு தொடக்க அல்லது முடிவு நேரத்தை மாற்ற, மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும்.

  7. “ட்ரிம்” என்பதைத் தேர்ந்தெடுத்து இருமுறை தட்டவும்.

  8. “சேமி” என்பதைத் தேர்ந்தெடுத்து இருமுறை தட்டவும்.

  9. “முடிந்தது” என்பதைத் தேர்ந்தெடுத்து இருமுறை தட்டவும்.

காட்சிப்படுத்தப்பட்ட வானிலைத் தரவுகளை ஒலியாகக் கேட்டல்

தரவை, ஒலிமாறக்கூடிய தொனியாகவோ பிட்சாகவோ கேட்க உதவும் வகையில் “வானிலை” செயலியில் உள்ள சில வரைபடங்கள் என்கோடு செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, திரையில் உள்ள விஷுவல் அனிமேஷனில் வானிலை நிலவரம் தீவிரமடைந்தால் அதை நீங்கள் ஒலி வேறுபாடுகள் மூலம் விவரிக்கலாம்.

  1. VoiceOver ஆன் செய்யப்பட்டுள்ளபோது, உங்கள் iPhoneஇல் உள்ள வானிலை செயலிக்குச் செல்லவும்.

  2. மழைப்பொழிவு, காற்று அல்லது காற்றின் தரம் கொண்ட மேப் உள்ள இருப்பிடப் பக்கத்தைத் திறக்கவும்.

  3. ஒரு டோனோ “வானிலை மேப் ஸ்னாப்ஷாட்” என்ற வார்த்தைகளோ கேட்கும் வரை மேப்பை இருமுறை தட்டிப் பிடிக்கவும். வழிமுறைகள் சொல்லப்படுவது உங்களுக்குக் கேட்டால், அவற்றைப் பின்பற்றவும்.

    சோனிஃபிக்கேஷன் செய்யப்பட்ட மேப்பின் மீது உங்கள் விரல் அல்லது பாயின்டரை நகர்த்தும்போது, மாறிவரும் மதிப்புகளைக் குறிப்பிடும் வகையில் பிட்ச் மாறும்.

கணிதச் சமன்பாடுகளை வாசித்தல்

இணையத்திலும் (MathML பயன்படுத்தி என்கோடிங் செய்யப்பட்டவை) Numbers, Keynote போன்ற ஆதரிக்கப்படும் Apple செயலிகளிலும் உள்ள கணிதச் சமன்பாடுகளை VoiceOverஆல் வாசிக்க முடியும்.

  • சமன்பாட்டைக் கேட்க: எப்போதும் போல உரையை வாசிக்க VoiceOverஐப் பயன்படுத்தவும். சமன்பாட்டை வாசிப்பதற்கு முன்பு VoiceOver “கணிதம்” என்று சொல்லும்.

  • சமன்பாட்டில் உள்ளவற்றைப் பார்க்க: தேர்ந்தெடுக்கப்பட்ட சமன்பாட்டை முழு திரையில் காட்ட இருமுறை தட்டவும். பிறகு அதில் ஒவ்வொரு கூறாக நகர்த்தவும். சமன்பாட்டில் உள்ள கூறுகளை வாசிக்க, இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும். குறியீடுகள், சிறிய கணிதக் கோவைகள், நடுத்தர கணிதக் கோவைகள் அல்லது பெரிய கணிதக் கோவைகளைத் தேர்ந்தெடுக்க ரோட்டரைப் பயன்படுத்தவும். பிறகு அதே அளவில் உள்ள அடுத்த கூறு வாசிக்கப்படுவதைக் கேட்க மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்ட கூறில் டிரில் டவுன் செயல்பாட்டைச் சேர்க்க, அதை இருமுறை தட்டவும். பிறகு கூறில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொன்றாக வாசிக்க இடது அல்லது வலதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

VoiceOver வாசிக்கும் சமன்பாடுகள், நெமெத் குறியீட்டைப் பயன்படுத்தும் பிரெய்ல் சாதனம் மற்றும் யுனிஃபைட் ஆங்கில பிரெய்ல், பிரிட்டிஷ் ஆங்கிலம், ஃபிரெஞ்சு, கிரேக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்திய சாதனத்தின் வெளியீடாகவும் இருக்கலாம். VoiceOver கொண்ட பிரெய்ல் டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துதல்-ஐப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.