இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் செயலி கிளிப்களைப் பயன்படுத்துதல்

செயலி கிளிப் மூலம் (இது செயலியின் சிறிய பகுதியாகும்) சைக்கிளை வாடகைக்கு எடுப்பது, பார்க்கிங்கிற்குப் பணம் செலுத்துவது, உணவை ஆர்டர் செய்வது போன்ற பணிகளை நீங்கள் விரைவாகச் செய்யலாம். Safari, மேப்ஸ், மெசேஜஸ் போன்ற செயலிகளில் அல்லது நிஜ உலகில் NFC டேக்குகள், QR குறியீடுகள், செயலி கிளிப் குறியீடுகள் (குறிப்பிட்ட செயலி கிளிப்களுக்கு உங்களைக் கொண்டு செல்லும் தனித்துவமான மார்க்கர்கள்) மூலம் செயலி கிளிப்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

இடதுபக்கத்தில், மையத்தில் iPhone ஐகானுடன் NFC ஒருங்கிணைக்கப்பட்ட செயலி கிளிப் குறியீடு உள்ளது. வலதுபக்கத்தில், மையத்தில் கேமரா ஐகானுடன் ஸ்கேன் மட்டும் செயலி கிளிப் குறியீடு உள்ளது.

செயலி கிளிப்களைப் பெறுதல் மற்றும் பயன்படுத்துதல்

  1. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றிலிருந்து செயலி கிளிப்களைப் பெறலாம்:

    • செயலி கிளிப் குறியீடு அல்லது QR குறியீடு: Game Centerஇல் உள்ள iPhone கேமரா அல்லது குறியீடு ஸ்கேனரைப் பயன்படுத்தி குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

    • NFC ஒருங்கிணைந்த செயலி கிளிப் குறியீடு அல்லது NFC டேக்: NFC டேகிற்கு அருகில் iPhoneஐப் பிடிக்கவும்.

    • மேப்ஸ்: ஆதரிக்கப்படும் இருப்பிடங்களுக்கு, தகவல் கார்டில் உள்ள செயலி கிளிப்பின் இணைப்பைத் தட்டவும்.

    • Safari அல்லது மெசேஜஸ்: செயலி கிளிப் இணைப்பைத் தட்டவும்.

  2. செயலி கிளிப் திரையில் காட்டப்படும்போது “திற” அல்லது “பிளே செய்” என்பதைத் தட்டவும்.

ஆதரிக்கப்படும் செயலி கிளிப்களில், Apple மூலம் உள்நுழைதல் அம்சத்தைப் பயன்படுத்தலாம், பின்னர் Apple Pay மூலம் பணம் செலுத்தலாம்.

சில செயலி கிளிப்புகள் மூலம், முழு செயலியையும் பார்க்க, திரையின் மேல்பகுதியில் உள்ள பேனரைத் தட்டலாம்.

நீங்கள் iPhoneஇல் பயன்படுத்திய செயலி கிளிப்களைக் கண்டறிதல்

செயலி லைப்ரரிக்குச் சென்று, திரையின் மேலே உள்ள தேடல் புலத்தைத் தட்டி, அகரவரிசைப் பட்டியலின் இறுதிவரை ஸ்க்ரால் செய்யவும்.

செயலி கிளிப்களை அகற்றுதல்

  1. செயலி லைப்ரரிக்குச் சென்று திரையின் மேலே உள்ள தேடல் புலத்தைத் தட்டவும்.

  2. செயலி கிளிப்பின் பெயரை உள்ளிடவும் அல்லது கீழே ஸ்க்ரால் செய்து செயலி கிளிப்களுக்குச் செல்லவும்.

  3. நீக்க விரும்பும் செயலி கிளிப்பைத் தொட்டுப் பிடித்து, “செயலி கிளிப்பை அகற்று” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.