இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone பூட்டுத் திரையில் இருந்து அம்சங்களை அணுகுதல்

நீங்கள் iPhoneஐ ஆன் செய்யும்போது அல்லது வேக் செய்யும்போது பூட்டுத் திரை தோன்றும். பூட்டுத் திரையில் இருந்தே அறிவிப்புகளைக் காணலாம், கேமரா மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்கலாம், உங்களுக்கு பிடித்த செயலிகளில் இருந்து தகவல்களை ஒரே பார்வையில் பெறலாம், மீடியா பிளேபேக்கைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

வால்பேப்பரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பிடித்த புகைப்படத்தைக் காட்சிப்படுத்துவதன் மூலம், நேரத்தின் எழுத்துருவை மாற்றுவதன் மூலம், விட்ஜெட்களைச் சேர்ப்பதன் மூலம் மற்றும் பலவற்றைச் செய்வதன் மூலம் உங்கள் பூட்டுத் திரையைப் பிரத்தியேகமாக்கலாம். பிரத்தியேக iPhone பூட்டுத் திரையை உருவாக்குதல் ஐப் பார்க்கவும்.

மேற்பகுதிக்கு அருகில் நேரம் மற்றும் தேதியையும் கீழ்ப்பகுதிக்கு அருகில் ஃபிளாஷ்லைட் மற்றும் கேமராவையும் காட்டும் iPhone பூட்டுத் திரை.

பூட்டுத் திரையில் அம்சங்களையும் தகவல்களையும் அணுகுதல்

iPhone லாக் செய்யப்பட்டிருந்தாலும், பூட்டுத் திரையில் இருந்து பயனுள்ள அம்சங்களையும் தகவல்களையும் விரைவாக அணுகலாம்.

பூட்டுத் திரைக்குச் சென்று பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

பூட்டுத் திரையில் இருந்து நீங்கள் அணுகக்கூடியவற்றைத் தேர்வுசெய்ய, iPhoneஇல் பூட்டுத் திரை அம்சங்களை ஆன் செய்தல் பிரிவைப் பார்க்கவும்.

பூட்டுத் திரையில் அறிவிப்புகளின் முன்னோட்டங்களைப் பார்த்தல்

  1. அமைப்புகள்  > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. “முன்னோட்டங்களைக் காட்டு” என்பதைத் தட்டி “எப்போதும்” என்பதைத் தட்டவும்.

  3. பூட்டுத் திரையில் அறிவிப்புகள் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்:

    • அறிவிப்புகளின் எண்ணிக்கையை மட்டும் பார்த்தல்: “எண்ணிக்கை” என்பதைத் தட்டவும்.

    • செயலி வாரியாக அடுக்குகளாகக் குழுவாக்கப்பட்ட அறிவிப்புகளைப் பார்த்தல்: “அடுக்கு” என்பதைத் தட்டவும்.

    • அறிவிப்புகளைப் பட்டியலில் பார்த்தல்: “பட்டியல்” என்பதைத் தட்டவும்.

    லே-அவுட்டை மாற்ற, பூட்டுத் திரையில் உள்ள அறிவிப்புகளை பின்ச் செய்யலாம்.

மெசேஜஸில் இருந்து வரும் மெசேஜ், Mail மெசேஜ்களில் உள்ள வரிகள், கேலண்டர் அழைப்புகள் பற்றிய விவரங்கள் ஆகியவை அறிவிப்பு முன்னோட்டங்களில் அடங்கும். iPhoneஇல் உள்ள அறிவிப்புகளைப் பார்த்தல், அவற்றுக்குப் பதிலளித்தல் பிரிவைப் பார்க்கவும்.

பூட்டுத் திரையில் நேரலைச் செயல்பாடுகளைப் பார்த்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்

செயலியின் செயல்பாடுகள் பூட்டுத் திரையில் காட்டப்படும் என்பதால் அவற்றின் செயல்நிலையை நீங்கள் எளிதாகப் பின்தொடரலாம். மேப்ஸ் காட்டும் வழிகள், Apple TV செயலி காட்டும் நேரலை விளையாட்டு அறிவிப்புகள், உணவு டெலிவரி செயலிகள் காட்டும் ஆர்டர் அறிவிப்புகள் போன்றவை இதற்கான சில உதாரணங்கள். இந்த அறிவிப்புகள் “நேரலைச் செயல்பாடுகள்” என்று அழைக்கப்படுகின்றன.

உங்கள் iPhoneஇல் இசை, திரைப்படம் அல்லது பிற மீடியாவை பிளே செய்யும்போது, பூட்டுத் திரையில் உள்ள பிளேபேக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி இந்த நேரலைச் செயல்பாடுகளின் காட்சியைக் கட்டுப்படுத்தலாம். இந்தக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி அவற்றை பிளே செய்யலாம், இடைநிறுத்தலாம், ரீவைண்ட் செய்யலாம், ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்யலாம். உங்கள் iPhone பூட்டுத் திரையில் இருந்தே தொலைநிலைச் சாதனத்தில் (உங்கள் Apple TV 4K, HomePod போன்றவை) மீடியா பிளேபேக்கையும் கட்டுப்படுத்தலாம்.

உங்கள் நேரலைச் செயல்பாடு அமைப்புகளை மாற்ற, அமைப்புகள்  செயலிக்குச் சென்று, செயலிகள் என்பதைத் தட்டி, நீங்கள் மாற்ற விரும்பும் அமைப்புகளைக் கொண்ட செயலியைத் தட்டி, நேரலைச் செயல்பாடுகள் என்பதைத் தட்டவும்.

குறிப்பு: ஒரு சில செயலிகளுக்கு நேரலைச் செயல்பாடுகள் அமைப்பு இல்லை.

ஆல்பத்தின் அட்டை மற்றும் அதற்குக் கீழே ரிமோட் சாதனத்தில் இசையை பிளே செய்வதற்கான கட்டுப்பாடுகளைக் காட்டும் பூட்டுத் திரை.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.