iPhoneஇல் ஆடியோ மற்றும் வீடியோவைப் பதிவுசெய்தல்

செயலிகள் மற்றும் இணையதளங்களில் ஆடியோ மற்றும் வீடியோவைப் பதிவுசெய்வதற்கான அமைப்புகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக, வீடியோ கான்ஃபரன்ஸ் அழைப்பின் போது உங்கள் பதிவுகளின் தரத்தை அதிகப்படுத்துதல்.

ஆடியோ உள்ளீட்டு மூலத்தைத் தேர்வுசெய்தல்

உங்கள் சாதனத்தில் ஒரு குறிப்பிட்ட செயலி அல்லது இணையதளத்தில் ஆடியோவைப் பதிவுசெய்வதற்கான உள்ளீட்டு மூலத்தை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. செயலியைத் திறக்கவும் அல்லது நீங்கள் பதிவுசெய்ய விரும்பும் இணையதளத்திற்குச் செல்லவும்.

  2. கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்கவும்.

  3. கட்டுப்பாட்டு மையத்தின் மேலே உள்ள உங்கள் செயலி அல்லது உலாவிக்கான பட்டனைத் தட்டவும்.

  4. “உள்ளீடு” என்பதைத் தட்டி, உள்ளீட்டுச் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

    கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள மெனுவில், வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் உங்கள் தரப்பைப் பதிவு செய்வதற்கான உள்ளீட்டு மூல விருப்பங்கள் காட்டப்பட்டுள்ளன.

உங்கள் பதிவில் உள்ள பின்னணி ஒலிகளை ஃபில்டர் செய்தல்

சில செயலிகளில் பதிவுசெய்யும்போது நீங்கள் பின்னணி ஒலிகளை ஃபில்டர் செய்யலாம். இதன் மூலம் பிற ஒலிகளில் இருந்து தனிப்படுத்தி, உங்கள் குரலை மட்டும் தெளிவாகப் பதிவுசெய்யலாம்.

  1. செயலியைத் திறக்கவும் அல்லது நீங்கள் பதிவுசெய்ய விரும்பும் இணையதளத்திற்குச் செல்லவும்.

  2. கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்கவும்.

  3. கட்டுப்பாட்டு மையத்தின் மேலே உள்ள உங்கள் செயலி அல்லது உலாவிக்கான பட்டனைத் தட்டவும்.

  4. “குரலைத் தெளிவாக்குதல்” அம்சத்தைத் தட்டவும்.

உங்கள் பதிவில் பின்னணி ஒலிகளைச் சேர்க்க, “வைடு ஸ்பெக்ட்ரம்” கிடைத்தால் அதைத் தேர்ந்தெடுக்கவும். (“வைடு ஸ்பெக்ட்ரம்” அம்சம் குறிப்பிட்ட செயலிகளில் மட்டுமே கிடைக்கும்.)

அழைப்பு நிறைவடைந்த பிறகு, நீங்கள் வேறொரு இடத்தைக் குறிப்பிடாவிட்டால், கோப்புகள் செயலியின் “பதிவிறக்கங்கள்” கோப்புறையில் உங்கள் பதிவு இயல்பாகவே சேமிக்கப்படும். அதைப் பிற அழைப்புப் பங்கேற்பாளர்களுடன் பகிர “பகிர்” பட்டன்-ஐத் தட்டவும். Logic Pro, Final Cut Pro போன்ற போஸ்ட்-புரொடக்‌ஷன் செயலியில் பிற பங்கேற்பாளர்களின் பதிவுகளுடன் இதை இணைக்கலாம்.

“லோக்கல் கேப்சர்” மூலம் ஆடியோ மற்றும் வீடியோவைப் பதிவுசெய்தல்

iPhoneஇல் வீடியோ கான்ஃபிரன்ஸ் அழைப்பின்போது, “லோக்கல் கேப்சர்” அம்சம் மூலம் உயர்தர ஆடியோவைப் பதிவுசெய்யலாம். எனவே, “தெளிவான குரல்” போன்ற மைக்ரோஃபோன் பயன்முறைகள் “லோக்கல் கேப்சர்” அம்சத்திற்குப் பொருந்தாது. இருப்பினும், நேரலை அமர்வு முடிந்த பிறகு பதிவைத் திருத்துவதன் மூலம் இதைச் சரிசெய்யலாம்.

“லோக்கல் கேப்சர்” அம்சம் இயல்பாகவே ஆடியோ, வீடியோ ஆகிய இரண்டையும் பதிவுசெய்யும். உங்கள் கேமராவை வேறொரு செயலி பயன்டுத்தினால், ஆடியோ மட்டுமே பதிவு செய்யப்படும்.

  1. நீங்கள் பதிவுசெய்ய விரும்பும் வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலியைத் திறக்கவும்.

  2. கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்கவும்.

  3. “லோக்கல் கேப்சர்” பட்டன்-ஐத் தொட்டுப் பிடிக்கவும்.

    குறிப்பு: “லோக்கல் கேப்சர்” பட்டன் காட்டப்படவில்லை என்றால், முதலில் கட்டுப்பாட்டு மையத்தில் அதைச் சேர்க்கவும். (iPhoneஇல் கட்டுப்பாட்டு மையத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பிரத்தியேகப்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.)

  4. “பதிவைத் தொடங்கு” என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: உங்கள் ஆடியோ உள்ளீட்டு மூலத்தைப் பொறுத்து, ஸ்லைடரை இழுப்பதன் மூலம் இன்புட் கெயினை நீங்கள் மாற்றலாம் (ஸ்லைடர் திரையில் காட்டப்பட்டால்). வெளிப்புற USB மைக்ரோஃபோனைப் பயன்படுத்தும்போது, உள்ளீட்டைப் பெறுவதற்கான ஸ்லைடரைப் பயன்படுத்தி நீங்கள் உள்வரும் ஒலியளவைக் குறைக்கலாம்.

    உங்கள் பதிவிலிருந்து வீடியோவை நீக்க, கட்டுப்பாட்டு மையத்தில் “ஆடியோ மட்டும்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

    வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் உங்கள் தரப்புக்கான லோக்கல் ஆடியோ மற்றும் காட்சிப் பதிவைத் தொடங்குவதற்கான திரை.

உங்கள் iPhone மாடலில் Dynamic Island இருந்தால், “லோக்கல் கேப்சர்” அம்சத்தைப் பயன்படுத்தும்போது பதிவுசெய்வதைக் குறிக்கும் ஐகான் காட்டப்படும்.

அழைப்பு நிறைவடைந்த பிறகு, லோக்கல் கேப்சர் பதிவுகளைச் சேமிக்க நீங்கள் வேறு இடத்தைக் குறிப்பிடாவிட்டால், கோப்புகள் செயலியின் “பதிவிறக்கங்கள்” கோப்புறையில் உங்கள் பதிவு தானாகவே சேமிக்கப்படும். அதைப் பிற அழைப்புப் பங்கேற்பாளர்களுடன் பகிர “பகிர்” பட்டன்-ஐத் தட்டவும். Logic Pro, Final Cut Pro போன்ற போஸ்ட்-புரொடக்‌ஷன் செயலியில் பிற பங்கேற்பாளர்களின் பதிவுகளுடன் இதை இணைக்கலாம்.

“லோக்கல் கேப்சர்” பதிவுகளைச் சேமிக்க ஒரு இருப்பிடத்தை முன்னமைத்தல்

“கோப்புகள்” செயலியில் இயல்பாகவே சேமிக்க உள்ள “பதிவிறக்கங்கள்” கோப்புறையைத் தவிர, “லோக்கல் கேப்சர்” பதிவுகளைச் சேமிக்க வேறு இடத்தைக் குறிப்பிடலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “பொது அமைப்புகள்” என்பதைத் தட்டி, “லோக்கல் கேப்சர்” என்பதைத் தட்டவும்.

  3. “இருப்பிடத்தைச் சேமி” என்பதைத் தட்டி, உங்கள் லோக்கல் கேப்சர் பதிவுகளைச் சேமிக்க விரும்பும் கோப்புறைக்குச் செல்லவும்.

  4. பதிவுகளைச் சேமிக்க வேண்டிய கோப்புறையைத் தட்டி, “திற” என்பதைத் தட்டவும்.

தொலைவிலிருந்து ஆடியோவைப் பதிவுசெய்யவும் வீடியோ எடுக்கவும் AirPodsஐப் பயன்படுத்துதல்

ஆதரிக்கப்படும் AirPods மற்றும் AirPods Pro மாடல்களைப் பயன்படுத்தும்போது AirPodsஐப் பயன்படுத்தி வீடியோ கான்ஃபரன்ஸிங்போது ஆடியோ மற்றும் வீடியோவைத் தொலைவில் இருந்தே பதிவுசெய்யலாம். பதிவைத் தொடங்க/நிறுத்த, AirPods ஸ்டெம்மை அழுத்தவும். AirPods பயனர் வழிகாட்டியில் கேமரா செயலிகள் உள்ள AirPodsஐப் பயன்படுத்துதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.