இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் Live Photosகளைத் திருத்துதல்

ஃபோட்டோஸ் செயலியில், Live Photosக்களைத் திருத்தலாம், முக்கிய புகைப்படத்தை மாற்றலாம், பவுன்ஸ் மற்றும் லூப் போன்ற வேடிக்கையான எஃபெக்ட்களைச் சேர்க்கலாம்.

Live Photo திருத்தங்களைச் செய்தல்

புகைப்பட எடிட்டிங் கருவிகளுடன் சேர்த்து, Live Photoஇன் முக்கிய புகைப்படத்தை மாற்றலாம், அதன் நீளத்தை டிரிம் செய்யலாம், ஒலியை மியூட் செய்யலாம் மேலும் Live Photoஐ ஸ்டில் புகைப்படமாக மாற்றலாம்.

ஃபோட்டோஸ் செயலியில் Live Photo திறந்துள்ளது. புகைப்படத்துக்குக் கீழே ஃபிரேம் வியூவருடன் செயலில் உள்ள “முக்கியப் புகைப்படத்தை உருவாக்கு” பட்டன் உள்ளது. ஃபிரேம்வியூவரின் இரு முனைகளிலும் இரண்டு அம்புக்குறிகள் உள்ளன. அவை Live Photoஐ ட்ரிம் செய்ய உங்களை அனுமதிக்கின்றன. திரையின் கீழ்ப்பகுதியில் “நேரலை”, “சரிசெய்”, “ஃபில்டர்கள்”, “கிராப் செய்” ஆகிய பட்டன்கள் உள்ளன. “நேரலை” பட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. Live Photoஐத் திறந்து, “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “Live Photo” பட்டன்-ஐத் தட்டி, பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • முக்கியப் புகைப்படத்தை அமைக்க: வெள்ளை ஃபிரேமை ஃபிரேம் வியூவரில் நகர்த்தி, “முக்கிய புகைப்படத்தை உருவாக்கு” என்பதைத் தட்டி, “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

    • Live Photoஐ ட்ரிம் செய்ய: Live Photo பிளே ஆகும் ஃபிரேம்களைத் தேர்வுசெய்ய ஃபிரேம் வியூவரின் ஒரு முனையை இழுக்கவும்.

    • ஸ்டில் புகைப்படத்தை உருவாக்க: நேரலை அம்சத்தை ஆஃப் செய்ய திரையின் மேலே உள்ள “நேரலை” பட்டனைத் தட்டவும். Live Photo அதன் முக்கிய ஃபோட்டோவின் ஸ்டில் ஆக மாறும்.

    • Live Photoஐ மியூட் செய்ய: திரையின் மேல்பகுதியில் உள்ள “ஒலிமுடக்கு” பட்டன் என்பதைத் தட்டவும். அன்மியூட் செய்ய அதை மீண்டும் தட்டவும்.

குறிப்பு: iPhone 15 மாடல் மற்றும் அதற்குப் பிந்தைய மாடல்களில் போர்ட்ரெய்ட் எஃபெக்ட் உடன் நீங்கள் எடுக்கும் Live Photosஇல் முக்கிய புகைப்படத்தை நீங்கள் மாற்றினால் போர்ட்ரெய்ட் எஃபெக்ட் இழக்கப்படும்.

Live Photoஇல் எஃபெக்ட்களைச் சேர்த்தல்

நீங்கள் Live Photoஇல் எஃபெக்ட்களைச் சேர்த்து அவற்றை வேடிக்கையான வீடியோக்களாக மாற்றலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. Live Photoஐத் திறக்கவும்.

  3. மேல் இடது மூலையில் உள்ள “நேரலை” என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

    • நேரலை: நேரலை வீடியோ பிளேபேக் அம்சத்தைப் பயன்படுத்துகிறது.

    • லூப்: தொடர்ச்சியான லூப்பிங் வீடியோவில் ஆக்‌ஷன் மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது.

    • பவுன்ஸ்: ஆக்‌ஷன் பின்னோக்கி முன்னோக்கி ரிவைண்ட் செய்யப்படுகிறது.

    • நீண்ட எக்ஸ்போஷர்: மோஷனை மங்கலாக்குவதன் மூலம் DSLR போன்ற நீண்ட எக்ஸ்போஷர் எஃபெக்ட்டை சிமுலேட் செய்கிறது.

    • நேரலை ஆ:ப்: நேரலை வீடியோ பிளேபேக் அம்சம் அல்லது பயன்படுத்தப்பட்ட எஃபெக்ட்டை ஆஃப் செய்கிறது.

    • போர்ட்ரெய்ட்: போர்ட்ரெய்ட் எஃபெக்ட்டைப் பயன்படுத்தும்.

    • போர்ட்ரெய்ட்டை ஆ:ப் செய்ய: போர்ட்ரெய்ட் எஃபெக்ட்டை ஆஃப் செய்கிறது.

Live Photoஐ வீடியோவாக மாற்றுதல்

நீங்கள் Live Photoஐ சிறு வீடியோவாகச் சேமிக்கலாம் அல்லது பகிரலாம் (உதாரணமாக, Apple சாதனங்களில் இல்லாத நபர்களுடன் பகிர்வது).

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. Live Photoஐத் திறக்கவும்.

  3. மேல் வலது மூலையில் உள்ள “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “வீடியோவாகச் சேமி” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.