இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் ஃபோட்டோஸ் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்

உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலியில் உங்கள் புகைப்படங்களைக் கண்டறியலாம், நினைவுகளை ரசித்து மகிழலாம். உங்களின் சிறந்த புகைப்படங்களைப் பிறருடன் பகிரலாம். எப்படி தொடங்குவது என்பதை இங்கேப் பார்க்கவும்.

ஃபோட்டோஸ் செயலி திறக்கப்பட்டு, திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள லைப்ரரி தாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் புகைப்படங்களைத் தேடிக்கண்டறிதல்

உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்கத் தொடங்க ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும். லைப்ரரி தாவலில் உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் தேதி வாரியாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. ஆல்பங்கள், சமீபத்திய நாட்கள், நபர்கள் & பிராணிகள் போன்ற புகைப்படங்களின் பல சேகரிப்புகளைப் பார்க்க “சேகரிப்புகள்” தாவலைத் தட்டவும்.

“நினைவுகள்” தொகுப்பு ஃபோட்டோஸ் செயலியில் திறந்துள்ளது.

உங்கள் நினைவுகளை ரசித்து மகிழுங்கள்

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் பிரத்தியேகமாக்கப்பட்ட தொகுப்புகளுடன் உங்களுக்கு பிடித்த நினைவுகளை மீண்டும் நேரலை செய்யவும். அவற்றுக்கு இசை அமைக்கப்பட்டு திரைப்படம் போல பிளே செய்யப்படும். “சேகரிப்புகள்” என்பதைத் தட்டி “நினைவுகள்” என்பதைத் தட்டி, ஒரு நினைவைத் தட்டவும். ஒவ்வொரு நினைவும் உங்கள் லைப்ரரியில் இருந்து ஒரு நபர், செல்லப்பிராணி, இடம், நிகழ்வு அல்லது செயல்பாடு போன்ற தீம்களின்படி தொகுக்கப்பட்ட புகைப்படங்களை முன்னிலைப்படுத்திக் காட்டுகிறது.

திருத்துதல் திரையின் மையத்தில் ஒரு புகைப்படம் உள்ளது. திரையின் கீழ்ப்பகுதியில், இடமிருந்து வலமாக, “சரிசெய்”, “ஃபில்டர்கள்”, “கிராப் செய்”, “கிளீன்-அப்” ஆகிய பட்டன்கள் உள்ளன. “சரிசெய்” பட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரில்லியன்ஸைச் சரிசெய்ய ஒரு ஸ்லைடர் உள்ளது. திரையின் மேல் இடது மூலையில் “ரத்துசெய்” பட்டனும், மேல் வலது மூலையில் “முடிந்தது” பட்டனும் உள்ளன.

உங்கள் புகைப்படங்களைத் திருத்துதல்

உங்கள் புகைப்படங்கள் தனித்துவமாக இருப்பதற்கு அவற்றில் ஒளியளவு மற்றும் நிறத்தை சரிசெய்யவும், கிராப் செய்யவும், சுழற்றவும், ஃபில்டரைச் சேர்க்கவும் மற்றும் பலவற்றைச் செய்யவும். புகைப்படம் அல்லது வீடியோவைத் திறந்து, அதைத் திருத்தத் தொடங்க “திருத்து” பட்டன்-ஐத் தட்டவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம் iPhone திரையின் மேல் பாதியில் உள்ளது. அதற்குக் கீழே பகிர்வு விருப்பங்களின் வரிசை உள்ளது. “புகைப்படத்தை நகலெடு”, “பகிர்ந்த ஆல்பத்தில் சேர்”, “ஆல்பத்தில் சேர்”, “வால்பேப்பராகப் பயன்படுத்து” உள்ளிட்ட கூடுதல் விருப்பங்கள் அவற்றுக்குக் கீழே காட்டப்பட்டுள்ளன.

உங்கள் புகைப்படங்களைப் பகிர்தல்

புகைப்படம் அல்லது வீடியோவைத் திறந்து, “பகிர்” பட்டன்-ஐத் தட்டி Mail, மெசேஜஸ், AirDrop போன்ற பகிர்தல் முறைகளில் ஒன்றைத் தேர்வுசெய்யவும். சேகரிப்பில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் பகிர, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “பகிர்” என்பதைத் தட்டவும்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.