இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

Apple வெளிப்புற கீபோர்டுடன் iPhoneஇல் VoiceOverஐப் பயன்படுத்துதல்

iPhone உடன் Magic Keyboardஐப் பயன்படுத்தினால் நீங்கள் கீபோர்டு சுருக்கவழிகளைப் பயன்படுத்தி VoiceOver கட்டளைகளைச் செயல்படுத்தலாம்.

கூடுதலாக, கீபோர்டு லே-அவுட்டையும் பல்வேறு கீ சேர்க்கைகளுடன் தொடர்புடைய செயல்களையும் தெரிந்துகொள்ள நீங்கள் VoiceOver உதவியைப் பயன்படுத்தலாம். கீக்களையும் கீபோர்டு கட்டளைகளையும் நீங்கள் டைப் செய்யும்போது அவற்றுடன் தொடர்புடைய செயலைச் செய்யாமல் VoiceOver உதவி அவற்றை வாசிக்கும்.

VoiceOver மாடிஃபையரைத் தேர்வுசெய்தல்

மாடிஃபையர் என்பது VoiceOver கட்டளைகளை உள்ளிட, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மற்ற கீக்களுடன் சேர்ந்து நீங்கள் அழுத்தக்கூடிய கீ அல்லது கீக்களின் தொகுப்பு ஆகும். கேப்ஸ் லாக் கீ அல்லது கன்ட்ரோல் மற்றும் ஆப்ஷன் கீக்கள் ஒரே நேரத்தில் அழுத்தப்படும் வகையில், ஒரு மாடிஃபையரை நீங்கள் அமைக்கலாம்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver > டைப்பிங் > மாடிஃபையர் கீக்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. VoiceOver கட்டளைகளுக்கான மாடிஃபையரைத் தேர்வுசெய்யவும்: கேப்ஸ் லாக் கீ அல்லது கன்ட்ரோல் மற்றும் ஆப்ஷன் கீக்கள்.

    இந்த மாடிஃபையர் கீழே “VO” என சுருக்கப்பட்டுள்ளது.

VoiceOver கீபோர்டு கட்டளைகள்

கீ சேர்க்கைகளைப் பயன்படுத்தி VoiceOverஐ நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

(VO = மாடிஃபையர் கீக்கள்)

ஆக்‌ஷன்

சுருக்கவழி

VoiceOver உதவியை ஆன் செய்தல்

VO-K

VoiceOver உதவியை ஆஃப் செய்தல்

Esc (எஸ்கேப்)

அடுத்தது அல்லது முந்தையதைத் தேர்ந்தெடுத்தல்

VO-வலது அம்புக்குறி அல்லது VO-இடது அம்புக்குறி

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டத்தைச் செயல்படுத்துதல்

VO-ஸ்பேஸ் பார்

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டத்தைத் தொட்டுப் பிடித்துக் கொள்ளுதல்

VO-ஷிஃப்ட்-M

தற்போதைய நிலையில் இருந்து படித்தல்

VO-A

மேலே இருந்து படித்தல்

VO-B

வாசிப்பை இடைநிறுத்துதல் அல்லது தொடங்குதல்

கட்டுப்பாடு

கடைசியாக வாசிக்கப்பட்ட உரையை கிளிப்போர்டுக்கு நகலெடுத்தல்

VO-ஷிஃப்ட்-C

உரையைக் கண்டறிதல்

VO-F

VoiceOverஐ ஒலிமுடக்குதல் அல்லது ஒலி இயக்குதல்

VO-S

முகப்புத் திரைக்குச் செல்லுதல்

VO-H

ஸ்டேட்டஸ் பாருக்கு நகர்த்துதல்

VO-M

அறிவிப்புகள் திரையைத் திறத்தல்

ஸ்டேட்டஸ் பாருக்கு (VO-M) நகர்த்திய பிறகு ஆப்ஷன்-மேல் அம்புக்குறியை அழுத்தலாம்

கட்டுப்பாட்டு மையத்தைத் திறத்தல்

ஸ்டேட்டஸ் பாருக்கு (VO-M) நகர்த்திய பிறகு ஆப்ஷன்-கீழ் அம்புக்குறியை அழுத்தலாம்

தேடலைத் திறத்தல்

ஆப்ஷன்-மேல் அம்புக்குறி

செயலி மாற்றியைத் திறக்கவும்

VO-H-H

ஐட்டம் தேர்வியைத் திறத்தல்

VO-I

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டத்தின் லேபிளை மாற்றுதல்

VO-ஸ்லாஷ்

செயலைத் தொடங்கலாம், நிறுத்தலாம் அல்லது இடைநிறுத்தலாம்

VO-ஹைபன்

மேல் அல்லது கீழ் நோக்கி ஸ்வைப் செய்தல்

VO-மேல் அம்புக்குறி அல்லது VO-கீழ் அம்புக்குறி

ரோட்டரை இடதுபுறம் அல்லது வலதுபுறமாகத் திருப்புதல்

VO-கமாண்ட்-இடது அம்புக்குறி அல்லது VO-கமாண்ட்-வலது அம்புக்குறி

ரோட்டர் குறிப்பிடும் அமைப்பை மாற்றுதல்

VO-கமாண்ட்-மேல் அம்புக்குறி அல்லது VO-கமாண்ட்-கீழ் அம்புக்குறி

திரை மறைப்பை ஆன் அல்லது ஆஃப் செய்தல்

VO-Fn-ஹைபன் (அல்லது உங்கள் கீபோர்டைப் பொறுத்து VO-குளோப் கீ-ஹைபன்)

முந்தைய திரைக்குத் திரும்புதல்

Esc

அம்புக்குறி கீக்கள் மூலம் விரைவு நகர்வு

அம்புக்குறி கீக்களைப் பயன்படுத்தி VoiceOverஐக் கட்டுப்படுத்த, விரைவு நகர்வு அம்சத்தை ஆன் செய்யவும்.

ஆக்‌ஷன்

சுருக்கவழி

விரைவு நகர்வு அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்தல்

இடது அம்புக்குறி-வலது அம்புக்குறி

அடுத்தது அல்லது முந்தையதைத் தேர்ந்தெடுத்தல்

வலது அம்புக்குறி அல்லது இடது அம்புக்குறி

ரோட்டர் குறிப்பிடும் அடுத்த/முந்தைய ஐட்டத்தைத் தேர்ந்தெடுத்தல்

மேல் அம்புக்குறி அல்லது கீழ் அம்புக்குறி

தொடக்கம் அல்லது கடைசியாக உள்ளதைத் தேர்ந்தெடுத்தல்

கன்ட்ரோல்-மேல் அம்புக்குறி அல்லது கன்ட்ரோல்-கீழ் அம்புக்குறி

ஐட்டத்தைத் தட்டுதல்

மேல் அம்புக்குறி-கீழ் அம்புக்குறி

மேலே, கீழே, இடதுபுறம் அல்லது வலதுபுறம் ஸ்க்ரால் செய்தல்

ஆப்ஷன்-மேல் அம்புக்குறி, ஆப்ஷன்-கீழ் அம்புக்குறி, ஆப்ஷன்-இடது அம்புக்குறி அல்லது ஆப்ஷன்-வலது அம்புக்குறி

ரோட்டர் அமைப்பை மாற்றுதல்

மேல் அம்புக்குறி-இடது அம்புக்குறி அல்லது மேல் அம்புக்குறி-வலது அம்புக்குறி

இணையத்தில் உலாவுவதற்கு “ஒற்றை கீ” விரைவு நகர்வு

இணையப்பக்கம் முழுவதும் விரைவாக நகர, விரைவு நகர்வு அம்சத்தை ஆன் செய்யவும் (VO-Q), பிறகு தலைப்புகள், இணைப்புகள் போன்று ஒரு குறிப்பிட்ட ஐட்டம் வகைக்குச் செல்ல கீபோர்டில் உள்ள கீக்களை அழுத்தவும். முந்தைய ஐட்டத்திற்கு நகர்த்த, ஐட்டம் வகைக்கான கீயை அழுத்தும்போது ஷிஃப்ட் கீயையும் பிடித்துக் கொள்ளவும்.

ஐட்டம் வகை

சுருக்கவழி

தலைப்பு

H

இணைப்பு

L

உரைப் புலம்

R

பட்டன்

B

படிவக் கட்டுப்பாடு

C

படம்

I

அட்டவணை

T

ஸ்டேடிக் உரை

S

ARIA லேண்ட்மார்க்

W

பட்டியல்

X

ஒரே வகையைச் சேர்ந்த ஐட்டம்

M

நிலை 1 தலைப்பு

1

நிலை 2 தலைப்பு

2

நிலை 3 தலைப்பு

3

நிலை 4 தலைப்பு

4

நிலை 5 தலைப்பு

5

நிலை 6 தலைப்பு

6

உரைத் திருத்துதல்

விரைவு நகர்வு அம்சம் ஆஃப் செய்யப்பட்டுள்ளபோது இந்தக் கட்டளைகளை உரையுடன் பயன்படுத்தலாம். நீங்கள் செருகல் புள்ளியை நகர்த்துகையில் “VoiceOver” உரையை வாசிக்கும்.

ஆக்‌ஷன்

சுருக்கவழி

ஒவ்வொரு எழுத்தாக முன்னோக்கி அல்லது பின்னோக்கிச் செல்லுதல்

வலது அம்புக்குறி அல்லது இடது அம்புக்குறி

ஒவ்வொரு வார்த்தையாக முன்னோக்கி அல்லது பின்னோக்கிச் செல்லுதல்

ஆப்ஷன்-வலது அம்புக்குறி அல்லது ஆப்ஷன்-இடது அம்புக்குறி

ஒவ்வொரு வரியாக மேலே அல்லது கீழே செல்லுதல்

மேல் அம்புக்குறி அல்லது கீழ் அம்புக்குறி

வரிசையின் தொடக்கம் அல்லது முடிவிற்குச் செல்லுதல்

கமாண்ட்-இடது அம்புக்குறி அல்லது கமாண்ட்-கீழ் அம்புக்குறி

பத்தியின் தொடக்கம் அல்லது முடிவிற்குச் செல்லுதல்

ஆப்ஷன்-மேல் அம்புக்குறி அல்லது ஆப்ஷன்-கீழ் அம்புக்குறி

முந்தைய அல்லது அடுத்த பத்திக்குச் செல்லுதல்

ஆப்ஷன்-மேல் அம்புக்குறி அல்லது ஆப்ஷன்-கீழ் அம்புக்குறி

உரைப் புலத்தின் மேல் அல்லது கீழ்ப்பகுதிக்குச் செல்லுதல்

கமாண்ட்-மேல் அம்புக்குறி அல்லது கமாண்ட்-கீழ் அம்புக்குறி

நகர்த்தும்போதே உரையைத் தேர்ந்தெடுத்தல்

ஷிஃப்ட் + மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு செருகல் புள்ளி நகர்வுக் கட்டளைகள்

அனைத்து உரையையும் தேர்ந்தெடுத்தல்

கமாண்ட்-A

தேர்ந்தெடுக்கப்பட்ட உரையை நகலெடுத்தல், வெட்டுத்தல் அல்லது ஒட்டுதல்

கமாண்ட்-C, கமாண்ட்-X, அல்லது கமாண்ட்-V

கடைசியாகச் செய்யப்பட்ட மாற்றத்தைச் செயல்தவிர்த்தல் அல்லது மீண்டும் செய்தல்

கமாண்ட்-Z அல்லது ஷிஃப்ட்-கமாண்ட்-Z

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.