இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள கேமரா கட்டுப்பாட்டிற்கான அணுகல்தன்மை அமைப்புகளைச் சரிசெய்தல்

ஆதரிக்கப்படும் மாடல்களில் கேமரா கட்டுப்பாட்டை லேசாக அழுத்துவதற்குத் தேவையான அழுத்தத்தை அல்லது இருமுறை லேசாக அழுத்துவதற்குத் தேவையான வேகத்தை நீங்கள் மாற்றலாம். ஜூம் அல்லது டெப்த் போன்ற கட்டுப்பாடுகளை அணுக நீங்கள் பயன்படுத்தும் சைகைகளையும் மாற்றலாம், அந்தச் சைகைகளை முடக்கலாம் அல்லது ஒட்டுமொத்தமாக கேமரா கட்டுப்பாட்டை முடக்கலாம்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > கேமரா கட்டுப்பாடு என்பதற்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • கேமரா கட்டுப்பாட்டை முழுவதுமாக முடக்குதல்: கேமரா கட்டுப்பாட்டை ஆஃப் செய்யவும்.

    • கட்டுப்பாடுகளை அணுக “லேசாக அழுத்துதல்” சைகையைப் பயன்படுத்துதல்: “லேசாக அழுத்துதல்” என்பதை ஆன் செய்யவும். சைகையை முடக்க அதை ஆஃப் செய்யவும்.

    • கட்டுப்பாடுகளை அணுக ஸ்வைப் சைகையைப் பயன்படுத்துதல்: “ஸ்வைப்” என்பதை ஆன் செய்யவும். சைகையை முடக்க அதை ஆஃப் செய்யவும்.

    • கேமரா கட்டுப்பாட்டை லேசாக அழுத்துவதற்குத் தேவையான அழுத்தத்தைச் சரிசெய்தல்: “லேசாக அழுத்துவதற்கான விசை” என்பதற்குக் கீழே விருப்பமான அழுத்தத்தை நீங்கள் தேர்வுசெய்யலாம். நீங்கள் அமைத்துள்ள அழுத்தத்தைப் பரிசோதிக்க சைகைகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

    • கேமரா கட்டுப்பாட்டை இருமுறை லேசாக அழுத்துவதற்குத் தேவையான வேகத்தைச் சரிசெய்தல்: “இருமுறை லேசாக அழுத்துவதற்கான வேகம்” என்பதற்குக் கீழே, இருமுறை அழுத்துவதை iPhone அடையாளம் காண்பதற்கு எவ்வளவு வேகமாக நீங்கள் அழுத்த வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்.

“பெரிதாக்கி” செயலியைத் திறக்கும் வகையிலும் நீங்கள் கேமரா கட்டுப்பாட்டைப் பிரத்தியேகமாக்கலாம். மற்றொரு செயலியைத் திறக்க கேமரா கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.