இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள Freeform போர்டின் நகல் அல்லது PDFஐ அனுப்புதல்

Apple கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருந்தால், Freeform போர்டின் நகலுக்கான இணைப்பை நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பலாம். இதன் மூலம், அவர்கள் அதன் நகலைப் பதிவிறக்கி தங்களின் போர்டில் சேர்க்க முடியும். உங்கள் Freeform போர்டின் நகலை மற்றவர்களுக்கு அனுப்ப, அதை PDFஆகவும் எக்ஸ்போர்ட் செய்யலாம்.

போர்டின் நகலை அனுப்புதல்

உங்கள் போர்டின் நகலுக்கான இணைப்பை அனைவருக்கும் அனுப்பலாம். அந்த போர்டின் நகலை மற்றவர்கள் பதிவிறக்கி அதைத் தங்களின் போர்டில் அவர்கள் சேர்க்க முடியும். போர்டின் நகலை அனுப்ப, நீங்கள் ஆன்லைனில் இருக்க வேண்டும், iCloudஇல் உள்நுழைந்திருக்க வேண்டும்.

  1. உங்கள் iPhoneஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • “அனைத்து போர்டுகள்” பக்கத்தில் இருக்கும்போது: நீங்கள் பகிர விரும்பும் போர்டைத் தொட்டு பிடித்து, “பகிர்” என்பதைத் தட்டவும்.

    • போர்டில்: “போர்டைப் பகிர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. போர்டு பெயரின் கீழே உள்ள பாப்-அப் மெனுவைத் தட்டி, “நகலை அனுப்பு” என்பதைத் தேர்வுசெய்து, பின்வருவனவற்றில் ஒன்றைத் தட்டவும்:

    • iCloud இணைப்பை நகலெடு: இணைப்பு உங்கள் கிளிப்போர்டுக்கு நகலெடுக்கப்படும். அதை உங்களுக்கு விருப்பமான இடத்தில் ஒட்டிக்கொள்ளலாம்.

    • ஏதேனும் ஒரு தொடர்பு அல்லது செயலியின் ஐகான்: திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

இந்த இணைப்பை நீங்கள் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். இணைப்பைக் கொண்ட அனைவரும் 30 நாட்களுக்குள் நகலைப் பதிவிறக்க முடியும். “அனைத்து போர்டுகள்” பக்கத்தில் பெறுநர்களுக்கு இந்த போர்டு காட்டப்படும், “பகிரப்பட்டவை” பிரிவில் காட்டப்படாது. (“பகிரப்பட்டவை” பிரிவு நீங்கள் கூட்டுப்பணியாற்றும் போர்டுகளுக்கு மட்டுமே.)

ஒருவருக்கொருவர் திருத்தங்களைப் பார்த்து கூட்டுப்பணியாற்றும் வகையில் உங்கள் போர்டைப் பகிர விரும்பினால், Freeform போர்டுகளைப் பகிர்ந்து கூட்டுப்பணியாற்றுதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

ஒவ்வொரு புதிய இணைப்பும், நீங்கள் இணைப்பை உருவாக்கிய நேரத்தில் உள்ள போர்டின் நகலை அனுப்பும். போர்டின் நகலை ஒருவருக்கு நீங்கள் அனுப்பும்போது, அந்த இணைப்பு புதிய போர்டைத் திறக்கும். உங்கள் போர்டில் செய்யப்படும் மாற்றங்கள் அவர்களின் போர்டில் காட்டப்படாது, மற்றவர்கள் செய்யும் மாற்றங்கள் எதுவும் உங்கள் போர்டில் காட்டப்படாது.

குறிப்பு: ஒரு நகலை அனுப்புவது, அசல் போர்டிற்கான அணுகலைப் பாதிக்காது. போர்டுக்கான அணுகலை மாற்ற, பகிர்வு அமைப்புகளை மாற்றுதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

போர்டின் PDFஐ அனுப்புதல்

  1. உங்கள் iPhoneஇல் Freeform செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு போர்டைத் திறக்கவும் அல்லது புதிதாகத் தொடங்க, “புதிய போர்டு” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. நீங்கள் அனுப்ப விரும்பும் போர்டில், “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “PDFஆக எக்ஸ்போர்ட் செய்” என்பதைத் தட்டவும். (நீங்கள் கீழே ஸ்க்ரால் செய்ய வேண்டியிருக்கலாம்.)

    காட்சிகளை உங்கள் போர்டில் சேமித்திருந்தால், பின்வருவனவற்றில் ஒன்றை எக்ஸ்போர்ட் செய்யத் தேர்வுசெய்யவும்:

    • ஒட்டுமொத்த போர்டும் ஒரே பக்கத்தில்: போர்டைத் தட்டவும்.

    • ஒரு பக்கத்திற்கு ஒரு காட்சி: காட்சிகள் என்பதைத் தட்டவும்.

  4. மெசேஜஸ், Mail போன்ற எந்தச் செயலி மூலம் PDFஐ நீங்கள் அனுப்ப விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்வுசெய்து, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

    சமீபத்தில் நீங்கள் தொடர்புகொண்ட நபர்கள் மற்றும் குழுக்களின் ஐகான்கள் காட்டப்படும். போர்டை அனுப்ப அந்த ஐகான்களில் ஒன்றைத் தட்டவும்.

“அனைத்து போர்டுகள்” பக்கத்தில் இருந்து நீங்கள் ஒரு போர்டை PDFஆகவும் எக்ஸ்போர்ட் செய்யலாம். போர்டின் சிறுபடத்தையோ பெயரையோ தொட்டுப் பிடித்து, “பகிர்” என்பதைத் தட்டி, “PDFஆக எக்ஸ்போர்ட் செய்” என்பதைத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் போர்டை PNG ஆவணமாக அனுப்ப, அதன் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து, “ஃபோட்டோஸ்” செயலியில் இருந்து அதைப் பகிரவும். நீங்கள் பகிர விரும்பும் ஐட்டங்களைத் தேர்ந்தெடுத்து நகலெடுத்து அவற்றைப் பிற செயலிகளில் (உதாரணமாக, Mail, கோப்புகள்) PNGஆக ஒட்டலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.