இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் இயல்புநிலைச் செயலிகளை மாற்றுதல்

மின்னஞ்சல், மெசேஜிங், அழைத்தல், அழைப்பை ஃபில்டர் செய்தல், இணைய உலாவல், பாஸ்வேர்டுகள், கீபோர்டுகள் போன்றவற்றுக்கு, உள்ளமைக்கப்பட்ட Apple செயலிகளுக்குப் பதிலாக வேறு மூன்றாம் தரப்புச் செயலிகளை நீங்கள் இயல்புநிலைச் செயலிகளாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீங்கள் மாற விரும்பும் செயலி இந்த அம்சத்தை ஆதரிப்பதை உறுதிசெய்யவும். உங்களுக்கு உறுதியாகத் தெரியாவிட்டால், செயலியின் டெவலப்பரைத் தொடர்புகொள்ளவும்.

உங்கள் இயல்புநிலைச் செயலிகளை மாற்றுதல்

  1. iPhoneஇல் உள்ள அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி, “இயல்புநிலைச் செயலிகள்” என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைத் தட்டவும்:

    • மின்னஞ்சல்: மின்னஞ்சலை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் இயல்புநிலைச் செயலியை மாற்றுவதற்கு.

    • மெசேஜிங்: மெசேஜ்களை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் இயல்புநிலைச் செயலியை மாற்றுவதற்கு.

    • அழைத்தல்: அழைப்புகளைச் செய்வதற்கும் பெறுவதற்கும் இயல்புநிலைச் செயலியை மாற்றுவதற்கு.

    • அழைப்பை ஃபில்டர் செய்தல்: அழைப்பைத் தடுப்பதற்கும் அடையாளம் காண்பதற்குமான விருப்பங்களை ஆன் அல்லது ஆஃப் செய்வதற்கு. (தெரியாத மற்றும் ஸ்பேம் அழைப்புகளை ஃபில்டர் செய்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்).

    • உலாவிச் செயலி: இணையத்தில் இணைப்புகளைத் திறக்கும் வகையில் இயல்புநிலைச் செயலியை மாற்றுவதற்கு.

    • மொழிபெயர்ப்பு: உரையை மொழிபெயர்க்க பயன்படுத்தப்படும் இயல்புநிலைச் செயலியை மாற்றுதல்.

    • பாஸ்வேர்டுகள் & குறியீடுகள்: செயலிகள் மற்றும் இணையதளங்களுக்கான பாஸ்வேர்டுகள் மற்றும் பாஸ்கீக்களை தானாக நிரப்புதல், பாஸ்வேர்டு, பாஸ்கீ, குறியீடு உருவாக்கம் மற்றும் சரிபார்ப்புச் செயலிகளை ஆன் அல்லது ஆஃப் செய்ய இந்தப் பிரிவு உங்களை அனுமதிக்கிறது.

    • கான்டாக்ட்லெஸ் செயலி: கான்டாக்ட்லெஸ் பேமெண்ட்டுகளுக்கு NFCஐப் பயன்படுத்தும் இயல்புநிலைச் செயலியை மாற்றலாம்.

    • கீபோர்டுகள்: கீபோர்டுகள் மற்றும் மூன்றாம் தரப்பு கீபோர்டு செயலிகளைச் சேர்ப்பதற்கு அல்லது நீக்குவதற்கு.

  3. இயல்புநிலையாகப் பயன்படுத்த விரும்பும் செயலியைத் தேர்ந்தெடுக்கவும்.

    மின்னஞ்சலை அனுப்புவதற்கும், இணையத்தில் உலாவுவதற்கும், மேலும் பலவற்றிற்கும் உங்கள் இயல்புநிலைச் செயலிகளை மாற்றுவதற்கான திரை.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.