இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உங்களுக்கு பிடித்த பாட்காஸ்ட்களைப் பின்தொடர்தல்

பாட்காஸ்ட்கள் செயலியில் நீங்கள் விரும்பும் நிகழ்ச்சியைக் கண்டறிந்தால், அதைப் பின்தொடர்வதன் மூலம் அதை உங்கள் லைப்ரரியில் சேர்க்கலாம். இதன் மூலம் புதிய எபிசோடுகள் பற்றிய அறிவிப்பை பெறலாம், பிளேபேக் வரிசையை மாற்றலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

பாட்காஸ்ட்டைப் பின்தொடர்தல்

நீங்கள் பாட்காஸ்ட்டைப் பின்தொடரும் போது, அது உங்கள் லைப்ரரியில் சேர்க்கப்படுகிறது. நீங்கள் பின்தொடரும் பாட்காஸ்ட்களை உங்களின் பிற Apple சாதனங்கள் அல்லது Apple Podcasts செயலியில்அணுகலாம்.

  1. iPhoneஇல் பாட்காஸ்ட்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. தேடியோ உலாவியோ ஒரு நிகழ்ச்சியைக் கண்டறியவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • தேடல் முடிவுகளில்: “பின்தொடர்” பட்டன்-ஐத் தட்டவும்.

    • நிகழ்ச்சித் தகவலைப் பார்க்கும் போது: “பின்தொடர்” பட்டன்-ஐத் தட்டவும்.

      “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “பின்தொடர்” என்பதைத் தட்டவும்.

    • எபிசோடு தகவல் அல்லது “இப்போது பிளே ஆவது” என்பதில் இருந்து பார்க்கும்போது: “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “நிகழ்ச்சியைப் பின்தொடர்” என்பதைத் தட்டவும்.

பாட்காஸ்ட்டைப் பின்தொடர்வதை நிறுத்துதல்

  1. iPhoneஇல் பாட்காஸ்ட்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. லைப்ரரியைத் தட்டி நிகழ்ச்சிகள் என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் பின்தொடரும் நிகழ்ச்சியைத் தட்டி, “பின்தொடர்வதை நிறுத்து” பட்டன்-ஐத் தட்டிய பிறகு “நிகழ்ச்சியைப் பின் தொடர்வதை நிறுத்து” என்பதைத் தட்டவும்.

    “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “பின்தொடர்வதை நிறுத்து” என்பதைத் தட்டவும்.

புதிய எபிசோடுகளுக்கான அறிவிப்புகளைப் பெறுதல்

நீங்கள் பின்தொடரும் பாட்காஸ்ட்களில் புதிய எபிசோடுகள் சேர்க்கப்படும்போது அறிவிப்பைப் பெறுங்கள்.

  1. iPhoneஇல் பாட்காஸ்ட்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. முகப்பைத் தட்டவும்.

  3. “எனது கணக்கு” பட்டன் அல்லது உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டவும்.

  4. “அறிவிப்புகள்” என்பதைத் தட்டி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அறிவிப்புகளை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

நீங்கள் பின்தொடரும் ஒரு நிகழ்ச்சிக்கு பிளேபேக் வேகம் மற்றும் உரையாடலை மேம்படுத்துதல் அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்

  1. iPhoneஇல் பாட்காஸ்ட்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. “லைப்ரரி” என்பதைத் தட்டி, “நிகழ்ச்சிகள்” என்பதைத் தட்டி, ஒரு நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கவும். (தேடியோ உலாவியோ கூட நீங்கள் பின்தொடரும் நிகழ்ச்சியைக் கண்டறியலாம்.)

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “அமைப்புகள்” என்பதைத் தட்டி, கீழே ஸ்க்ரால் செய்து “வேகம் & ஆடியோ அட்ஜஸ்ட்மென்ட்கள்” என்பதற்குச் செல்லவும்.

  4. “இந்த நிகழ்ச்சிக்காகப் பிரத்தியேகமாக்கு” என்பதைத் தேர்வுசெய்து, பிளேபேக் வேகத்தைத் தேர்ந்தெடுக்கவும் மற்றும் “உரையாடலை மேம்படுத்துதல்” அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.