இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் கான்டாக்ட் கீ சரிபார்ப்பைப் பயன்படுத்துதல்

நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும் நபர்களுடன் மட்டுமே தொடர்புகொள்வதைச் சரிபார்க்க உதவும் தானியங்கு விழிப்பூட்டல்களைப் பெற நீங்கள் கான்டாக்ட் சரிபார்ப்பைப் பயன்படுத்தலாம். ஒருவருக்கொருவர் அடையாளங்களை மேலும் சரிபார்க்க, நீங்களும் உங்கள் தொடர்புகளும் ஒரே நேரத்தில் மெசேஜஸ் செயலியில் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய தனித்துவமான குறியீடுகளையும் உருவாக்கலாம். கூடுதலாக, உங்கள் பொதுச் சரிபார்ப்புக் குறியீட்டை சமூக ஊடகக் கணக்கில் பதிவிடுவதன் மூலம் பிறர் உங்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது இது நீங்கள்தான் என்பதை அவர்களால் உறுதிசெய்ய முடியும். மேலும் தொடர்புகள் செயலியில் பிறரின் குறியீடுகளை நீங்கள் சேமிக்கலாம்.

குறிப்பு: கான்டாக்ட் கீ சரிபார்ப்பு மிகவும் நூதன சைபர் தாக்குதல்களைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது; ஃபிஷிங், பிற வார்த்தை அடிப்படையிலான மோசடிகள் போன்ற மோசடிகளைத் தடுக்க இது வடிவமைக்கப்படவில்லை. கான்டாக்ட் கீ சரிபார்ப்பு மற்றும் சிக்கலைச் சரிசெய்தல் குறித்து மேலும் தெரிந்துகொள்ள, iMessage கான்டாக்ட் கீ சரிபார்ப்பு குறித்த விவரங்கள் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

தொடங்கும் முன்

கான்டாக்ட் கீ சரிபார்ப்பைப் பயன்படுத்த, பின்வருவனவற்றை உறுதிசெய்யவும்:

  • உங்கள் சாதனங்கள் பாஸ்கோடு அல்லது பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளன.

  • நீங்கள் ஒரே Apple கணக்கைப் பயன்படுத்தி iCloud மற்றும் iMessageஇல் உள்நுழைந்திருப்பதுடன் உங்கள் Apple கணக்கிற்கு இரு-காரணி அங்கீகாரத்தை ஆன் செய்துள்ளீர்கள்.

  • நீங்கள் சரிபார்க்க முயலும் நபர் உங்கள் தொடர்புகளில் உள்ளார்.

கான்டாக்ட் கீ சரிபார்ப்பை ஆன் செய்தல்

  1. அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > கான்டாக்ட் கீ சரிபார்ப்பு என்பதைத் தட்டவும்.

  2. “iMessageஇல் சரிபார்ப்பு” என்பதை ஆன் செய்து “தொடர்க” என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: கான்டாக்ட் கீ சரிபார்ப்பை ஆன் செய்தால், உங்களின் அனைத்து Apple சாதனங்களையும் இணக்கமான மென்பொருளுக்குப் புதுப்பிக்குமாறு உங்களிடம் கேட்கப்படும். புதுப்பிக்க முடியாத ஒரு சாதனம் உங்களிடம் இருந்தால், இந்த அம்சத்தை ஆன் செய்வதற்கு முன்பு அந்தச் சாதனத்தில் உள்ள iMessageஇல் இருந்து நீங்கள் வெளியேற வேண்டும்.

பொதுச் சரிபார்ப்புக் குறியீட்டைப் பகிர்தல்

உங்கள் பொதுச் சரிபார்ப்புக் குறியீட்டை நீங்கள் ஒரு மெசேஜில் பகிரலாம் அல்லது சமூக ஊடகக் கணக்கில் பதிவிடலாம், இதனால் மற்றவர்களால் உங்கள் அடையாளத்தை சரிபார்க்க முடியும்.

  1. அமைப்புகள்  > [உங்கள் பெயர்] > கான்டாக்ட் கீ சரிபார்ப்பு என்பதைத் தட்டவும்.

  2. “பொதுச் சரிபார்ப்புக் குறியீட்டைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

  3. உங்களின் பொதுச் சரிபார்ப்புக் குறியீட்டைப் பகிர “சரிபார்ப்புக் குறியீட்டை நகலெடு” என்பதைத் தட்டி “சரி” என்பதைத் தட்டிய பிறகு நீங்கள் குறியீட்டைப் பகிர விரும்பும் இடத்தில் அதை ஒட்டவும்.

வேறொருவரின் அடையாளத்தைச் சரிபார்க்க அவரின் பொதுச் சரிபார்ப்புக் குறியீட்டையும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் அவரது சமூக ஊடகச் சுயவிவரத்தில் உள்ள குறியீட்டுடன் பொருந்தாத பொதுச் சரிபார்ப்புக் குறியீட்டை உங்களுடன் பகிர்ந்தால் அவரது அடையாளத்தை உறுதிசெய்யாத வரை அவருக்கு மெசேஜ்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்.

மெசேஜஸில் சரிபார்ப்புக் குறியீடுகளை உருவாக்குதல்

அதிக அளவிலான பாதுகாப்பிற்கு, மெசேஜஸில் நீங்களும் உங்கள் தொடர்பும் சரிபார்ப்புக் குறியீட்டை உருவாக்கி தொடர்புகளில் அவரவர் பொதுச் சரிபார்ப்புக் குறியீட்டை ஒருவருக்கொருவர் சேமிக்கலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் ஒரே நேரத்தில் சரிபார்க்க விரும்பினால் அல்லது நீங்கள் பெற்ற பொதுச் சரிபார்ப்புக் குறியீடு உங்கள் தொடர்பு உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறியீட்டுடன் பொருந்தவில்லை என்றால் இது பயனுள்ளதாக இருக்கும்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடலின் மேற்புறத்தில் உள்ள நபரின் பெயரைத் தட்டி கீழ்ப்பகுதிக்கு ஸ்க்ரால் செய்து “தொடர்பைச் சரிபார்” என்பதைத் தட்டவும்.

    மற்றொரு நபர் அவரது சாதனத்தில் “தொடர்பைச் சரிபார்” என்பதைத் தட்டும்போது, தொடர்புச் சரிபார்ப்புக் குறியீடு காட்டப்படும்.

  3. இரண்டு சாதனங்களிலும் உள்ள சரிபார்ப்புக் குறியீடுகளை ஒப்பிட்டு, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • குறியீடுகள் பொருந்தினால்: “சரிபார்க்கப்பட்டதாகக் குறி” என்பதைத் தட்டி மற்றொரு நபரின் தொடர்பு கார்டில் சரிபார்ப்புக் குறியீட்டைச் சேர்க்க “புதுப்பி” என்பதைத் தட்டவும்.

    • குறியீடுகள் பொருந்தவில்லை என்றால்: நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும் நபருடன் நீங்கள் தொடர்புகொள்ளாமல் இருக்கலாம். “பொருந்தவில்லை” என்பதைத் தட்டி அந்த நபரின் அடையாளத்தை நீங்கள் சரிபார்க்கும் வரை அவருக்கு மெசேஜ்களை அனுப்புவதை நிறுத்தவும்.

நீங்கள் ஒரு தொடர்பைச் சரிபார்த்த பிறகு, மெசேஜஸில் அவர்களின் பெயருக்கு அடுத்ததாக ஒரு டிக்மார்க் காட்டப்படும். உரையாடல் விவரங்களில் அவற்றின் சரிபார்ப்பு நிலையை நீங்கள் சரிபார்க்கலாம் அல்லது தொடர்புகளில் அவற்றின் பொது சரிபார்ப்புக் குறியீட்டைக் கண்டறியலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.