இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் “Apple TV” செயலிக்கான அமைப்புகளை மாற்றுதல்

Apple TV செயலிக்கான ஸ்ட்ரீமிங் மற்றும் பதிவிறக்க அமைப்புகளை நீங்கள் சரிசெய்யலாம். பிரத்தியேகப் பரிந்துரைகளை உங்களுக்கு வழங்குவதற்காக நீங்கள் இதுவரை பார்த்தவை குறித்த தகவலை Apple TV செயலி பயன்படுத்தும் விதத்தையும் நீங்கள் மாற்றலாம். மேலும், Apple TV செயலியில் நேரலை ஸ்போர்ட்ஸ் ஸ்கோர்கள் மற்றும் “பார்ப்பதைத் தொடர்க” பட்டியலில் உள்ளவை உட்பட, எவை எல்லாம் காட்டப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம்.

ஸ்ட்ரீமிங் மற்றும் பதிவிறக்க விருப்பங்களை மாற்றுதல்

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி, “டிவி” என்பதைத் தட்டவும்.

  3. ஸ்ட்ரீமிங் விருப்பங்களைத் தேர்வுசெய்ய:

    • மொபைல் டேட்டாவைப் பயன்படுத்த: Wi-Fi இணைப்புகளுக்கான ஸ்ட்ரீமிங்கைக் கட்டுப்படுத்துவதை ஆஃப் செய்யவும்.

    • Wi-Fi: “உயர் தரம்” அல்லது “டேட்டா சேமிப்பு” விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

      உயர் தரத்திற்கு அதிவேக இணைய இணைப்பு தேவை, மேலும் அதிக டேட்டாவைப் பயன்படுத்துகிறது.

  4. பதிவிறக்க விருப்பங்களைத் தேர்வுசெய்ய:

    • மொபைல் டேட்டாவைப் பயன்படுத்த: Wi-Fi இணைப்புகளுக்கான பதிவிறக்கங்களைக் கட்டுப்படுத்துவதை ஆஃப் செய்யவும்.

    • Wi-Fi: “உயர் தரம்” அல்லது “விரைவுப் பதிவிறக்கங்கள்” விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

      உயர் தரத்தில் பதிவிறக்கப்படும் வேகம் குறையும், மேலும் அதிக டேட்டா பயன்பாடு இருக்கும்.

    • மொழிகள்: மொழியைத் தேர்வுசெய்யவும். சேர்க்கப்பட்ட ஒவ்வொரு ஆடியோ மொழியும் பதிவிறக்க அளவை அதிகரிக்கிறது. ஒரு மொழியை அகற்ற, நீங்கள் அகற்ற விரும்பும் மொழியில் இடதுபுறமாக ஸ்வைப் செய்து “நீக்கு” என்பதைத் தட்டவும்.

      இயல்புநிலை மொழி என்பது உங்கள் நாடு அல்லது வட்டாரத்திற்கான முதன்மை மொழியாகும். அணுகல்தன்மை அமைப்புகளில் நீங்கள் ஆடியோ விளக்கங்களை ஆன் செய்திருந்தால், ஆடியோ விளக்கங்களும் பதிவிறக்கப்படும்.

நீங்கள் இதுவரை பார்த்தவை பயன்படுத்தப்படும் விதத்தை மாற்றுதல்

இயல்புநிலையாக, உங்கள் iPhoneஇல் நீங்கள் பார்க்கும் வீடியோக்கள் அதே Apple கணக்கு மூலம் உள்நுழைந்துள்ள உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் விருப்பப் பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்யலாம்:

  • நீங்கள் இதுவரை பார்த்தவை குறித்த பதிவுகளை அழித்தல்: Apple TV செயலிக்குச் சென்று, “முகப்பு” என்பதைத் தட்டி, பின்னர் மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் படம் அல்லது முதலெழுத்துகளைத் தட்டவும். “தனியுரிமை & அணுகல்” என்பதைத் தட்டி, “இதுவரை பிளே செய்தவற்றை அழி” என்பதைத் தட்டவும்.

  • நீங்கள் இதுவரை பார்த்தவற்றின் அடிப்படையில் தனிப்பயனாக்குதல் அம்சங்களை ஆஃப் செய்தல்: அமைப்புகள்  செயலிக்குச் சென்று, “செயலிகள்” என்பதைத் தட்டி, “டிவி” என்பதைத் தட்டி, “இதுவரை பிளே செய்தவற்றைப் பயன்படுத்து” என்பதை ஆஃப் செய்யவும்.

“தானாக பிளே செய்தல்” அமைப்புகளை மாற்றுதல்

இயல்புநிலையாக, டிவி நிகழ்ச்சியின் ஓர் எபிசோடைப் பார்த்து முடிக்கும்போது, அடுத்த எபிசோடு தானாகவே பிளே செய்யப்படும். ஒரு தொடர், திரைப்படம் அல்லது விளையாட்டு நிகழ்வைப் பார்த்து முடிக்கும்போது, பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கம் தானாகவே பிளே செய்யப்படும். இந்த அமைப்புகளை நீங்கள் மாற்றலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Apple TV செயலிக்குச் செல்லவும்.

  2. “முகப்பு” என்பதைத் தட்டி, மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் படம் அல்லது முதலெழுத்துகளைத் தட்டி, பிறகு “பிளேபேக்” என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • அடுத்த எபிசோடைத் தானாக பிளே செய்ய: “அடுத்த எபிசோடை பிளே செய்” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

    • ஒரு தொடர், திரைப்படம் அல்லது விளையாட்டு நிகழ்ச்சியைப் பார்த்து முடித்த பிறகு, உங்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தைத் தானாகவே பிளே செய்ய: “பரிந்துரையை பிளே செய்” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

உங்கள் சாதன முன்னுரிமைகளை மாற்றுதல்

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி, “டிவி” என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • நேரலை ஸ்போர்ட்ஸ் ஸ்கோர்களைக் காட்ட அல்லது மறைக்க: “ஸ்போர்ட்ஸ் ஸ்கோர்களைக் காட்டு” என்பதை ஆஃப் செய்யவும்.

    • நீங்கள் இதுவரை பார்த்தவற்றை பிரத்தியேகப் பரிந்துரைகள் மற்றும் “பார்ப்பதைத் தொடர்க” வரிசைக்குப் பயன்படுத்த: இதுவரை பிளே செய்தவை குறித்த பதிவுகளைப் பயன்படுத்துவதை ஆன் செய்யவும்.

அனைத்து அம்சங்களும் உள்ளடக்கமும் எல்லா நாடுகளிலும் வட்டாரங்களிலும் கிடைக்காது.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.