இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் குழு புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண்டறிதல்

ஃபோட்டோஸ் செயலி, படங்கள் மற்றும் வீடியோக்களில் அடிக்கடி ஒன்றாகத் தோன்றும் நபர்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் குழுக்களை அடையாளம் கண்டறிந்து அவற்றை குழு தொகுப்புகளாக வரிசைப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் குடும்பம் அல்லது நண்பர்கள் குழுவினர் அடங்கிய பல படங்கள் உங்களிடம் இருந்தால், அந்த குழுக்களில் ஒவ்வொன்றிற்கும் ஃபோட்டோஸ் செயலி ஒரு தொகுப்பை உருவாக்கும்.

குழுவில் சேர்க்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்களுடன் பெயரிடப்பட்ட தொகுப்புகளின் பட்டியலைக் காட்டும் “குழுக்கள்”, ஃபோட்டோஸ் செயலியின் “நபர்கள் & செல்லப்பிராணிகள்” பிரிவில் திறந்துள்ளன.

குழு புகைப்படங்களையும் வீடியோக்களையும் கண்டறிதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “சேகரிப்புகள்” என்பதைத் தட்டி, “நபர்கள் & செல்லப்பிராணிகள்” என்பதைத் தட்டவும்.

  3. தேடிப்பார்ப்பதற்கு “குழுக்கள்” என்பதற்குக் கீழே உள்ள சேகரிப்புகளை ஸ்வைப் செய்யவும் அல்லது அவை அனைத்தையும் பார்க்க “குழுக்கள்” என்பதைத் தட்டவும்.

  4. ஒரு சேகரிப்பில் உள்ள அனைத்துப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்க்க அந்தக் குழுவைத் தேர்ந்தெடுக்கவும்.

    உதவிக்குறிப்பு: இந்தக் குழுவின் படங்களை மற்றவர்களுடன் சேர்ந்து பார்க்க “வரிசைப்படுத்து மற்றும் ஃபில்டர்” பட்டன்-ஐத் தட்டி, “விருப்பங்களைக் காட்டு” என்பதைத் தட்டி, “மற்ற நபர்கள்” என்பதைத் தட்டவும்.

குழுவின் புகைப்படங்களைப் பகிர, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “பகிர்” என்பதைத் தட்டவும்.

குழுச் சேகரிப்பை உருவாக்குதல்

“நபர்கள் & செல்லப்பிராணிகள்” சேகரிப்பில் இருந்து நபர்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் கலவையைக் கொண்ட குழுவை நீங்கள் உருவாக்கலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “சேகரிப்புகள்” என்பதைத் தட்டி, “நபர்கள் & செல்லப்பிராணிகள்” என்பதைத் தட்டவும்.

  3. குழுக்களின் வலதுபுறம் உள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டி, “புதிய குழுவை உருவாக்கு” என்பதைத் தட்டவும்.

  4. குழுவில் நீங்கள் சேர்க்க விரும்பும் நபர்கள் மற்றும் செல்லப்பிராணிகளைத் தேர்ந்தெடுத்து, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. விரும்பினால், குழுவிற்கான புதிய பெயரை உள்ளிடலாம் அல்லது குழுவில் இன்னும் நபர்களையும் செல்லப்பிராணிகளையும் சேர்க்கலாம்.

  6. “உருவாக்கு” என்பதைத் தட்டவும்.

குழுச் சேகரிப்பைத் திருத்துதல் அல்லது நீக்குதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “சேகரிப்புகள்” என்பதைத் தட்டி, “நபர்கள் & செல்லப்பிராணிகள்” என்பதைத் தட்டவும்.

  3. “குழுக்கள்” என்பதற்கு கீழே, நீங்கள் திருத்த விரும்பும் குழுவைத் தொட்டு பிடித்து, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • குழுவுக்கு மறுபெயரிட: “பெயரையும் நபர்களையும் திருத்து” என்பதைத் தட்டி, புதிய பெயரை உள்ளிட்டு, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

    • குழுவில் இருந்து ஒருவரை அகற்ற: “பெயரையும் நபர்களையும் திருத்து” என்பதைத் தட்டி, அவரது படத்தின் மேல் இடது மூலையில் உள்ள “அகற்று” பட்டன்-ஐத் தட்டவும்.

    • குழுவில் ஒருவரைச் சேர்க்க: “பெயரையும் நபர்களையும் திருத்து” என்பதைத் தட்டி “நபர்கள் & செல்லப்பிராணிகளைச் சேர்” என்பதைத் தட்டவும். சேர்க்க விரும்பும் நபரைத் தேர்ந்தெடுத்து “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

    • குழு புகைப்படத்தைத் திருத்த: “பெயரையும் நபர்களையும் திருத்து” என்பதைத் தட்டி, தற்போதைய குழுப் புகைப்படத்தின் கீழ் வலது மூலையில் உள்ள புகைப்பட ஐகானைத் தட்டவும். புதிய புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

    • குழுவை நீக்க: “குழுவை நீக்கு” என்பதைத் தட்டவும்.

குழுச் சேகரிப்புகளின் வரிசையை மாற்றுதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. “சேகரிப்புகள்” என்பதைத் தட்டி, “நபர்கள் & செல்லப்பிராணிகள்” என்பதைத் தட்டி, “குழுக்கள்” என்பதைத் தட்டவும்.

  3. ஒரு குழுவைத் தொட்டுப் பிடித்து, அதை ஒரு புதிய நிலைக்கு இழுக்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.