இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலியில், மாதவிடாய் சுழற்சி கணிப்புகளையும் இதுவரையான மாதவிடாய் சுழற்சி குறித்த தகவல்களையும் பார்வையிடுதல்

நீங்கள் உங்கள் மாதவிடாய் சுழற்சி குறித்த தகவலைப் பதிவுசெய்யும்போது உங்கள் அடுத்த மாதவிடாய் காலம் அல்லது கருவுறுதல் காலத்திற்கான முன்கணிக்கப்பட்ட தேதியைச் சரிபார்க்கலாம். உங்கள் அடுத்த மாதவிடாய் காலம் அல்லது கருவுறுதல் காலம் எப்போது என்பது குறித்த அறிவிப்புகளைப் பெறலாம், இதுவரையான மாதவிடாய் சுழற்சி குறித்த தகவல்கள் மேலும் பலவற்றை பார்க்கலாம்.

குறிப்பு: உங்கள் மாதவிடாய் மற்றும் கருவுற ஏற்ற காலம் பற்றிய கணிப்புகளை மேம்படுத்த Apple Watchஇல் இருந்து பெறப்படும் உடல்நலத் தரவுகளையும் உடல்நலம் செயலி பயன்படுத்தலாம். Apple Watch பயனர் வழிகாட்டியில் உள்ள Apple Watchஇல் சுழற்சிக் கண்காணிப்பு அம்சத்தைப் பயன்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் சுழற்சி டைம்லைனைப் பார்வையிடுதல்

கீழ் வலதுபுறம் உள்ள “தேடு” பட்டன்-ஐத் தட்டி, “சுழற்சிக் கண்காணிப்பு” என்பதைத் தட்டவும்.

திரையின் மேல்பகுதியில், பின்வரும் ஐகான்களை ஒரு டைம்லைன் காட்டும்.

ஐகான்

விளக்கம்

வெளிர் சிவப்பு வட்டம்

முன்கணிக்கப்பட்ட மாதவிடாய் நாள்.

வெளிர் நீல நீள்வட்டம்

உங்கள் கருவுறும் காலத்துக்கான முன்கணிக்கப்பட்ட நாள்.

வெளிர் ஊதா நீள்வட்டம்

ஓவுலேஷன் ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடும் ஒரு நாள் (Apple Watch Series 8 அல்லது அதற்குப் பிந்தைய மாடல் அல்லது Apple Watch Ultra மாடல் iPhone உடன் இணைக்கப்பட வேண்டும், இது எல்லா வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை).

ஒரு திடமான சிவப்பு வட்டம்

மாதவிடாய் காலத்தில் ஒரு நாளைப் பதிவுசெய்துள்ளீர்கள்.

ஊதா நிறப் புள்ளி

நீங்கள் தகவல்களைச் சேர்த்துள்ள ஒரு நாள் (உதாரணமாக, தலைவலி அல்லது வயிற்றுப் பிடிப்பு போன்ற தகவல்கள்).

வெவ்வேறு நாட்களைத் தேர்ந்தெடுக்க, டைம்லைனை ஸ்வைப் செய்யவும்.

உங்களின் கணிக்கப்பட்ட அடுத்த மாதவிடாய் காலத்திற்கான தேதிகளையும், நீங்கள் கடைசியாகப் பதிவுசெய்த மாதவிடாய் காலத்தையும் சரிபார்த்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழ் வலதுபுறம் உள்ள “தேடு” பட்டன்-ஐத் தட்டி, “சுழற்சிக் கண்காணிப்பு” என்பதைத் தட்டவும்.

  3. உங்கள் அடுத்த மாதவிடாய் காலம் எப்போது தொடங்கும் என்பதைப் பார்க்க “ஹைலைட்ஸ்” என்பதற்குச் செல்லவும்.

    நீங்கள் மதிப்பீட்டைப் பார்க்கவில்லை எனில், “ஹைலைட்ஸ்” என்பதற்கு அருகில் உள்ள “அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டவும்.

  4. உங்கள் கடந்த மாதவிடாய் காலத்தின் தேதியையும் உங்கள் வழக்கமான மாதவிடாய் சுழற்சியின் நீளத்தையும் பார்க்க “சுருக்கவிவரம்” என்பதற்கு ஸ்க்ரால் செய்யவும்.

மாதவிடாய் கணிப்பு காட்டப்படவில்லை எனில் விருப்பங்களில் “மாதவிடாய் கணிப்புகள்” ஆன் செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

உங்கள் சுழற்சி வரலாற்றைப் பார்வையிடுதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழ் வலதுபுறம் உள்ள “தேடு” பட்டன்-ஐத் தட்டி, “சுழற்சிக் கண்காணிப்பு” என்பதைத் தட்டவும்.

  3. கடந்த மூன்று மாதவிடாய் சுழற்சிகளின் சுருக்கவிவரத்தைப் பார்க்க, “உங்கள் மாதவிடாய் சுழற்சிகள்” என்பதற்குச் செல்லவும்.

  4. முந்தைய அனைத்துச் சுழற்சிகளின் சுருக்கங்களையும் பார்க்க, சுழற்சி வரலாற்றைத் தட்டவும்.

    உங்கள் மாதவிடாய் சுழற்சி வரலாறுக்கான PDFஐச் சேமிக்க அல்லது அனுப்ப, “PDFஐ எக்ஸ்போர்ட் செய்” என்பதைத் தட்டி, “பகிர்” பட்டன்-ஐத் தட்டி ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

  5. சுழற்சி பற்றிய விவரங்களைப் பார்க்க, அதைத் தட்டவும்.

    சுழற்சி குறித்த விவரங்களை மாற்ற, “திருத்து” என்பதைத் தட்டவும்.

    உங்கள் மாதவிடாய் சுழற்சி விவரங்களின் PDFஐச் சேமிக்க அல்லது அனுப்ப, “PDFஐ எக்ஸ்போர்ட் செய்” என்பதைத் தட்டி, “பகிர்” பட்டன்-ஐத் தட்டி ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் குறித்த அறிவிப்பை நீங்கள் பெறும் சமயம்

உங்கள் பதிவுசெய்யப்பட்ட மாதவிடாய் சுழற்சி வரலாறு சாத்தியமான சுழற்சி மாற்றங்களைக் காட்டும்போது நீங்கள் ஒரு அறிவிப்பைப் பெறலாம். ஒழுங்கற்ற மாதவிடாய், அடிக்கடி நிகழாத மாதவிடாய், நீடித்த மாதவிடாய், தொடர்ச்சியான இரத்தப்படுதல் ஆகியவை மாதவிடாய் சுழற்சியின் மாற்றங்களில் பொதுவாக காணப்படும். இதற்கு அடிப்படையில் ஒரு நோய் காரணமாக இருக்கலாம் அல்லது பிற காரணிகள் இருக்கலாம்.

நீங்கள் அறிவிப்பைப் பெறும்போது, உங்கள் பதிவுசெய்யப்பட்ட சுழற்சி வரலாற்றை சரிபார்க்க பின்வருவனவற்றைச் செய்யவும்:

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. சாத்தியமான மாதவிடாய்ச் சுழற்சி மாற்ற அறிவிப்பில் “சுழற்சி வரலாற்றை மறுஆய்வு செய்யவும்” என்பதைத் தட்டவும்.

  3. உங்கள் மாதவிடாய் சுழற்சி வரலாற்றை உறுதிப்படுத்த, சேர்க்க அல்லது திருத்த திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

மாதவிடாய் சுழற்சியில் ஒரு மாற்றம் கண்டறியப்பட்டால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கும் திரை.

உங்கள் சுழற்சியின் சுருக்கவிவரத்தைக் காட்டுதல்

கடந்த மாதவிடாய், வழக்கமான மாதவிடாய் காலத்தின் நீளம், வழக்கமான சுழற்சியின் நீளம், நடப்புக் காரணிகள் மேலும் பலவற்றின் சுருக்கவிவரத்தை நீங்கள் பார்க்கலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. “தேடு” பட்டன்-ஐத் தட்டி, “சுழற்சிக் கண்காணிப்பு” என்பதைத் தட்டவும்.

  3. கீழ்நோக்கி ஸ்க்ரால் செய்து “சுருக்கவிவரம்” என்பதைத் தட்டவும்.

  4. உங்கள் கடந்த ஆண்டுத் தரவுகளின் புள்ளிவிவரங்களைப் பார்க்க ஸ்க்ரால் செய்யவும்.

சுழற்சிக் கண்காணிப்பு அறிவிப்புகள், சுழற்சி முன்கணிப்பு டிஸ்ப்ளேக்கள் மற்றும் பிற விருப்பங்களை மாற்றுதல்

மாதவிடாய், கருவுறுதல் மற்றும் சுழற்சி மாற்றம் குறித்த அறிவிப்புகள், மாதவிடாய் மற்றும் கருவுறுதல் கணிப்புகளை மறைத்தல் போன்ற பலவற்றை ஆஃப் செய்யலாம். நீங்கள் இவற்றை மீண்டும் எப்போது வேண்டுமானாலும் ஆன் செய்யலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. கீழ் வலதுபுறம் உள்ள “தேடு” பட்டன்-ஐத் தட்டி, “சுழற்சிக் கண்காணிப்பு” என்பதைத் தட்டவும்.

  3. கீழே ஸ்க்ரால் செய்து, “விருப்பங்கள்” என்பதைத் தட்டி, விருப்பங்களை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

உங்கள் உடல்நலத் தரவுகள் மற்றும் தனியுரிமை பற்றிய தகவல்கள்

உடல்நலம் செயலியில் நீங்கள் உங்களைப் பற்றிச் சேர்க்கும் தகவல்களை நீங்கள் மட்டுமே பயன்படுத்தவும் பகிரவும் முடியும். “உடல்நலம்” செயலியில் எந்தத் தகவல் சேமிக்கப்பட வேண்டும் என்பதையும், உங்கள் தரவை யார் அணுகலாம் என்பதையும் நீங்கள் தீர்மானிக்கலாம்.

Face ID, Touch ID அல்லது பாஸ்கோடு மூலம் உங்கள் iPhone லாக் செய்யப்பட்டிருக்கும்போது, உங்கள் மருத்துவ ஐடியைத் தவிர, உடல்நலம் செயலியில் உள்ள உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் தரவுகள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டு இருக்கும். iCloud உடன் ஒத்திசைக்கப்பட்ட உடல்நலத் தரவுகள் Apple சர்வர்களில் பகிரப்படும்போதும் அப்படியே இருக்கும்போதும் என்கிரிப்ட் செய்யப்படும். நீங்கள் இயல்புநிலையில் இரு-காரணி அங்கீகாரம் மற்றும் பாஸ்கோடுடன் iOS, iPadOS, watchOS (சுழற்சிக் கண்காணிப்புக்காக iPad மற்றும் Apple Watchஐப் பயன்படுத்தினால்) பதிப்பைப் பயன்படுத்தினால், உங்கள் உடல்நலம் மற்றும் செயல்பாட்டுத் தரவு Appleஆல் படிக்கமுடியாத வகையில் சேமிக்கப்படும்.

இதன் பொருள் என்னவென்றால், நீங்கள் சுழற்சிக் கண்காணிப்பு அம்சத்தையும் இரு-காரணி அங்கீகாரத்தையும் பயன்படுத்தும்போது, iCloud உடன் ஒத்திசைக்கப்பட்ட உங்கள் உடல்நலத் தரவு முழுமையாக என்கிரிப்ட் செய்யப்படும். Appleஇல் தரவை டீகிரிப்ட் செய்வதற்கான கீ இல்லை என்பதால் அதனால் அதைப் படிக்க முடியாது.

*ரெட்ரோஸ்பெக்டிவ் ஓவுலேஷன் மதிப்பீட்டு அம்சத்தின் கிடைக்கும் தன்மை குறித்த தகவல்களுக்கு, watchOS அம்சம் கிடைக்கும் தன்மை என்பதைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.