இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உள்ள உடல்நலம் செயலியில் உங்கள் உடல்நல விவரங்களை நிரப்புதல்

உங்கள் அனுபவத்தைத் தனிபயனாக்க, உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம், இரத்த வகை மற்றும் பிற அடிப்படைத் தகவல்களை “உடல்நல விவரங்கள்” பிரிவில் சேர்க்கலாம். உங்களுக்கு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் முதலுதவிக் குழுவினருக்கும் பிறருக்கும் உதவியாக உங்களின் மருத்துவ நிலைமைகள், எடுத்துக்கொள்ளும் மருந்துகள், ஒவ்வாமை, இரத்த வகை, அவசரகாலத் தொடர்புகள் மற்றும் பல தகவல்களைக் கொண்ட மருத்துவ ஐடியை உருவாக்கலாம். “உடல்நலம்” செயலியின் உதவியுடன் உங்கள் உடல்நலத்தைச் சிறப்பாக நிர்வகிக்க, உடல்நலச் சரிபார்ப்புப் பட்டியலை அவ்வப்போது சரிபார்க்கவும்.

“உடல்நல விவரங்கள்” திரையில் விவரங்களை நிரப்புதல்

நீங்கள் முதலில் “உடல்நலம்” செயலியை திறக்கும்போது, உங்களைப் பற்றிய அடிப்படை உடல்நலத் தகவல்களை வழங்கும்படி கேட்கப்படுவீர்கள். கேட்கப்பட்ட அனைத்துத் தகவல்களையும் நீங்கள் அளிக்கவில்லை எனில், “உடல்நல விவரங்கள்” திரையில் விவரங்களைப் பிறகு சேர்க்கலாம்.

  1. iPhoneஇல் உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. “சுருக்கவிவரம்” என்பதைத் தட்டி மேல் வலதுபுறம் உள்ள உங்கள் படம் அல்லது முதலெழுத்துக்களைத் தட்டவும்.

  3. “உடல்நல விவரங்கள்” என்பதைத் தட்டி, “திருத்து” என்பதைத் தட்டவும்.

    பெயர், பிறந்த தேதி, இரத்த வகை மற்றும் பிற தகவல்களுக்கான புலங்கள் அடங்கிய “உடல்நல விவரங்கள்” திரை.
  4. மாற்ற, புலத்தில் தட்டவும்.

  5. நிறைவுசெய்த பிறகு, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டி, கீழ்நோக்கி ஸ்வைப் செய்து வெளியேறவும்.

மருத்துவ ஐடியை உருவாக்குதல்

உங்கள் iPhone லாக் செய்யப்பட்டிருந்தாலும், முதலில் பதிலளிப்பவர்களும் மற்றவர்களும் உங்களைப் பற்றிய முக்கியமான மருத்துவத் தகவல்களை உங்கள் மருத்துவ ஐடியில் பார்க்கலாம். உங்கள் மருத்துவ ஐடியை அமைத்துக் காட்சிப்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

பிறந்த தேதி, எடுத்துக்கொள்ளும் மருந்துகள், ஒவ்வாமை, அவசரகாலத் தொடர்புகள், மருத்துவ நிலைமைகள் உள்ளிட்ட தகவல்களைக் கொண்ட மருத்துவ ஐடி திரை.

உங்கள் உடல்நலச் சரிபார்ப்புப் பட்டியலைச் சரிபார்த்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள உடல்நலம் செயலிக்குச் செல்லவும்.

  2. “சுருக்கவிவரம்” என்பதைத் தட்டி மேல் வலதுபுறம் உள்ள உங்கள் படம் அல்லது முதலெழுத்துக்களைத் தட்டவும்.

  3. உடல்நலச் சரிபார்ப்புப் பட்டியலைத் தட்டவும்.

  4. பட்டியலில் உள்ள ஒன்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள அல்லது அதை ஆன் செய்ய, அதைத் தட்டவும்.

  5. நிறைவுசெய்த பிறகு, “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.